"ஒரு நாட்டின் மிகப் பெரிய பொக்கிஷம் அதன் குடிமக்கள், அவர்களைப் பாதுகாப்பதே உங்களின் முதல் மற்றும் முக்கியக் கடமை. இந்தப் பொறுப்பு உங்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும். அவர்களின் உயிரைப் பாதுகாப்பது உங்கள் தலையாய கடமையாகும்," என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தெரிவித்தார்.
கொலன்னாவ பிரதேசத்தில் நிலவி வரும் தாழ்நில வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
மூளை சுகாதார வாரம் 2024 இன் ‘ஆதரவு தினம்’ இன்று (டிசம்பர் 19) ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (KDU) நடைபெற்றது.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) உபவேந்தர் (VC) ரியர் அட்மிரல் தம்மிக்க குமார இன்று (டிசம்பர் 19) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு)கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் ஈ சொனெக், பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) இன்று (டிசம்பர் 17) அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களின் குடும்பங்களின் நலனை உறுதி செய்வதோடு, ஓய்வுபெற்ற மற்றும் ஊனமுற்ற போர் வீரர்களின் தேவைகள் நிவர்த்தி செய்யும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. அவற்றின் மூலம் அவர்களின் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை வழங்க கவனம் செலுத்தப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) கெரவலப்பிட்டி பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் இலங்கை இராணுவம் (SLA) மற்றும் இலங்கை பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் நிறுவனத்துடன் (CPSTL) இணைந்து தீயணைப்பு ஒத்திகை பயிற்சி ஒன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
மத்திய ஆபிரிக்க குடியரசில் (MINUSCA) ஐக்கிய நாடுகளின் பல பரிமாண ஒருங்கிணைந்த உறுதிப்படுத்தல் படை பணியிலுள்ள இலங்கை விமானப்படையின் 10வது விமானப்படை குழு டிசம்பர் மாதம் (06) கடமைக்காக அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 14 ஆம் திகதி மத்திய ஆபிரிக்க குடியரசின் பிரியாவில் உள்ள இலங்கை விமானப் பிரிவில் கட்டளை அதிகாரிகளின் மாற்றம் இடம்பெற்றதாக இலங்கை விமானப்படை ஊடகங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு நாட்டின் பொக்கிஷம் அதன் குடிமக்கள். இராணுவத்தின் பொக்கிஷம் அதன் வீரர்கள். நாட்டின் இராணுவம் என்ற வகையில், நாட்டு மக்களை பாதுகாப்பதே நமது தலையாய பொறுப்பு என பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டு இன்று பிற்பகல் இந்தியாவிற்கு புறப்பட்டார்.
நேற்று மாலை (டிசம்பர் 12) நெலும் பொகுண திரையரங்கில் நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் (DSCSC) பாடநெறி இலக்கம் 18 இன் பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ரத்மலானை விமானப்படை தளத்தில் இன்று (டிசம்பர் 12) நடைபெற்ற பீச்கிராஃப்ட் கிங் ஏர் 350 விமானத்தின் அறிமுக விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் இன்று (டிசம்பர் 11) அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் அங்கவீனமுற்ற படைவீரர்களின் நலன்புரி மற்றும் சலுகைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு கூட்டம் ஒன்று நடைபெற்றது.
Tamil
ஆஸ்திரேலியாவின் உயர் ஆணையர் அதி மேதகு போல் ஸ்டீபன்ஸ் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு பெற்ற) இன்று (டிசம்பர் 10) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் (DA) கெப்டன் ஆனந்த் முகுந்தன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு பெற்றவர்) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 10) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.