--> -->
Tamil
அம்பாறை மாவட்டத்தில் உள்ள தொல்பொருள் தளங்களில் உள்ளடங்கும் புராதன பௌத்த விகாரையான தீக்கவாப்பி ஸ்தூபத்தின் புனர்நிர்மானப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு தீக்கவாப்பி நம்பிக்கை நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 12 மிமீ சுடுகுழல் கொண்ட துப்பாக்கியுடன் யக்கலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
6.7 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 466,100 ரூபா பணம் வைத்திருந்த இரு பெண்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் நேற்று (28) கைது செய்யப்பட்டனர்.
டந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 12 பேர் பூரண குணமடைந்ததையடுத்து வைரஸ் தொற்றிலிருது குணமடைந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 2, 842ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பட்டு சபையினால் இடுகம கொரோனா நிதியத்திற்கு இன்று (28) ரூபா 250,000 அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
வீசா காலாவதியான நிலையில் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 13 பேர் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
மனித உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தும் பேரனர்த்தங்களை முன்கூட்டியே கண்டறியும் புதிய முறைமை ஒன்றினை செயல்படுத்தவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
துப்பாக்கி மற்றும் வெற்று துப்பாக்கி ரவைகளுடன் 42 வயது பெண்ணொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை தங்கொட்டுவ, லிஹிரிய கம பிரதேசத்தில் இடம்பெற்றது.
கற்பிட்டி பிரதேசத்தில் லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 1,000 கிலோகிராம் மஞ்சள் பொதிகளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியதை அடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2, 816ஆக (25) உயர்வடைந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் பல மாதங்களாக சிக்கித்தவித்த 275 இலங்கையர்கள் இன்று (26) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளனர்.
‘கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் பிரதேசங்களை முகாமைத்துவம் செய்தல் தொடர்பாக உருவாக்கப்பட்ட 12 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணிக்கு புதிதாக மேலும் நான்குபேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விஷேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (24) வெளியிடப்பட்டுள்ளது.