பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் பிரதம அதிகாரியை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் சந்தித்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் பிரதம அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் அவர்களை செவ்வாய்க்கிழமை (மார்ச் 05)  மாலைதீவின் தேசிய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சந்தித்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மாலைதீவு பாதுகாப்பு அமைச்சரை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் சந்தித்தார்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மொஹமட் கஸ்ஸான் மஃமூனை நேற்று (மார்ச் 05) மாலைதீவு பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.





செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

திருகோணமலையில் TRINEX - 24 கடற்படை பயிற்சி ஆரம்பம்

இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை கடற்படை பயிற்சி - TRINEX 24 திங்கட்கிழமை (மார்ச் 04) திருகோணமலை கடற்படைத் தளத்தில் ஆரம்பமாகி இரண்டாவது நாளாக இடம்பெறுகிறது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

விமானப்படையின் 25வது சைக்கிள் சவாரி கொழும்பில் இருந்து தொடங்குகிறது

இலங்கை விமானப்படையினர் 25வது தடவையாக ஏற்பாடு செய்துள்ள 'விமானப்படை சைக்கிள் சவாரி - 2024' நேற்று (மார்ச் 03) காலை காலிமுகத்திடலில் ஆரம்பமானது.





செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்
பாதிப்பு ஏற்பட இடமளியோம்

இலங்கையின் கடல் பிராந்தியத்தையும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரத்தித்தில் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த இடமளியோம் என்றும் சூளுரைத்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

உலகப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது' - பாதுகாப்புச் செயலாளர்

உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை முன்னேற்றுவதில் இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு (OPCW) ஆற்றிய பங்கைக் கருத்தில் கொண்டு, இலங்கை அரசாங்கமும் நாமும் நமது துணை நிறுவனங்களின் அர்ப்பணிப்பு குறித்து பெருமை கொள்கிறோம்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடற்படை கப்பலான விஜயபாகுவில் அமெரிக்க பிரதிநிதிகளை
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்தித்தார்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவம் மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் ஆர். வர்மா, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி. ஜூலி சன்ங் மற்றும் அந்நாட்டுப் பிரதிநிதிகள் குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 23) சந்தித்தார்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜீ அமரபால அவர்களுக்கு மனிதஉரிமை தலைமைத்துவத்திற்கான உலகளாவிய அங்கீகாரம்

நிதி முகாமை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க "உலக மனிதஉரிமை தலைமைத்துவ விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடற்படை கப்பல் சமுதுர முத்தரப்பு கடலோர காவல் கடற்படை பயிற்சி ‘EX – DOSTI – XVI’ இல் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து புறப்பட்டது

‘EX – DOSTI – XVI’ முத்தரப்பு கடற்படைப் பயிற்சி 2024 பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை மாலத்தீவு கடற்கரையை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளதுடன், இலங்கை கடற்படைக் கப்பல் சமுதுர இதில் பங்கேற்பதற்காக இன்று (20 பெப்ரவரி 2024) கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை ஆயுதப்படைகள் சர்வதேச இராணுவ பேரவை ஓட்டத்துடன்
உலக இராணுவ தின கொண்டாட்டம்

சர்வதேச இராணுவ தினத்தினை முன்னிட்டு 2024 பெப்ரவரி 18 ஆம் திகதி சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஓட்டப்போட்டியில் 300 க்கும் மேற்பட்ட முப்படை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி எம்பில் அவர்களின் தலைமையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள் மற்றும் முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் பத்தரமுல்லை பாராளுமன்ற மைதானத்தில் நிகழ்வு ஆரம்பமானது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஈரானிய கடற்படைக் கப்பலான ‘ஐஆர்ஐஎன்எஸ் ரோன்ப்’க்கு விஜயம்

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, சனிக்கிழமை (பெப். 17) ஈரானிய கடற்படைக் கப்பல் (ஐஆர்ஐஎன்எஸ்) ‘ரோன்ப்’க்கு விஜயம் செய்தார்.