--> -->
Tamil
அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட சீனாவிற்கும் இலங்கைக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவு, மேலும் வலுவடைந்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
பூச மற்றும் கல்பிட்டிய கடற்படை தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 21 பேர் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தம்ரோ நிறுவனம் ரூபா ஒரு மில்லியனை தேசிய பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தெற்கு களுத்துறை மகாஹீனிடிங்கள பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 4,000 லீட்டர் எதனோல் ரக சட்டவிரோத போதைபொருட்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (ஜூலை 29) கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்ப எதிர்பார்த்திருக்கும் இலங்கை பிரஜைகளை நாட்டிற்கு மீள அழைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைய, ஜூலை 31, ஆகஸ்ட் 01ஆம் திகதிகளில் டுபாய் மற்றும் அபுதாபி நாடுகளில் இருந்து 275 பேர் கொண்ட இரண்டு குழுக்களை உள்ளடக்கிய இலங்கைப் பிரஜைகளுடன் இரு விமானங்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதியின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் அட்மிரல் (ஒய்வு) ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
பமுனுகம பகுதியில் தனியார் கம்பனி ஒன்றின் எதனோலினை கொண்டு சென்ற கலால் திணைக்களத்தில் சேவையாற்றும் சார்ஜென்ட் ஒருவர் பொலிஸாரினால் நேற்று (ஜூலை 28) கைது செய்யப்பட்டுள்ளார்.
வன்னியில் இலங்கை விமானப்படையினரால் முகாமைத்துவம் செய்யப்படும் தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட165 பேர் இன்று காலை (ஜூலை, 29) வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இடமாற்றம் பெற்றுச்செல்லும் மற்றும் பணியில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் பாதுகாப்பு அமைச்சில் சேவையாற்றிய உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன இன்று (28) இடம்பெற்ற நிகழ்வில் பரிசில்களை வழங்கி வைத்தார்.
பொதுமக்கள் பொலிசாருக்கு இலகுவாக தகவல்களை வழங்குவதற்காக துரித அழைப்பு தொலைபேசி இலக்கங்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைநகல் இலக்கம் என்பனவற்றை பொலிசார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்கமைய "1997" மற்றும் "1917" ஆகிய இரண்டு துரித அழைப்பு தொலைபேசி இலக்கங்கள், இதனோடிணைந்த மின்னஞ்சல் முகவரிகள் இரண்டு மற்றும் ஒரு தொலைநகல் இலக்கம் என்பன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை மற்றும் மாலை தீவு நாடுகளுக்கான ரஷ்ய தூதுவர் யூரி மாதரி பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவை இன்று (ஜுலை, 28) இன்று சந்திதித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன். விகாஸ் சூட் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவை இன்று சந்தித்தார். ( ஜுலை 28 )
அண்மையில் (ஜூலை 25) யாழ் சித்தங்கேணிப்பகுதியில் ‘நல்லிணக்க மையம்’ ஒன்று கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் மோசடியாளர்களுக்கு உதவியமை தொடர்பில் கொழும்பு சிறைச்சாலையில் பணிபுரியும் சார்ஜன் ஒருவர் பொலிஸாரினால் நேற்று (ஜூலை 27) கைது செய்யப்பட்டுள்ளார்.
"அனைத்து விதமான துஷ்பிரயோகங்களில் இருந்தும் சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு தேவையான பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டியது அவசியமாகும்" என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.