--> -->
இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்து சிகிச்சை பெற்றுவந்த சுமார் 89 பேர் நேற்று (ஜூலை 03) குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.
261 இலங்கையர்கள் ஜப்பான் நாட்டிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்றைய தினம் (ஜூலை, 03) வந்தடைந்தனர்.
Tamil
குருணாகல் கொகரெல்ல பகுதியில் அங்ககவீனமுற்ற இராணுவ வீரர் ஒருவருக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்றினை பாதுகாப்பு செயலாளர் இன்று (ஜூலை, 4 ) வழங்கிவைத்தார்.
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் கல்வித் திட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான பணிகளை விரைவுபடுத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன இன்று (03) அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
கொரோனா தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கனை பின்பற்றாத, முககவசங்களை அணியாதவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மேல் மாகாணத்திற்குள் மாத்திரம் 2000 பொலிஸார் விஷேட கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
வடக்கில் சுமார் 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 400 கிலோ கேராள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
சிறைச்சாலை அதிகாரிகள் வெலிக்கடை மெகசின் சிறைச்சாலை சிறைக்கூடங்களில் 27ஆம் திகதியிலிருந்து கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கையின் போது சட்ட விரோத பொருட்கள் உட்பட 16 கைத்தொலைபேசிகள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் உதிரிப்பாகங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைபொருள் வியாபாரிகளுடன் நெருக்கிய தொடர்புகளைப் பேணியதாக கூறப்படும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் 11 அதிகாரிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றன.
இரண்டு கிலோ கிராம் ஐய்ஸ் போதைபோருளுடன் கைது செய்யப்பட போதைப்பொருள் வியாபாரி ஒருவர் சட்ட நடவடடிக்கைகளுக்காக பரித்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (ஜூலை 02) ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்களுடன் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்தில் இன்று (ஜூலை 01) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வெடிமருந்துகளுடன் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் கைவிடப்பட்ட நெற்செய்கை காணியில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் திட்டத்தின் கீழ் ஹங்வெல்ல, வெலிகண்ண பிரதேசத்தில் கைவிடப்பட்ட காணிகளில் சிவில் பாதுகாப்பு படையினர் பயிர்ச் செய்கையை ஆரம்பித்துள்ளதாக சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு இன்று (ஜூலை 1) விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, தேவாலயத்தின் பாதுகாப்பை பலப்படுத்த துரித நடவடிக்கை எடுத்ததாகவும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலினால் மோசமாக சேதமடைந்த தேவாலயத்தின் எஞ்சிய புனரமைப்புப்பணிகளை விரைவில் நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.