பாதுகாப்பு செய்திகள்
நாட்டின் பல பகுதிகளில் மேலும் மழை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் அதே வேளையில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (செப். 20) எதிர்வுகூறியுள்ளது.
பாதுகாப்பு செயலாளருக்கு பொப்பி மலர் அணிவிப்பு
பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் ஓய்வு பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உபுல் பெரேராவினால் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிற்கு இன்று (செப். 19) பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.
சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு கடற்படையினரால் கரையோர சுத்திகரிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான திரு. சாகல ரத்நாயக்க மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக இலங்கை கடற்படையினரால் செப்டம்பர் 16ஆம் திகதி துறைமுக நகரப் பகுதியின் கடற்கரையை சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பதில் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின்
பங்குதாரர் இரவு - 2023 நிகழ்வில் பங்கேற்பு
பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் நேற்று (14) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பங்குதாரர் இரவு – 2023 நிகழ்வில் கலந்து கொண்டார்.
காத்தான்குடியில் இராணுவத்தினரால் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதைப்பொருள் மற்றும் அதன் பாவனையால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு செயலமர்வு காத்தான்குடியில் இடம்பெற்றது.
சீரற்ற காலநிலை மேலும் தொடரலாம்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடர வாய்ப்புள்ளது. நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இலங்கை சிவில் பாதுகாப்புத் திணைக்களம் தனது 17வது ஆண்டு
நிறைவைக் கொண்டாடுகிறது
சிவில் பாதுகாப்புத் திணைக்களம் தனது 17வது ஆண்டு நிறைவை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் சேனக பியான்வில தலைமையில் அதன் தலைமையக வளாகத்தில் செப்டம்பர் 13ஆம் திகதி கொண்டாடியது.
பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உட்பட நான்கு இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
லெபனானில் நடைபெற்ற பதக்க அணிவகுப்பில் இலங்கை படையின்
பங்களிப்பிற்கு பாராட்டு
லெபனானில் உள்ள லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் 14 இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவிற்கான சம்பிரதாய பதக்கம் வழங்கும் அணிவகுப்பு புதன்கிழமை (செப். 6) நகோராவில் உள்ள லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை தலைமையக வளாகத்தில் உள்ள கிரீன்ஹில் சோடிர்மேன் முகாமில் நடைப்பெற்றது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை இன்று (செப். 11) கொழும்பில் அமைந்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்தார்.
நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது
தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடர வாய்ப்புள்ளது. நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.