--> -->
துபாயிலிருந்து 420 இலங்கையர்கள் இன்றைய தினம் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 2528 விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.
Tamil
நாட்டின் அபிவிருத்திற்கு தேசிய பாதுகாப்பு மிக முக்கியமான ஒன்றாக காணப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து மேலும் 12 பேர் வீடுதிரும்பியதை அடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை இன்று (ஆகஸ்ட் 14) 2,658 ஆக அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு செயலாளராக மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் மீண்டும் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் வலசமுள்ள மடகன்கொட பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறுந்தூர துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள் மற்றும் ஆயுதங்களுக்கு பயன்படுத்தும் உபகரணங்களை சட்டவிரோதமான முறையில் தயாரிக்கும் சிறு தொழிற்சாலை ஒன்றை முற்றுகையிட்டுள்ளதுடன், அதன் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் எட்டுப்பேர் வைத்திய சாலைகளில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியதை தொடர்ந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2646 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கடல்மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் 6,381 கிலோ மஞ்சளினை நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முயற்சித்த 13 சந்தேக நபர்களை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.
பருத்தித்துறை கடல் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 275 கிலோ கிராமிற்கு மேற்பட்ட கேரள கஞ்சா கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டது.
ஹாலி-எல, உடுவர பிரதேசத்தில் தொல் பொருட்களை தோண்டி எடுப்பதற்கு முயற்சித்த ஐந்து சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர். ஹாலி-எல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பாதுகாப்பு அமைச்சினை தனது பொறுப்பின் கீழ் வைத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவினை இராஜாங்க அமைச்சராக நியமித்துள்ளார்.
முப்பத்தைந்து அரச நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இவ்வாரம் வெளியிடப்பட்டுள்ளது.
நுவரெலிய,மெளஸாகல, மோகினி எல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக தடைப்பட்ட போக்குவரத்து தடைகளை அகற்றும் பணிகளில் இலங்கை இராணுவத்தின் 19 வது தேசிய பாதுகாப்பு படைப் பிரிவு வீரர்கள் ஈடுபட்டனர்.
பேஸ்புக் நண்பர்களின் விருந்துபசார நிகழ்வு ஒன்றில் போதைப்பொருள் பாவித்ததன் பேரில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஐந்து பெண்கள் உட்பட 20 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 2,579 ஆக அதிகரித்துள்ளது.