பாதுகாப்பு செய்திகள்
நாராஹென்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்தின் நாளாந்த பணிகளை முன்னெடுக்கும் சிவில் பாதுகாப்பு படை
மொத்த விற்பனை பொருளாதார மையங்களை மீள திறந்து வைக்கும் செயல்முறைக்கு அமைவாக பொதுமக்கள் நலன்கருதி நாராஹென்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்தின் நாளாந்த பணிகளை மீள ஆரம்பிக்கும் செயற்பாடுகள் சிவில் பாதுகாப்பு படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தீப்பற்றிய மீன்பிடி படகு பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டது
தெற்கு கடற்பரப்பில் மீன்பிடி படகு ஒன்றில் ஏற்பட்ட தீ இலங்கை கடற்படையினர் அடைக்கப்பட்டு அப்படகு பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டது.
5711 கிலோ உலர் மஞ்சள் கடற் படையினரால் கைப்பற்றப்பட்டது
கடற் படையினரால் நாட்டின் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 5711 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
வைரஸ் தொற்று குணமடைந்த 537 பேர் வைத்தியசாலையிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக வைரஸ் தொற்றுக்குள்ளான 449 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களின் 445 பேர் உள் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய நான்கு பேரும் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த இலங்கை பிரஜைகள் எனவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளுடன் 40 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது
சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 2186 கடலட்டைகளுடன் 40 சந்தேகநபர்கள் வடமத்திய மற்றும் வடமேல் கடற்படை கட்டளையகங்களினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.
நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம்
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரச ஆதரவுடன் மஞ்சள் பயிர்ச்செய்கை திட்டம் இராணுவத்தினரால் ஆரம்பிப்பு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள உலர்ந்த மஞ்சளுக்கான அதிகரித்த கேள்வியினை ஈடுசெய்யும் வகையில் இராணுவத்தின் விவசாயம் மற்றும் கால்நடை திணைக்களத்தினால் அம்பலாங்கொடையில் அமைந்துள்ள இராணுவத்தினரின் பயிர்ச்செய்கை காணியில் மஞ்சள் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
திரு ரவீநாத ஆரியசின்ஹா பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
அமெரிக்கா வாஷிங்டன் டீசி நகரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தின் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திரு.
ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டாலும் சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களை நெருக்கமாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு
ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டாலும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களை நெருக்கமாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஐந்து கொரோனா மரணங்கள் நேற்று பதிவாகியது
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் ஐந்து பேர் நேற்றைய தினம் உயிரிழந்ததை அடுத்து நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
63 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
வெற்றிலைக்கேணி கடற் பிரதேசத்தில் கடற் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 63 மில்லியன் ரூபா பெறுமதியான 213 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பொது இடங்களை தொற்று நீக்கம் செய்யும் பணிகள் படையினரால் முன்னெடுப்பு
முல்லைத்தீவில் கொரோனா வைரஸ் பரவல் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள பொதுவிடங்களில் ஆபத்தினை குறைக்கும் வகையில் 64 வது படைப்பிரிவின் படை வீரர்களினால் தொற்று நீக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
நோயாளிகளுக்கு தபால் மூலம் மருந்துகளைஅனுப்பி வைக்கும் திட்டம் இன்று ஆரம்பம் : சுகாதார அமைச்சு
நாடு முழுவதிலும் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் வழக்கமாக சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கான மருந்து பொருட்களை இன்று முதல் அமலாகும் வரையில் தபால் மூலம் விநியோகிக்கும் பொறிமுறையை தபால் திணைக்களத்துடன் இணைந்து சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய விமானப் படைத்தளபதி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (நவம்பர், 04) சந்தித்தார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தினால் துரித அழைப்புக்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்
கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் மற்றும் வழங்கும் செயற்பாடுகளை ம
இலகுபடுத்துவதற்காக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தினால் துரித அழைப்புக்கான தொலைபேசி இலக்கங்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.