--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சென்னை மற்றும் மும்பை நகரிலிருந்து 194 இலங்கையர்கள் தாயகம் வருகை

இந்தியாவின் சென்னை மற்றும் மும்பை நகரில் இருந்து 150 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இரு விமானங்கள் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று வந்தடைந்ததாக விமான நிலைய கடமைநேர முகாமையாளர் ஜனித் விதானபதிரன தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது

ராகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட, கொலை மிரட்டல் மற்றும் பல கொள்ளைச் சம்பவங்ககளுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் வெளிசர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வடக்கு கடல் பிராந்தியங்களில் 58 கிலோ கேரள கஞ்சாவை கடற்படை கைப்பற்றினர்

யாழ் காரைதீவு கடற்பரப்பில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விஷேட நடவடிக்கையின்போது கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மெல்போர்னிலிருந்து 98 இலங்கையர்கள் தாயகம் வருகை

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து 98 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 605 விமானத்தின் மூலம் மெல்பேர்ன் நகரில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,421ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 1,421 பேர் சிகிச்கையின் பின் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பெண் இராணுவ சிப்பாய் தர்ஷிகா ஜேசுதாசனுக்கு இராணுவத்தினரால் புதிய வீடு நிர்மாணம்

பலாலி முகாமில் பணியாற்றும் தர்ஷிகா ஜேசுதாசன் எனும் இராணுவ பெண் சிப்பாய்க்கு யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தினால் புதிய வீடொன்று நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டது. தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள நன்கொடையாளர்களின் நிதி உதவியுடன் யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டின் சாவி, யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவினால் நேற்றைய தினம் (ஜூன், 18)
வீட்டின் முன்றலில் இடம்பெற்ற எளிய வைபவத்தின் போது பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொழும்பில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் பொலிஸார்

தெஹிவளை, கல்கிசை, அங்குலான மற்றும் ரத்மலான பிரதேசங்களில் இம்மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது போதைப்பொருளுக்கு அடிமையான ஐவர் கைது செய்யப்பட்டதை அடுத்து இப்பிராந்தியத்தில் பொலிஸார் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதாள உலக குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் - பாதுகாப்பு செயலாளர்

சிறைச்சாலைகளில் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் எனவும் தண்டனை பெற்ற பாதாள உலக குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்பட வேண்டாம் எனவும் பாதுகாப்பு செயலாளர்  மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன எச்சரிக்கை விடுத்ததோடு சிறைச்சாலைகளில் உள்ள பாதாள உலக குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கெதிராக சட்ட அமுலாக்க அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

'இட்டுகம' நிதியத்தின் இருப்பு ரூ.1,386 மில்லியனை எட்டியது

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தல் மற்றும் அதனோடு இணைந்த சமூக நலத் திட்டம் ஆகியவற்றிற்கு ஒத்துழைப்பு வழங்கும் 'இட்டுகம' சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு ரூ. 1,386 மில்லியனை எட்டியுள்ளது. இந்த நிதியத்திற்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களினால் அளிக்கப்படும் நிதி நன்கொடைகள் மூலம் குறித்த மைல் கல் எட்டப்பட்டுள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

டுபாயிலிருந்து 289 இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை

டுபாய் நாட்டிலிருந்து 289 இலங்கையர்கள் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 226 விமானத்தின் டுபாயிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தனுஜ சமரதுங்க தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சேவையில் இருந்து விலகிய பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகளை மீண்டும் சேவைக்கமர்த்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்

சேவையிலிருந்து விலகிய பொலிஸ், விசேட அதிரடிப் படை வீரர்கள் உள்ளடங்கலான பொலிஸ் அதிகாரிகளை நாட்டில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த வகையில் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய பாதுகாப்பு செயலாளர் யாழ் விஜயம்

வடக்கில் தற்போதைய  பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பாதுகாப்பு படையிரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தெடர்பில் ஆராய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன யாழிற்கான விஜயம் ஒன்றினை இன்றைய தினம் மேற்கொண்டார்.






செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இலங்கை மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரிகளுக்கு கொவிட் மத்திய நிலைய தலைமையினால் விளக்கமளிப்பு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் நிலையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில்,  முப்படை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆகியோரினால் நாட்டில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (ஜூன் 15) இடம்பெற்றுள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஒமந்தாயில் ஆறு கிலோ கேரளகஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துவரங்குளம் பகுதியில் ஓமந்தை பொலிஸாருடன் பொலிஸ் விசேட அதிரடி படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது 6 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.