அண்மையில் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட பாதணிகள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெருந்தொகையான மாணவர் குழுவினர்கள் பயனடைந்துள்ளனர்.
அண்மையில் இலங்கை இராணுவ வீரர்கள் குழுவினர் முலங்காவில் பிள்ளையார் கோவில் வளாகம் மற்றும் காரியலங்காபட்டுவான் அந்தோனியர் ஆலய வளாகம் என்பவற்றை சுத்தம் செய்வதற்கு தமது உதவிகளை வழங்கியுள்ளனர்.
இலங்கை மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் இணைந்து பங்குகொள்ளும் 2019ஆம் ஆண்டுக்கான இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இலங்கை கடற்படைக்குச் சொந்தமான “சிந்துறால” மற்றும் “சுரநிமால” ஆகிய இரண்டு கடற்படை கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திலிருந்து இந்தியா நோக்கி நேற்று (செப்டெம்பர், 05) பயணித்ததாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் மின்னேரியாவில் செவ்வாய்கிழமை (செப்டம்பர், 03) ஆரம்பமான களமுனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி X - 2019' நடவடிக்கைகள் தொடர்ந்தும் கிழக்கு பிராந்தியத்தில் நடைபெற்று வருகின்றன.
இலங்கை பொலிஸ் தனது 153 வது ‘பொலிஸ் தினத்தை’ நேற்று (செப்டம்பர், 03) கொண்டாடியது. 153 வது ‘பொலிஸ் தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட வைபவம் பம்பலப்பிட்டியில் உள்ள பொலிஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றதாக பொலிஸ் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர், கேணல் சஜ்ஜாத் அலி அவர்கள் பாதுகாப்பு செயலாளர், ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (செப்டெம்பர், 04) சந்தித்தார்.
இறையாண்மை எல்லைகள் நடவடிக்கை மற்றும் அவுஸ்திரேலிய கூட்டுப் படை தளபதி, மேஜர் ஜெனரல் கிரேய்க் புரினி அவர்கள் தலைமையிலான அவுஸ்திரேலிய அரச தூதுக்குழுவினர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை நேற்று (செப்டெம்பர், 03) சந்தித்தனர்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு அடுத்த வாரம் (செப்டெம்பர்,11&12) ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை இராணுவம் ஏற்பாடுசெய்திருந்த களமுனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி X - 2019' நடவடிக்கைகள் மின்னேரியவிலுள்ள களமுனை போர் பயிற்சி தலைமையகத்தில் இன்று (செப்டம்பர்,03) ஆரம்பமானது.
புதிய இராணுவத் தளபதி, லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (செப்டெம்பர், 03) சந்தித்தார்.
புதிய இராணுவத்தளபதி, லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (செப்டெம்பர், 03) சந்தித்தார்.
வட பிராந்திய கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த கடற்படை படகின் கண்காணிப்பு வீரர்கள், யாழ்ப்பாணம் கச்சதீவு கடலுக்கு அப்பால் கடலில் நிர்க்கதியான நான்கு (04) இந்திய மீனவர்களை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 01) மீட்டுள்ளனர். குறித்த நான்கு மீனவர்களும் எதிர்பாராதவிதமாக கடலில் தத்தளித்து கொண்டிருந்த வேளையில் கடற்படையினரால் மீட்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய ஆபிரிக்க குடியரசின் ஐக்கிய நாடுகள் சபை பல பரிமாண ஒருங்கிணைந்த சீர்திருத்த பணியிலுள்ள இலங்கை விமானப்படை போக்குவரத்து குழுவினர் கடந்த மாதத்தில் பல்வேறு முக்கிய சிவில்-இராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மற்றும் மருந்து நன்கொடை திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை கடலோர பாதுகாப்பு படையினர் கடந்த வாரம் யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியானதொரு உயிர்காப்பு விழிப்புணர்வு நிகழ்சித்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
அதிரடிப்படையின் 35ஆவது போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வு கட்டுகுருந்த அதிரடிப்படை பயிற்சி கல்லூரியில் இன்று (செப்டெம்பர், 1) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட்,29) ஆரம்பமான சர்வதேச மாநாடான ஒன்பதாவது 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2019' இன்றைய தினம் வெற்றிகரமாக நிறைவுற்றது. ஒன்பதாவது வருடமாகவும் இடம்பெற்ற இரண்டு நாட்களைக் கொண்ட இம்மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் 'தேசத்திற்காக ஒன்றினைவோம்' கருத்திட்டத்திற்கு அமைய, யாழ் மற்றும் அதன் தீவுப் பகுதிகளில் இம்மாதம் ( ஆகஸ்ட் ) 23ம் திகதி முதல் 26ம் திகதி வரை இலங்கை கடற்படையினரால் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று (ஆகஸ்ட்,29) இடம்பெற்ற இலங்கை இராணுவத்தின் வருடாந்த சர்வதேச பாதுகாப்பு மாநாடுகளில் ஒன்றான 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2019' அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் மற்றுமொரு மாதாந்த பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்றய தினம் (ஆகஸ்ட், 27) பாதுகாப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
ரஷ்ய விஞ்ஞானி கலாநிதி. இவ்ஜீனி யுஸசெவ் (Evegeny Usachev) உள்ளிட்ட ரஷ்ய பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை நேற்று (அகஸ்ட், 26) சந்தித்தது.
புதுடில்லியை தளமாக கொண்ட சாம்பிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் ஸ்டீபன் சிமுசண்டுஅவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை செவ்வாயன்று (ஆகஸ்ட், 27) சந்தித்தார்.
இலங்கை இராணுவத்தினரால் தொடர்ச்சியாக 10வது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி - X' அடுத்த வாரம் (செப்டம்பர்,03) ஆரம்பமாகவுள்ளது.
அண்மையில் இலங்கை மற்றும் இந்திய கடலோர பாதுகாப்புப் படைகளுகிடையிலான நான்காவது வருடாந்த உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வு, புது டில்லியில் உள்ள இந்திய கடலோர பாதுகாப்புப்படை தலைமையகத்தில் (ஆகஸ்ட், 20) இடம்பெற்றதாக கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை இராணுவத்தின் வருடாந்த சர்வதேச பாதுகாப்பு மாநாடுகளில் ஒன்றான 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2019' எதிர் வரும் வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட்,29) இடம்பெறவுள்ளது. தொடர்ந்து ஒன்பதாவது வருடமாகவும் இடம்பெறும் இரண்டு நாட்களைக்கொண்ட இம்மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை கடற்படையின் 2 கப்பல்கள் கூட்டு பயிற்சி பெறும் நோக்கில் இலங்கை துறைமுகத்தில் இருந்து பங்களாதேஷ் மற்றும் மியன்மார் ஆகிய துறைமுகங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.