--> -->
கடந்த காலங்களில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட நில ஆக்ரமிப்பினை தடுத்து நிறுத்துதல் மற்றும் மாவட்ட, பிரதேச மட்டங்களில் கவனத்தில் கொள்ளப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்தல் என்பன தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
Tamil
ஜூன் மாதம் 10ஆம் திகதியிலிருந்து இன்று வரையான கடந்த இரண்டு மாதங்களுக்குள் சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், 21 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம் / புனர்வாழ்வு மற்றும் திறன் அபிவிருத்தி) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
யுத்தத்தின் போது உயிரிழந்த , காயமடைந்த மற்றும் காணாமல் போன கடற்படை வீரர்களின் குடும்பங்கள் அத்துடன் ஓய்வு பெற்ற மற்றும் சேவையிலிருக்கும் கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் மாதாந்தம் மருந்துகள் விநியோகிக்கும் புதிய முறை ஒன்றினை இலங்கை கடற்படை இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.
அம்பலாங்கொடையின் படபாபண்டிமுள்ள பகுதியல் சுமார் 200 மில்லியன் பெறுமதியான 12 கிலோ மெத்திலினெடோக்ஸிமெதாம்பேட்டமைன் (எம் டி எம் ஏ ) ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அண்மையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் (இன்ஹேலர்களைப்) உட்சுவாசக்கருவிகளை பயன்படுத்தி போதைப்பொருள் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இன்று (16) தெரிவித்தார்.
துபாயிலிருந்து 420 இலங்கையர்கள் இன்றைய தினம் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 2528 விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.
நாட்டின் அபிவிருத்திற்கு தேசிய பாதுகாப்பு மிக முக்கியமான ஒன்றாக காணப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து மேலும் 12 பேர் வீடுதிரும்பியதை அடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை இன்று (ஆகஸ்ட் 14) 2,658 ஆக அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு செயலாளராக மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் மீண்டும் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் வலசமுள்ள மடகன்கொட பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறுந்தூர துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள் மற்றும் ஆயுதங்களுக்கு பயன்படுத்தும் உபகரணங்களை சட்டவிரோதமான முறையில் தயாரிக்கும் சிறு தொழிற்சாலை ஒன்றை முற்றுகையிட்டுள்ளதுடன், அதன் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் எட்டுப்பேர் வைத்திய சாலைகளில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியதை தொடர்ந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2646 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கடல்மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் 6,381 கிலோ மஞ்சளினை நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முயற்சித்த 13 சந்தேக நபர்களை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.
பருத்தித்துறை கடல் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 275 கிலோ கிராமிற்கு மேற்பட்ட கேரள கஞ்சா கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டது.
ஹாலி-எல, உடுவர பிரதேசத்தில் தொல் பொருட்களை தோண்டி எடுப்பதற்கு முயற்சித்த ஐந்து சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர். ஹாலி-எல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பாதுகாப்பு அமைச்சினை தனது பொறுப்பின் கீழ் வைத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவினை இராஜாங்க அமைச்சராக நியமித்துள்ளார்.
முப்பத்தைந்து அரச நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இவ்வாரம் வெளியிடப்பட்டுள்ளது.