--> -->
Tamil
இந்திய இராணுவத்தின் 120 படையினர், இலங்கை இராணுவத்தின் 123 படையினர், இந்திய விமானப்படையின் 15 படையினர், இலங்கை விமானப்படையின் 05 படையினர் இணைந்த கூட்டு இராணுவப் பயிற்சியான 9 வது 'மித்ர சக்தி-2023' புனேவில் உள்ள அவுந்த் நகரில் வியாழக்கிழமை (நவம்பர் 16) ஆரம்பமானது.
பிரான்ஸ் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் அதிமேதகு ஜீன்-பிரான்கோயிஸ் பேக்டெட் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கெளரவ பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்தார்.
கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (நவம்பர் 14) இடம்பெற்றது.
தற்போது மற்றும் எதிர்காலத்தில் எழக்கூடிய எந்தவொரு சவால்மிக்க மோதலையும் எதிர்கொள்ள நமது ஆயுதப் படைகள் நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
Konrad Adenauer Stiftung மற்றும் South Asian Think Tanks (COSATT) இணைந்து நவம்பர் 7ஆம் திகதி காத்மாண்டுவில் ஏற்பாடு செய்த மாநாட்டில், பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளரும், இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் மேற்பார்வைப் பணிப்பாளர் நாயகவுமான கேர்ணல் நளின் ஹேரத் அவர்கள் விரிவுரை ஆற்றினார்.
இலங்கை முன்னாள் பாதுகாப்பு படைவீரர்கள் சங்கம், ஆயுதப்படைகளுடன் இணைந்து ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் “ஆயுதப்படையினர் நினைவு தினம் – 2023” பிரதான நிகழ்வு நேற்று (நவம்பர் 11) பிற்பகல் கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபியின் முன்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் அதிமேதகு சாண்டில் எட்வின் ஷால்க், இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் இன்று (நவம்பர் 10) விரிவுரை நிகழ்த்தப்பட்டது. ‘இலங்கையில் தேசிய பாதுகாப்பு மூலோபாய தீர்மானங்களை உருவாக்கும் கட்டமைப்பு’ எனும் தலைப்பில் இந்த விரிவுரை இடம் பெற்றது.
இலங்கை வந்துள்ள அமெரிக்க பசிபிக் சிறப்பு நடவடிக்கைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜெரோமி பி வில்லியம்ஸ் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
சிவில் பாதுகாப்பு படையினர் தமது கடமைகளுக்கு புறம்பான வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது
இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான 33வது வருடாந்த சர்வதேச கடல்சார் எல்லைக் கோடு (IMBL) சந்திப்பு வெள்ளிக்கிழமை (நவம்பர் 03) காங்கேசன்துறைக்கு வடக்கே அமைந்துள்ள IMBL இல் INS சுமித்ரா கப்பலில் நடைபெற்றது என்று இலங்கை கடற்படை ஊடகம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (நவம்பர் 6) காலை வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில், பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் ஒத்துழைப்புடன் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவப் படையினர் அண்மையில் நடைபெற்ற இரத்த தானம் நிகழ்வின் போது இரத்த தானம் செய்தனர்.