பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைப்பொருள் தடுப்புக்காக புதிய கட்டளை நிறுவனம்
ஸ்தாபிக்கப்படும் – சாகல ரத்நாயக்க

வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று (Anti-Narcotic Command) ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை இராணுவத் தளபதிக்கு பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியில் அணிவகுப்பு கெளரவ மரியாதை

பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் இப்திகார் ஹசன் சவுத்ரி அவர்களின் அழைப்பின் பேரில் தற்போது பாகிஸ்தான் காகுல் நகருக்கு வருகை தந்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் சனிக்கிழமை (ஒக்டோபர் 21) பகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியின் அணிவகுப்பு மரியாதையில் கெளரவ விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய கடற்படையின் உயர் தொழில்நுட்ப இலகுரக ஹெலிகாப்டர் இலங்கை வருகை

இந்திய கடற்படைக்கு சொந்தமான அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் ஒன்று அண்மையில் (ஒக்.19) இலங்கையை வந்தடைந்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் 4000 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான 212 கிலோவிற்கும் அதிக ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகள் இணைந்து நடத்திய புலனாய்வு நடவடிக்கையின் மூலம் கிடைத்த தகவலின்படி, இலங்கை கடலோர காவல்படையின் சமுத்திரரக்ஷா என்ற கப்பலின் கடற்படையினர் காலிக்கு மேற்கே 91 கடல் மைல் (168 கிமீ) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்று கைது செய்துள்ளனர். குறித்த கப்பலை இன்று (2023 அக்டோபர் 22) காலை தெவுந்தர மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட பின் இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்துடன் இணைந்து கப்பலில் மேற்கொள்ளப்பட்ட உன்னிப்பான சோதனையின் போது 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சுமார் 212 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் (Crystal Methamphetamine) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை நேரில் ஆய்வு செய்வதற்காக இன்று காலை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, தெவுந்தர மீன்பிடி துறைமுகத்திற்கு வருகை தந்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

2023 ஜோன் பீ கல் சாம்பியன்ஷிப் கிண்ணப் போட்டியில்
கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்றது.

கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் கனிஷ்ட மாணவப் படைப்பிரிவு, ரன்டம்பேவில் நடைபெற்ற தேசிய மாணவ சிப்பாய்கள் படையணியின் 2023 அகில இலங்கை ஜோன் பீ கல் சாம்பியன்ஷிப்பில் (John B. Cull Challenge Trophy 2023) இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மருத்துவ முகாமில் அமைச்சக ஊழியர்கள் இரத்ததானம் செய்தனர்

பாதுகாப்பு அமைச்சின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட மருத்துவ முகாமின் இரண்டாம் கட்டம் இன்று (ஒக்.19) அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மோசமான காலநிலை தொடரும்

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (ஒக். 19) வெளியிடப்பட்ட முன்னறிவிப்புகளின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மோசமான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை இராணுவத்தினரால் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு
இரத்ததானம் வழங்கிவைப்பு

இலங்கை இராணுவத்தின் 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் இலங்கை இராணுவத்தினர் (ஒக்.15) இரத்ததானம் வழங்கும் நிகழ்வினை மேற்கொண்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடற்படையினரால் அனுராதபுரத்திலுள்ள தூபாராமய விகாரையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டது

அனுராதபுரத்திலுள்ள தூபாராமய விகாரையில் இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்ட புதிய RO (Reverse Osmosis) நீர் சுத்திகரிப்பு நிலையம் புதன்கிழமை (ஒக்.18) திறந்துவைக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி சிப்பாய்களினால்
அனர்த்த முகாமைத்துவ பணி

4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி சிப்பாய்கள் ஞாயிற்றுக்கிழமை (15 ஒக்டோபர்) மாத்தளை, தலகிரியாகம கிராம சேவை பிரிவில் 'ரஜமஹா' குளத்தில் ஏற்பட்ட பாரிய வெடிப்பை தடுப்பதற்கு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய கடற்படை 'ஐஎன்எஸ் ஐராவத்' கப்பல் கொழும்பு வருகை

இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐஎன்எஸ் ஐராவத்' (INS Aravat) கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை இன்று (ஒக்.18) வந்தடைந்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

11வது இந்திய மற்றும் இலங்கை கடற்படை கலந்துரையாடல் ஆரம்பம்

11வது இலங்கை மற்றும் இந்திய கடற்படை 11வது கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (ஒக் 17) கொழும்பில் ஆரம்பமானது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழ். குடும்பத்திற்கு இராணுவத்தால் கட்டப்பட்ட 771வது வீடு

இராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அவுஸ்திரேலியாவில் ‘இமேஜின் கொம்பாஷன் இன்டர்நேஷனல் லிமிடெட்’ வழங்கிய அனுசரணையுடன் தகுதியான குடும்பத்திற்காக உரும்பிராயில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் 771 வது வீடு நிர்மாணிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சேவைக் காலம் முடிந்து செல்லும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள கெப்டன் விகாஷ் சூட் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இராணுவத்தினரால் போக்குவரத்து வசதிகள் முன்னெடுப்பு.

வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ள ஆறு பாடசாலைகளில் இருந்து  நேற்று (ஒக்.15) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் 22 மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை இலங்கை இராணுவத்தினர் ஏற்பாடுகளை  செய்து கொடுத்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உட்பட ஐந்து இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (ஒக்.16) முதல் அமுலுக்கு வரும் வகையில் பதில் அமைச்சர்களாக நியமித்துள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஆசிய பாரா விளையாட்டு வீரர்களுக்கு
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வாழ்த்து தெரிவிப்பு

சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிய பரா விளையாட்டு வீரர்களை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வளர்ந்துவரும் உலக பொருளாதாரத்தினுள்
இந்து சமுத்திரத்தின் பங்களிப்பு முக்கியமானது

ஆரம்ப காலம் முதலே சிறப்புமிக்க கேந்திர நிலையமாக விளங்கும் இந்து சமுத்திரமானது வளர்ந்துவரும் உலக பொருளாதாரத்திற்குள் முக்கியமான பங்கு வகிப்பதாகவும், உலக அரசியலுக்குள் எடுக்கப்படும் தீர்மானங்களே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இமதுவயில் மண்சரிவு ஏற்பட்ட பிரதேசத்துக்கு
இராஜாங்க அமைச்சர் தென்னகோன் விஜயம்

இமதுவை பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட இடத்தின்  நிலைமைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் இன்று (ஒக்டோபர் 12) அப்பிரதேசத்திற்கு விஜயம்  மேற்கொண்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (ஒக்.12) வெளியிடப்பட்ட முன்னறிவிப்புகளின்படி, நாட்டின்  பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அமெரிக்க கடற்படை கப்பல் ‘USNS Brunswick’ கொழும்பு வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 'யுஎஸ்என்எஸ் பிரன்ஸ்விக்' (USNS Brunswick) என்ற கப்பல் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, நேற்று (ஒக்.11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பற்ற மரங்களை அகற்றுவது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தென்னகோன் தலைமையில் கலந்துரையாடல்

புறநகர் பகுதிகளில் ஏற்படக்கூடிய அபாயகரமான மரங்கள் முறிந்து விழுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று (அக். 11) கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் இடம்பெற்றது.