பாதுகாப்பு செய்திகள்
முகக்கவசம் அணியத்தவறிய 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைப்பு
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேல்மாகாணத்தில் பொலிஸாரினால் இன்று (ஜூலை, 01) மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கைகளின் போது, பொது இடங்களில் முகக்கவசம் அணியத்தவறிய 162 பேர் சுய தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் அறிவுருத்தப்பட்டுள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதி இராணுத்தினரால் கிருமி தொற்று நீக்கம்
யாழ்ப்பணத்தில் உள்ள இராணுவ வீரர்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதியினை இன்று (இன்று 30) கிருமி தொற்று நீக்கம் செய்துள்ளனர்
கோலாலம்பூரிலிருந்து 149 இலங்கையர்கள் தாயகம் வருகை
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து 149 இலங்கையர்கள் இன்று காலைஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL319 விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கியுடன் இரு இளைஞர்கள் பொலிசாரால் கைது
நுவரெலிய, கல்பலம பிரதேசத்தில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட 21 மற்றும் 26 வயதுடைய இரு சந்தேகநபர்கள் இன்று (ஜூன் 30) நுவரெலியா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தில் சோதனை; நான்கு அதிகாரிகள் பணி நீக்கம்
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய நான்கு பொலிஸ் அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ் போதைப்பொருள் பணியகம் சோதனை நடவடிக்கைகளுக்குட்படுத்தப்பட்டது.
பாதாள உலகு, போதைப் பொருள் வியாபாரம் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிக்க உயர் பொலிஸ் அதிகாரிகள் செயற்பட வேண்டும் - பாதுகாப்புச் செயலாளர்
போதைப் பொருள் வியாபாரம், கப்பம் பெறல், பாதாள உலக செயற்பாடு, மரம் வெட்டுதல், விபச்சார விடுதி, மணல் அகழ்வு உட்பட ஏனைய சட்டவிரோத குற்றச் செயல்கள் பாரிய அளவில் இடம்பெறுமாயின் அது அந்தந்த மாகாணத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகள் தாம் சீருடை அணிவதில் வெட்கப்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
மாலைதீவில் இருந்து 179 இலங்கையர்கள் தாயகம் வருகை
179 இலங்கையர்கள் அடங்கிய மற்றொரு குழுவினர் மாலைதீவில் இருந்து மாத்தளை சர்வதேச விமான நிலையத்தை இன்றைய தினம் (ஜூன்,29) வந்தடைந்தனர்.
துல்லியமான வானிலை எதிர்வுகூறல்களுக்காக வளிமண்டல திணைக்கத்திற்கு பாதுகாப்பு செயலாளர் பாராட்டு
துல்லியமான வானிலை எதிர்வுகூறல்களை வழங்குவதற்காக புதிய உபகரணங்கள், பகுப்பாய்வு மென்பொருள் மற்றும் புதிய அமைப்புகள் என்பன விரைவில் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
ஊழல் நிறைந்த சிறைச்சாலை முறைமையை சீர்செய்தலுக்கே முன்னுரிமையளிக்கப்படும் - சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உபுல்தெனிய
ஊழலற்ற ஒரு நிறுவனமாக சிறைச்சாலைகளை மாற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து இறுதி ஒப்புதல் கிடைத்துள்ளதால் 200 ஆண்டுகளாக வேரூன்றிக் காணப்படும் ஊழல் நிறைந்த சிறைச்சாலை முறைமையை முற்றிலும் கட்டுப்படுத்த தானும் தனது அதிகாரிகளும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உபுல்தெனிய தெரிவித்தார்.
ரி-56 ரக துப்பாக்கிகளுடன் பாதாள உலக சந்தேகநபர் ஒருவர் கைது
பன்னிரெண்டு ரி- 56 ரக துப்பாக்கிகளுடன் ஹோமாகம,பிட்டிபன பிரதேசத்தில் பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் இன்று (ஜூன், 29) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொது இடங்களில் முகக்கவசம் அணியத்தவறிய 1,214 பேர் தனிமைப்படுத்தலுக்கு
பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் நடமாடிய சுமார் 1,214 நபர்கள் இருவாரங்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் அறிவுருத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஓமானில் இருந்து 288 இலங்கையர்கள் தாயகம் வருகை
288 இலங்கையர்கள் அடங்கிய மற்றொரு குழுவினர் ஓமான் நாட்டில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்றைய தினம் (ஜூன்,29) வந்தடைந்தனர்.
ஊரடங்கு சட்டம் இன்று முதல் நீக்கம்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று (ஜூன், 28) முதல் அமுலுக்கு வரும் வகையில் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
துபாய் மற்றும் பெலாரஸ் நாடுகளிலிருந்து இலங்கையர்கள் தாயகம் வருகை
துபாய் மற்றும் பெலாரஸ் நாடுகளிலிருந்து இலங்கையர்கள் சிலர் இன்றைய தினம் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 226 மற்றும் UL 1206 விமானங்கள் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் ஜனித் விதாரண தெரிவித்தார்.
10 கிலோ கஞ்சாவுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
அனுராதபுர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 10 கிலோ கஞ்சாவை எடுத்துச்செல்லும் போது கைதுசெய்யப்பட்டார்.
சிகிச்சையின் பின் பூரணமாக குனமடைதோரின் எண்ணிக்கை 1,619 ஆக அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 1,619பேர் சிகிச்சையின் பின் பூரணமாக குனமடைத்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.