Tamil
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் நிலையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில், முப்படை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆகியோரினால் நாட்டில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (ஜூன் 15) இடம்பெற்றுள்ளது.
ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துவரங்குளம் பகுதியில் ஓமந்தை பொலிஸாருடன் பொலிஸ் விசேட அதிரடி படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது 6 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க குரன பகுதியில் ஆறு கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை போலீஸ் போதை ஒழிப்பு பிரிவு கைது செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை பல்வேறு கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், கொரோனா வரைஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து புகழிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்குள் நுழைவதை தடுப்பதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாக கடற்படை பேச்சாளர் லெப்டினென்ட் கொமாண்டர், இசுரு சூரிய பண்டார இன்று (16) தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேபாளத்திலில் சிக்கித்தவித்த இலங்கை மாணவர்கள் 34 பேர் இன்று அதிகாலை (ஜூன் 16) ஹிமாலய எயாலைன்ஸ் விஷேட விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் அனுராதபுர போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை இராணுவத்தினர் அண்மையில் (ஜூன், 14) இரத்ததானம் வழங்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம்காணப்பட்ட இலங்கை கடற்படை வீரர்கள் க சுமார் 740 பேர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் இருந்து தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
முப்படையினரால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவுசெய்த சுமார் 13,875 பேர் இன்றுவரை தமது வீடுகளுக்கு சென்றுள்ளதாக கொவிட் -19 கொரோனா வரைஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
உமா ஓயா பல நோக்கு அபிவிருத்தி திட்ட வேலைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்காக வருகைதந்த ஈரானியர்கள் அனைவரும் தமது வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் தனிமைபடுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கொவிட் -19 கொரோனா வரைஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அண்மையில் (ஜூன் 13) கண்டி மாவட்ட 11 ஆவது பிவிவின் கீழுள்ள 111 படைப்பிரிவை சேர்ந்த இலங்கை இராணுவத்தினர் தம்வள, முருதலாவை, மஹகந்தை மற்றும் கெங்கல்ல ஆகிய பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை அடையாளம் கண்டு அதனை ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த அரச புலனாய்வு சேவையின் பொலிஸ் கான்ஸ்டபிள் சித்தும் அழகப்பெரும பொலிஸ் சார்ஜன்ட் டாக தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்திற்கும் அதன் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிற்கும் எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஸ் துவான் சலே கோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்புவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவையை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் மீளஆரம்பிக்க ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது.