Tamil
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் (DA) கெப்டன் ஆனந்த் முகுந்தன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு பெற்றவர்) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 10) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் புதிய பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் கேபிஏ ஜயசேகர (ஓய்வு) டப்ளியூடப்ளியூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களை 9 டிசம்பர் 2024 அன்று அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன் இன்று (டிசம்பர் 09) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.
“இந்து சமுத்திரத்தில் அதன் மூலோபாய இருப்பிடத்தின் ஊடாக இலங்கையின் பொருளாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் வட்டமேசை கலந்துரையாடல் ஒன்று தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தினால் (INSS) டிசம்பர் 5ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடத்தப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் (UNHCR) காரியாலயத்தின் ஆசியா மற்றும் பசுபிக் பிராந்திய பாதுகாப்பு சேவை பணியகத்தின் தலைவர் திருமதி கெரன் வைட்டிங் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 03) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
2023 பொதுத்துறைக்கான சிறந்த வருடாந்திர அறிக்கை மற்றும் கணக்கறிக்கைகளுக்கான வெண்கல விருது பாதுகாப்பு அமைச்சு வென்றுள்ளது.
15வது முறையாக நடத்தப்படும் வர்த்தக சேவை நீச்சல் சாம்பியன்ஷிப் 2024, ஜனாதிபதி சவால் கோப்பைக்கான போட்டி டிசம்பர் 1ஆம் திகதி தர்ஸ்டன் கல்லூரி நீச்சல் தடாகத்தில் நடைபெற்றது. பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.
பாதுகாப்பு அமைச்சின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட வருடாந்த ரத்ததான முகாம் இன்று (ஒக்.19) அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றது. இன்று காலை நடைபெற்ற இந்த ரத்ததான முகாமில் அதிகளவான அமைச்சு ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் வெள்ள நிலைமையை மதிப்பிடுவதற்கும் தற்போது நடைபெற்று வரும் நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று (நவம்பர் 28) அங்கு விஜயமொன்றை மேட்கொண்டார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் (DMC) மேஜர் ஜெனரல் உதய ஹேரத் (ஓய்வு) மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள சிரேஷ்ட முப்படை அதிகாரிகளுடன் அவர் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளை சந்தித்து தற்போதைய நிலைமை மற்றும் முப்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மன்னார் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமை மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்ட நேற்று (நவம்பர் 26) மாலை அவசர விஜயமொன்றை மேற்கொண்டார்.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை (நவம்பர் 26) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கைக்கமைய, இக்காற்றழுத்த தாழ்வு நிலை தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நேற்று (நவம்பர் 25) இரவு 11.30 மணியளவில் மட்டக்களப்புக்கு 290 கிலோமீற்றர் மற்றும் திருகோணமலைக்கு 410 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்கே நிலைகொண்டுடிருந்தது.
கொழும்பு ஷாங்ரி-லா ஹோட்டலில் நேற்று மாலை (நவம்பர் 25) இடம்பெற்ற 53வது பங்களாதேஷ் படைவீரர்கள் தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் அமைந்துள்ள தனது புதிய அலுவலகத்தில் இன்று (நவம்பர் 25) கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அனர்த்த முகாமைத்துவத்தில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஆயுதப்படையின் நினைவு தினம் - 2024 முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் அமைந்துள்ள இராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு அருகில் இன்று (24) முற்பகல் நடைபெற்றது.
தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கம் (SLESA) மற்றும் அதன் ஆயுதப்படை நினைவு தின பொப்பி குழுவினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டும் பொப்பி தின விழா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில், கௌரவ அதிதிகளின் பங்குபற்றுதலுடன், கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் அமைந்துள்ள யுத்த வீரர் நினைவு தூபியில் நவம்பர் 24 அன்று நடைபெறவுள்ளது.