பாதுகாப்பு செய்திகள்
இந்தோனேசிய கடற்படைக் கப்பல் KRI DIPONEGORO- 365 இலங்கையை வந்தடைந்தது
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேட்கொண்டு, இந்தோனேசிய கடற்படைக் கப்பல் KRI DIPONEGORO- 365 நேற்று (டிச. 21) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்திய தூதரக புதிய உதவி பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்னல் மன்தீப் சிங் நேகி இன்று (டிசம்பர் 20) பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
சிங்க படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி ‘ஆசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் - 2023’ல் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள்
இலங்கை சிங்க படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி II எஸ்.எஸ் பிரதீப் மலேசியாவில் டிசம்பர் 10 - 18 திகதிகளில் அண்மையில் நடைபெற்ற ‘ஆசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் 2023’ போட்டியில் 3 வெள்ளிப் பதக்கங்களையும் 1 வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.
முல்லைத்தீவு, வன்னி மற்றும் யாழ். படையினர் வெள்ள நிவாரணப் பணியில்
கடந்த திங்கட்கிழமை (18) பிற்பகல் தொடக்கம் 48 மணி நேரத்தில் முல்லைத்தீவு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த அடைமழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 109 குடும்பங்களைச் சேர்ந்த 228 பொதுமக்கள், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 8வது இராணுவ பீரங்கி படையணியின் படையினரால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
சீரற்ற காலநிலை தொடரக்கூடும்
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
உலக சவால்களை வெற்றிக்கொள்ளக்கூடிய இராணுவத்தினரை உருவாக்க பாதுகாப்பு துறையினரை புதிய தெரிவுகளுடன் கூடியவர்களாக்க வேண்டும் -ஜனாதிபதி
உலக சவால்களை வெற்றிக்கொள்ளக்கூடிய இராணுவத்தினரை உருவாக்க பாதுகாப்பு துறையினரை புதிய தெரிவுகளுடன் கூடியவர்களாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாடு திரும்பும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்
இலங்கையில் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் இயன் கெய்ன் இன்று (டிசம்பர் 13) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
நாடு திரும்பும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்
தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்க்கி (ஓய்வு) இன்று (டிசம்பர் 13) கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
எகிப்திய தூதுவர் இராஜாங்க அமைச்சர் தென்னகோனை சந்தித்தார்
இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அதிமேதகு மாஜித் மோஸ்லே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை இன்று (டிசம்பர் 13) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.