பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட 15 தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்கள் நோயாளர்களுக்கு விநியோகிப்பதற்காக கண்டி உயர்தர பெண்கள் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டன

இலங்கைக் கடற்படையில் சமூக நலத் திட்டத்தின் கீழ், கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட 15 தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்கள் 2024 மார்ச் மாதம் முதல் வாரத்தில் கண்டி உயர்தர பெண்கள் பாடசாலையின் ‘Interact Club’ சங்கத்திடம் கையளிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நேபாளத்தில் ஐ.நா களப் பயிற்சி சாந்தி பிரயாஸ்- IV இல் இராணுவ படையினர்

சாந்தி பிரயாஸ் - IV களப் பயிற்சி நேபாள ஆயுதப் படைகளால் அமெரிக்க இந்து-பசுபிக் கட்டளையின் கீழ் உலகளாவிய அமைதி நடவடிக்கை முன்முயற்சியின் இணை அனுசரணையுடன் நடத்தப்பட்டது. இது நேபாளத்தில் உள்ள பிரேந்திரா அமைதி நடவடிக்கை பயிற்சி நிலையத்தில் பெப்ரவரி 2024 மார்ச் 04 முதல் 20 வரை நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

541 வது காலாட் பிரிகேடினால் மீள் சவ்வூடுபரவல் குடிநீர் திட்டம்

541வது காலாட் பிரிகேட் படையினர் 06 மார்ச் 2024 அன்று பிரிகேடில் மீள் சவ்வூடுபரவல் குடிநீர் அமைப்பை சமீபத்தில் திறந்து வைத்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர்
பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்

புதிய பொலிஸ் மா அதிபர்  தேசபந்து தென்னகோன் அவர்கள் இன்று (மார்ச் 11) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை இராணுவத்தினரால் அலகல்ல மலையில் வீழ்ந்த
பல்கலைக்கழக மாணவர் மீட்பு

611 வது காலாட் பிரிகேடின் 8 வது இலங்கை சிங்க படையணி படையினர் மார்ச் 10 ஆம் திகதி கேகாலை அலகல்ல மலையின் செங்குத்து சரிவில் விழுந்த பல்கலைக்கழக மாணவரை மீட்டனர்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

54 வது படைப்பிரிவினரால் வருடாந்த ‘பாதயாத்திரை’ பக்தர்களுக்கு குடிநீர் வசதி

542 வது காலாட் பிரிகேடின் 4வது கஜபா படையணி மற்றும் 8வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் வருடாந்த புனித பாதயாத்திரை பக்தர்களுக்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 08) பயணத்தின் போது பல இடங்களில் குடிநீர் வழங்கினர்.







செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் பிரதம அதிகாரியை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் சந்தித்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் பிரதம அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் அவர்களை செவ்வாய்க்கிழமை (மார்ச் 05)  மாலைதீவின் தேசிய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சந்தித்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மாலைதீவு பாதுகாப்பு அமைச்சரை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் சந்தித்தார்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மொஹமட் கஸ்ஸான் மஃமூனை நேற்று (மார்ச் 05) மாலைதீவு பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.





செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

திருகோணமலையில் TRINEX - 24 கடற்படை பயிற்சி ஆரம்பம்

இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை கடற்படை பயிற்சி - TRINEX 24 திங்கட்கிழமை (மார்ச் 04) திருகோணமலை கடற்படைத் தளத்தில் ஆரம்பமாகி இரண்டாவது நாளாக இடம்பெறுகிறது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

விமானப்படையின் 25வது சைக்கிள் சவாரி கொழும்பில் இருந்து தொடங்குகிறது

இலங்கை விமானப்படையினர் 25வது தடவையாக ஏற்பாடு செய்துள்ள 'விமானப்படை சைக்கிள் சவாரி - 2024' நேற்று (மார்ச் 03) காலை காலிமுகத்திடலில் ஆரம்பமானது.





செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்
பாதிப்பு ஏற்பட இடமளியோம்

இலங்கையின் கடல் பிராந்தியத்தையும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரத்தித்தில் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த இடமளியோம் என்றும் சூளுரைத்தார்.