பாதுகாப்பு செய்திகள்
மன்னார் மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் 180 இராணுவ வீரர்கள் இரத்ததானம்
மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் அனுராதபுர போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை இராணுவத்தினர் அண்மையில் (ஜூன், 14) இரத்ததானம் வழங்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 740 கடற்படை வீரர்கள் குணமடைந்துள்ளனர்
கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம்காணப்பட்ட இலங்கை கடற்படை வீரர்கள் க சுமார் 740 பேர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் இருந்து தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 14,097 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
முப்படையினரால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவுசெய்த சுமார் 13,875 பேர் இன்றுவரை தமது வீடுகளுக்கு சென்றுள்ளதாக கொவிட் -19 கொரோனா வரைஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
உமா ஓயா திட்ட பணிகளுக்கு வருகைதந்த ஈரானியர்கள் தனிமைபடுத்தல் செயற்பாடுகளுக்கு – கொவிட் மையம் தெரிவிப்பு
உமா ஓயா பல நோக்கு அபிவிருத்தி திட்ட வேலைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்காக வருகைதந்த ஈரானியர்கள் அனைவரும் தமது வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் தனிமைபடுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கொவிட் -19 கொரோனா வரைஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர் பங்கேற்பு
அண்மையில் (ஜூன் 13) கண்டி மாவட்ட 11 ஆவது பிவிவின் கீழுள்ள 111 படைப்பிரிவை சேர்ந்த இலங்கை இராணுவத்தினர் தம்வள, முருதலாவை, மஹகந்தை மற்றும் கெங்கல்ல ஆகிய பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை அடையாளம் கண்டு அதனை ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸ் கான்ஸ்டபிள் சார்ஜன்ட்டாக தரமுயர்த்தப்பட்டார்
கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த அரச புலனாய்வு சேவையின் பொலிஸ் கான்ஸ்டபிள் சித்தும் அழகப்பெரும பொலிஸ் சார்ஜன்ட் டாக தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்திற்கும் அதன் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிற்கும் எதிராக மேஜர் ஜெனரல் சுரேஸ் சலேயினால் சட்டநடவடிக்கை
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்திற்கும் அதன் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிற்கும் எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஸ் துவான் சலே கோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்புவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார்.
தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவை 22ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்.
கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவையை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் மீளஆரம்பிக்க ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
விஷேட அதிரடிப்படையின் புதிய கட்டளைத்தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
விஷேட அதிரடிப்படையின் புதிய கட்டளைத்தளபதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு ) கமல் குணரத்தனவை இன்று (ஜூன், 15 ) சந்தித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 708 கடற்படை வீரர்கள் குணமடைந்து வீடுதிரும்பினர்
நாட்டில் இதுவரைக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த கடற்படை வீரர்கள் சுமார் 708 பேர் வைத்தியசாலைகளில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் நிலையம் இன்று (ஜூன் 15) தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 222 பேர் இன்று வீடு திரும்பினர்
முப்படையினரால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் மூன்று வார காலம் தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 222 பேர் இன்று (ஜூன், 15) தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
சொய்சாபுர துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது
சொய்சாபுர துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்திய வாகனத்தின் சாரதி என் நம்பப்படும் சந்தேகநபர் புத்தளையில் வைத்து முச்சக்கரவண்டியுடன் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
130 இலங்கையர்கள் பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாகிஸ்தானில் சிக்கித்தவித்த இலங்கையர்கள் 130 பேர் கொண்ட குழுவினர் இன்று அதிகாலை (ஜூன் 15) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமானநிலைய பொறுப்பு முகாமையாளர் இரேஷா ஜயசூரிய தெரிவித்தார்.
இராணுவம் மற்றும் விமானப்படையினரால் காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள்
பண்டாரவெல டோவா மகாவங்குவயில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயினை இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் இணைத்து இன்று (ஜூன் 14) கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
77 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவுசெய்துள்ளனர்
இராணுவத்தினாரால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் மூன்று வாரம் தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 77 பேர் இன்று (ஜூன் 14) தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை கொள்ளையை முறியடித்த பொலிஸ் கான்ஸ்டபிள் விபத்தில் பலி
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்த அரச புலனாய்வு பிரிவில் சேவையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சித்தும் அழகப்பெரும விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஊரடங்கு சட்ட நேரங்களில் மாற்றம்
நாளை, ஜுன் 14 ஞாயிற்றுக் கிழமை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் நல்லிரவு 12.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.
சட்டவிரோதமான முறையில் வாகனங்களை பறிமுதல் செய்ய இடமில்லை - ஜனாதிபதி
கடன் தவணைகளை செலுத்தத் தவறும் நபர்களின் வாகனங்களை சட்டவிரோதமான முறையில் பறிமுதல் செய்யவதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.