--> -->
அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார். நீதிமன்றத்திற்கு வெளியே ஊடகவியலளர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டு தொடர்பில் முழுமையானதும் நடுநிலையானதுமான ஒரு விசாரணையினை முன்னெடுக்குமாறே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இரண்டு டீ -56 ரக துப்பாக்கிகளுடன் கடந்த இரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பொய்யான மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் மற்றும் புள்ளிவிபரங்களை பரப்புவர்களுக்கு எதிராக பொலிஸார் கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
பலாலியில் இலங்கை விமானப்படையின் முகாமைத்துவத்தின் கீழ் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவுசெய்த 100 பேர் குணமடைந்து இன்று (ஜூலை 11) தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
Tamil
இங்கிலாந்தில் சிக்கித்தவித்த மேலும் 234 பேர் கொண்ட மற்றுமொரு குழுவினர் இலங்கை எயார்லைன்ஸ் விமானம் மூலம் இன்று (ஜூலை 11) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
ரஷ்யா மற்றும் துபாய் நாடுகளிலிருந்து இலங்கையர்கள் சிலர் இன்றைய தினம் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 226 மற்றும் UL 1206
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,753 அடி (534 மீட்டர் ) உயரமான மலைக்குன்றான தொப்பிகல என அறியப்படும் பரோன்ஸ் கெப் மற்றும் குடும்பிமலை இலங்கை இராணுவ வீரர்களால் கைப்பற்றப்பற்று இன்றுடன் பதின்மூன்று வருடங்களாகின்றன. கிழக்கு பிராந்தியத்தில் இப்பகுதி தமிழீழ விடுதலை புலிகளின் கோட்டையாக விளங்கியமை குறிபிடத்தக்கது.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலுள்ள பணியாளர்கள் உட்பட அங்குள்ள ஏனைய 338 பேருக்கு நேற்று (ஜூலை, 09) மேற்கொள்ளப்பட்ட பீ சீ ஆர் பரிசோதனைகளின் போது 196பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று (10) உறுதி செய்யப்பட்டுள்ளது.
போதைப் பொருள் வியாபாரியும் பாதாள உலக குற்றவாளியுமான ரோஹன பிரதீப் என அழைக்கப்படும் “களு மல்லி” என்பவரை நேற்று மாலை (ஜூலை, 09) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வெலிசர கடற்படை வைத்தியசாலை 77 நாட்களுக்கு பின்னர் வெளிநோயாளர்கள் சிகிச்சைகளுக்காக இன்று (ஜூலை 10) மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன் கொமான்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்.
இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் கடற்பரப்பில் காணப்படும் தகவல்கள் அடங்கிய கடல்சார் முதல் ஆவணத் தொகுதி சற்று முன் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிடம் கையளிக்கப்பட்டது.
யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும் ஹந்தபானகல பிரதேசத்தில் நடுகை செய்வதற்காக அப்பிரதேசத்தில் வசிக்கும் சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கு 100,000 எலுமிச்சை கன்றுகள் அண்மையில் வழங்கப்பட்டது. மனித- யானை முரண்பாடுகளை தவிர்க்கும் புதிய முயற்சியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடுகை செய்வதற்கென சிவில் பாதுகாப்பு படையினரால் இந்தக் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான பிரச்சினைகளை கையாள பொலிஸ் தலைமையகம் விசேட நடவடிக்கை மையத்தை நிறுவியுள்ளது.