Tamil
புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும். புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, தேசம் உலகம் முன்னேற முடியும். புதிய சிந்தனைகளினாலேயே புத்தாக்கம் பிறக்கும்.
முல்லைத்தீவில் புதிதாக நிறுவப்பட்ட தேசிய மாணவ படையணியின் இரண்டாவது பயிற்சி நிலையத்தின் உத்தியோகபூர்வ திறப்பு விழா (ஏப்ரல் 07) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களின் தலைமையில் மகா சங்கத்தினர் உட்பட இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத தலைவர்களின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் இடம்பெற்றது.
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்து விளங்கிய இரண்டு மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு 2024 ஏப்ரல் 5 ஆம் திகதி கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் விழா நடைபெற்றது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாக் காலம் பூநகரினில் 55 வது காலாட் படைப்பிரிவில் 05 ஏப்ரல் 2024 அன்று நடைப்பெற்றது. யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் அறிவுறுத்தல் மற்றும் 55 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டலில் 552 வது காலாட் பிரிகேட் படைப்பிரிவினால் இலங்கை பொலிஸ் – பூநகரி, பிரதேச செயலகம் - பூநகரி மற்றும் வர்த்தக சமூகம் - பூநகரி ஆகியோருடன் இணைந்து இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
சேவையில் இருந்து ஓய்வுபெற்ற மற்றும் மருத்துவ காரணங்களுக்காக ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பங்குபற்றும் நிகழ்வு ஒன்று வன்னி பாதுகாப்புப் படையினால் சனிக்கிழமை (ஏப்ரல் 06) இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் ரெஜிமென்ட் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான துருக்கிய தூதுவர் அதிமேதகு டெமெட் செகெர்சியோகுளு இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் (UNIFIL) உள்ள இலங்கை படை பாதுகாப்பு குழுவிற்கு (SLFPC) 125 பேரைக் கொண்ட இலங்கை இராணுவத்தின் 15வது குழு புதன்கிழமை (ஏப்ரல் 03) ஐ.நா பணிக்காக நாட்டை விட்டு வெளியேறியதாக இலங்கை இராணுவம் ஊடகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகப் படையினர் மனித நலனில் அக்கறை காட்டி வரணி பிரதேசத்தில் உள்ள ஆதரவற்ற குடும்பங்களுக்கு இரண்டு புதிய வீடுகளை அமைத்துக் கொடுத்தனர். புதிய வீடுகள் 02 ஏப்ரல் 2024 அன்று பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
களுத்துறையில் உள்ள அனர்த்த முகாமைத்துவக் குழு உறுப்பினர்களிடையே பேரிடர் அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேம்படுத்தும் செயலமர்வு அண்மையில் இலங்கை கடற்படையினரால் நடாத்தப்பட்டது. இந்த அவசரகால பதில், அடிப்படை முதலுதவி மற்றும் உயிர்காக்கும் செயலமர்வு களுத்துறையில் உள்ள விரைவு நடவடிக்கை படகு அணி (RABS) பயிற்சி அலகு (RRTA) மற்றும் களுத்துறையில் உள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு (DDMCU) ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் களுத்துறை கடற்கரையில் நடைபெற்றது.
நாட்டில் மனித ஆட்கடத்தலை இல்லாதொழிப்பதில் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வரும் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணி, அதன் அடையாளத்தை வலுப்படுத்தும் நோக்கில் அதன் அனைத்து பங்குதாரர்களின் பங்களிப்புடன் இன்று (ஏப்ரல் 03) பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.