--> -->
Tamil
மின்தடை காரணமாக ஆழ்கடலில் தத்தளித்து கொண்டிருந்த கென்ய நாட்டு கப்பல் ஒன்றை இலங்கை கடற்படையின் சிந்துறல கப்பல் இன்று (24) மீட்டுள்ளது. இக்கப்பல் இலங்கையின் காலி கடற்பரப்பிலிருந்து சுமார் 170 கடல் மைல் தொலைவில் (306 கிலோமீட்டர்) வைத்து மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
இறுதியாக 17 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியதை அடுத்து, குணமடைந்து வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 2094 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயாளர் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் 'இடுகம' கொவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,511 மில்லியனையும் தாண்டியுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும் கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுத்ததும் செயற்பாடுகளிலும் இராணுவ மருத்துவ குழுக்கள் முழு அர்ப்பணிப்புடன் அச்சமின்றி அரசுக்கு சிறந்த ஒத்துழைப்புக்களை வழங்கியதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
200 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுள் வைத்திருந்த நன்கு பெண்கள் மற்றும் கலால் திணைக்கள அதிகாரி ஒருவர் உட்பட எட்டுப்பேரை பொலிஸார் இன்று (ஜூலை 22) புத்தளப் பகுதியில் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்வதில் இருந்து தப்பிக்கும் வகையில் வெளிநாடுகளில் அடைக்கலம் கோரியுள்ள பதின்மூன்று பாதாள உலக குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இலங்கை பொலிஸ் திணைக்களம் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை கோரியுள்ளனர்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையில் கல்வி, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்களில் பரஸ்பர நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு இராஜதந்திர உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு என்பன நாளுக்கு நாள் வலுவடைந்து செல்வதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புக்களில் காற்றின் வேகமானது மணிக்கு 40 - 50 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொலிசாரினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1,630 சந்தேகநபர்கள் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்துடன் இணைந்து காங்கேசன்துறை துறைமுக வளாகத்தில் மரமுந்திரிகை நடும் திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இதன்பிரகாரம் வடக்கு கடற்படை கட்டளையக்த்தினால் முதல் கட்டமாக 100 மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன.
வலஸ்முள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் ஒரு தொகை இராணுவ சீருடைகள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிசர கடற்படை முகாமில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த கடற்படை வீரர்கள் மூவரும் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அனைத்து கடற்படை வீரர்களும் குணமடைந்துள்ளதாகவும் இதற்கமைய கடற்படைக்குள் காணப்பட்ட வைரஸ் தொற்று முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் ஆகியவற்றில் பயணப்பொதிகளை பரீட்சிக்கும் வழிமுறைகள், நவீன தொழிநுட்பத்திற்கமைய மேம்படுத்தப்படவுள்ளதாக இலங்கை சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த 48 மணித்தியாலங்களில் குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து நாடு தழுவிய சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதன்போது பாரியளவிளான குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த நான்கு பிரதான சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
மற்றுமொரு வெற்றிகரமான ஆராய்ச்சித் திட்டத்தை நிறைவு செய்துள்ள பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையம் அண்மையில் இலங்கை இராணுவத்தின் விசேட படையணிக்காக 'ப்ளூ கன்' உற்பத்தி முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டின் வளிமண்டலத்தில் நிலவும் தாழமுக்கம் காரணமாக மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.