--> -->
Tamil
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடு முழுவதும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 1,855 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நாவலப்பிட்டிய கொத்மலை ஓயாவுக்கு அருகில் வெடிபொருட்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் போதைப்பொருள் பிரிவை சேர்ந்த மற்றொரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை குற்றவியல் புலனாய்வுத் துறை செவ்வாய்க்கிழமை (ஜூலை 07) கைது செய்துள்ளது.
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்புகளைப் பேணிவந்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக பொலிஸ் பரிசோதகர் வெஹரவத்த கன்கனம்லாகே சமன் வசந்த குமார இன்று காலை கடவத்தை பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
கல்முனை நிந்தவூர் கடற்பரப்பில் கரையொதுங்கிய திமிங்கில சுறா ஒன்றினை மீண்டும் ஆழ்கடலுக்குள் வழிநடத்தும் முயற்சிகளை இலங்கை கடற்படையினர் மேற்கொண்டனர்.
விநியோகத்திற்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த 56 கிலோகிராம் கஞ்சாவுடன் முல்லேரியா களனி நதி வீதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
'இட்டுகம' சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு ரூ. 1.4 பில்லியனை எட்டியுள்ளது.
இலங்கை கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையானது, இலங்கை கடற்படை, இலங்கை கடலோர பாதுகாப்புப் படை, இலங்கை சுங்கத் திணைக்களம், இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றுடன் இணைந்து நாட்டில் கப்பல் கழிவுகள் தொடர்பில் நாளை முதல் கண்காணிப்பு பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கம் சகல பாடசாலைகளையும் கல்வி நிலையங்களையும் காலவரையறையின்றி மூடியது. இவ்வாறு பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் 115 நாட்களுக்கு பின்னர் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டன.
போதைப்பொருள், சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்ததன் பேரில் 595 பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர்கள் உட்பட சுமார் 2,120 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜோர்டானில் இருந்து சுமார் 230 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான UL 1710 விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் நான்கு கடற்படை வீரர்கள் குணமடைந்ததை அடுத்து அவர்கள் இன்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்த குற்றச்சாட்டில் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட 18 ஆயிரத்து 553 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொரோணா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பஹ்ரைனிலிருந்து 83 இலங்கையர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 202 எனும் விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் ஜெனித் விதாரனபத்திரன தெரிவித்தார்
இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து சுமார் 17,764 பேர் இதுவரைக்கும் தனிமை படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளதாக கொவிட் மத்தியநிலையம் (ஜூலை 04) தெரிவிக்கிறது.