--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடற்படையினரால் நெடுந்தீவு படகு நுழைவாயிலில்
விபத்துக்குள்ளான படகில் இருந்து 38 பேர் மீட்பு

யாழ்ப்பாணம் நெடுந்தீவு நுழைவாயிக்கு அருகில் விபத்துக்குள்ளான படகொன்றில் இருந்த 38 பேர் கொண்ட ஒரு குழுவை இலங்கை கடற்படையினர் புதன்கிழமை (ஜூன் 07) காலை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில்
மூலோபாய மதிப்பீட்டிற்கான மையம் நிறுவப்பட்டது

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பீடம் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆளுமைக்கான நிறுவனத்தின் ஒத்துழைப்புடன்  மூலோபாய மதிப்பீட்டு மையமொன்றினை செவ்வாய்கிழமை (ஜூன் 06, 2023) ஆரம்பித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மருத்துவ ரீதியாக ஓய்வு பெற்ற மற்றும் இறந்த போர் வீரர்களை சார்ந்திருப்பவர்களுக்கும் திருத்தப்பட்ட ஆயுதப் படைகளின் உணவு (ரேஷன்) கொடுப்பனவுகள் வழங்கப்படும்

பயங்கரவாதச் செயல்களால் ஊனமடைந்து தற்போது மருத்துவ காரணங்களால் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் போரின் போது உயிரிழந்த போர் வீரர்களை சார்ந்திருப்பவர்களுக்கும் திருத்தியமைக்கப்பட்ட ஆயுதப் படைகளின் உணவு கொடுப்பனவுகளை வழங்க தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதுடன் உரிய காலத்தில் அவர்களுக்காண கொடுப்பனவுகள் வழங்கப்படும்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பருவ மழை தொடங்கும் நிலையில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

நாடு பூராகவும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாலும், மழைவீழ்ச்சி அதிகரிப்பதாலும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பதுளை, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் நெற்பயிர் சாகுபடி செய்யும் பகுதிகளில் ட்ரோன் தொழில்நுட்ப முறை பயன்படுத்தல்

மிக நவீன மற்றும் விஞ்ஞான நடைமுறைகளை கடைப்பிடித்து, இலங்கை இராணுவம் முதன்முறையாக வெள்ளிக்கிழமை (ஜூன் 02) காலை ஜயவர்தனபுர இலங்கை இராணுவ தலைமையக வளாகத்தை சுற்றியுள்ள 8.5 ஏக்கர் பரப்பளவில் இராணுவ நெற் பயிர்ச்செய்கைகளுக்கு கிருமி நாசிகள் மற்றும் களை நாசிகளை தெளிப்பதற்கு சோதனை அடிப்படையில் ஆளில்லா விமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இஸ்ரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு செயலாருடன் சந்திப்பு

புதுடில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் அவிஹேய் சப்ரானி அவர்கள் இன்று (ஜூன் 05) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தென் - மேற்கு பருவமழை ஆரம்பமாகும் வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புகளின்படி, நாடு முழுவதும் தென் - மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக எதிர்வுகூறியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

‘சந்தஹிரு சேயா அறக்கட்டளை’ யினால் அனுராதபுர வைத்தியசாலைக்கு
சிறுநீரக சுத்திகரிப்பு (டயலிசிஸ்) இயந்திரம் அன்பளிப்பு

இவ் வைத்தியசாலையானது நாட்டின் யுத்தத்தின் போது படுகாயமடைந்த இராணுவத்தினருக்கு அவசர சிகிச்சைக்காக உன்னத சேவையை வழங்கியதாகவும், இவ் வைத்தியசாலையில் இரண்டு தடவைகள் தான் சிகிச்சை பெற்றதையும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இதன் போது நினைவு கூர்ந்து குறிப்பிட்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சந்தஹிரு சேயாவில் இடம்பெற்ற பக்தி கீதையின் போது நாட்டின் இராணுவ வீரர்களுக்கு அதியுயர் அஞ்சலி செலுத்தப்பட்டது

தேசத்தின் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக விசேட 'பொசோன் பக்தி பாடல்' நிகழ்வு நேற்று (ஜூன் 03) மாலை சந்தஹிரு சேயா வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பொசன் வாழ்த்துச் செய்தி

இலங்கை வரலாற்றில் மஹிந்த தேரரின் வருகை, சமய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல்கல் என்பது மறுக்க முடியாதது. மேலும், அதன் மூலம் நாம் எண்ணற்ற சமூக, கலாசார மற்றும் அரசியல் மதிப்புகளை பெற்றுள்ளோம்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கிளிநொச்சி மாணவர்களுக்கு இராணுவத்தினரால் கரப்பந்தாட்ட பயிற்சி

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் இலங்கை இராணுவத்தின் 57 ஆவது காலாட்படைப் பிரிவு கிளிநொச்சி பிரதேச மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் அண்மையில் கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தில் கரப்பந்தாட்டப் பயிற்சிப் பட்டறையொன்றை நடத்தியது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவப் போர்க்கருவி தொழிற்சாலையை மேம்படுத்துவதற்கான வழிகள் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆராய்வு

இராணுவ போர்க்கருவி தொழிற்சாலை அதன் சொந்த தொழில்நுட்பம் மற்றும் தொழில் நிபுணத்துவத்தை உபயோகித்து இராணுவத்தின் தேவைகளில் கணிசமான வற்றை உற்பத்தி செய்வதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணியைச் சேமிப்பதில் இராணுவம் பாரிய பங்களிப்பை வழங்குவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் பாராட்டினார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முல்லைத்தீவில் இராணுவம் பயன்படுத்திய காணிகள் விடுவிப்பு

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினரால் இதுவரை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த காணிகளை விடுவிக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக வெள்ளிக்கிழமை (மே 19) மேலும் சுமார் 08.178 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.






செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சுகயீனமுற்ற மீனவர் கடற்படையினரால் கரைக்கு கொண்டுவரப்பட்டார்

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரால் இன்று (மே 26) கரைக்கு கொண்டுவரப்பட்டார்.