பாதுகாப்பு செய்திகள்
சேவைக் காலம் முடிந்து செல்லும் துருக்கிய
தூதுவர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான துருக்கிய தூதுவர் அதிமேதகு டெமெட் செகெர்சியோகுளு இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்கு இலங்கை இராணுவக் குழு
லெபனான் புறப்பட்டுச் சென்றது
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் (UNIFIL) உள்ள இலங்கை படை பாதுகாப்பு குழுவிற்கு (SLFPC) 125 பேரைக் கொண்ட இலங்கை இராணுவத்தின் 15வது குழு புதன்கிழமை (ஏப்ரல் 03) ஐ.நா பணிக்காக நாட்டை விட்டு வெளியேறியதாக இலங்கை இராணுவம் ஊடகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் படையினர் தேவையுடைய இரு குடும்பங்களுக்கு
புதிய வீடுகள் நிர்மாணிப்பு
யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகப் படையினர் மனித நலனில் அக்கறை காட்டி வரணி பிரதேசத்தில் உள்ள ஆதரவற்ற குடும்பங்களுக்கு இரண்டு புதிய வீடுகளை அமைத்துக் கொடுத்தனர். புதிய வீடுகள் 02 ஏப்ரல் 2024 அன்று பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
களுத்துறையில் அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடர்பில் கடற்படையினரால் செயலமர்வு
களுத்துறையில் உள்ள அனர்த்த முகாமைத்துவக் குழு உறுப்பினர்களிடையே பேரிடர் அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேம்படுத்தும் செயலமர்வு அண்மையில் இலங்கை கடற்படையினரால் நடாத்தப்பட்டது. இந்த அவசரகால பதில், அடிப்படை முதலுதவி மற்றும் உயிர்காக்கும் செயலமர்வு களுத்துறையில் உள்ள விரைவு நடவடிக்கை படகு அணி (RABS) பயிற்சி அலகு (RRTA) மற்றும் களுத்துறையில் உள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு (DDMCU) ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் களுத்துறை கடற்கரையில் நடைபெற்றது.
இலங்கையின் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணியின் புதிய இலச்சினை வெளியிடப்பட்டதுடன் அதன் பணிக்குழுவினருக்கான பாராட்டு சான்றிதழ்களும் வழங்கிவைப்பு
நாட்டில் மனித ஆட்கடத்தலை இல்லாதொழிப்பதில் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வரும் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணி, அதன் அடையாளத்தை வலுப்படுத்தும் நோக்கில் அதன் அனைத்து பங்குதாரர்களின் பங்களிப்புடன் இன்று (ஏப்ரல் 03) பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.
முப்படை வீரர்களுக்கான பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு
சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை சாரணர் சங்கப் பிரதிநிதிகள் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தனர்
இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் ஜனாபிரித் பெர்னாண்டோ தலைமையிலான குழுவினர் இன்று (ஏப்ரல் 02) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தனர்.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில்
நல்லிணக்க மேம்பாட்டு திட்டம்
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கிழக்கு பிரதேச சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நிமித்தம் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தில் 2024 மார்ச் 30 அன்று 'மொழியூடான நல்லிணக்கம்' திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய நீர்வரைவியல் சபைக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்
தேசிய நீர்வரைவியல் சபையின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (ஏப்ரல் 1) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
ஈஸ்டர் தின வாழ்த்துச் செய்தி
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் முகமாக ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.
இலங்கை கடற்படையின் புதிய பிரதம அதிகாரி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கை கடற்படையின் புதிய பிரதம அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரிக்கு கென்யாவில் இராணுவ மரியாதை
கென்யாவின் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் பிரான்சிஸ் ஒமோண்டி ஒகொல்லாவின் அழைப்பின் பேரில் இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா கென்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
வெப்ப எச்சரிக்கைக்கு மத்தியில் நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (மார்ச் 28) காலை வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் கள விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் கள விழிப்புணர்வை மேம்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று கொழும்பில் நடைபெற்றது. போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (UNODC) மற்றும் இலங்கை கடற்படை (SLN) இணைந்து நடத்தும் இரண்டு நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆரம்பமாகி யதாக கடற்படை ஊடகம் தெரிவிக்கிறது.