இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் புதிய பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பூஜித விதான அவர்கள், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களை இன்று (நவம்பர் 16) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
கொரிய குடியரசின் சிவில் இராணுவ நடவடிக்கை பிரிவு தலைவர் மேஜர் ஜெனரல் தியோக்சங் ஜங் மற்றும் வெளிநாட்டுப் பணியமர்த்தல் பிரிவின் பிரதி பணிப்பாளர் லெப்டினன் கேணல் குவான்ஹியோ லீ ஆகியோர் சமீபத்தில் தென் சூடான் போரில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ படை கட்டம் 2 மருத்துவமனைக்குச் விஜயம் செய்து கொவிட் – 19, மலேரியா மற்றும் பிற தொற்று நோய்களைத் தடுப்பதற்காக லெப்டினன் கேணல் என்.எம் நிப்லர் ஆல் கட்டளையிடப்படும் 8 வது படையணியின் சுகாதாரப் பிரிவின் சிறந்த சேவைகளைப் பாராட்டினர்.
இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு ஒன்று, ஒட்டுசுட்டானில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பத்திற்கு அண்மையில் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கை இராணுவப் படையினர் உடனடியாக செயற்பட்டு நவகமுவ, மாபிடிகம களனி 'பொடி பாலம' ஆற்று நீர் ஓட்டத்தை பாதித்த கொங்கிரீட் தூண்களைச் சுற்றியிருந்த மூங்கில் மரங்களின் அடைப்பை அகற்றும் பணியை சனிக்கிழமை (நவம்பர்12) முன்னெடுத்தனர்.
இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் ஞாபகார்த்த தின நிகழ்வு இன்று காலை (நவம்பர்,13) கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படைவீர்கள் நினைவிடத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் இடம்பெற்றது.
ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட போட்டித்தன்மையுடன் கூடிய பொருளாதாரமே இலங்கையின் ஒரே குறிக்கோளாக இருப்பதனால், முப்படைகளின் பாதுகாப்பு மற்றும் மூலோபாயத் திறன்களின் அவசியம் குறித்தும் அதற்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தினார்.
இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் புதிய பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பூஜித விதான அவர்கள், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை இன்று (நவம்பர் 11) பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.
நாட்டில் நாம் இன்று அனுபவித்து வரும் சமாதானத்தை நிலைநாட்டுவதில் முப்படையினர் மற்றும் பொலிஸார் மாத்திரமன்றி சிவில் பாதுகாப்பு திணைக்களமும் பெரும் பங்களிப்பை வழங்கியதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார். மொரட்டுவ கட்டுபெத்தவில் உள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகத்திற்கு இன்று (நவம்பர் 10) விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) தலைவி செவரீன் ஷப்பாஸ் இன்று (நவம்பர் 09) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை சந்தித்தார்.
Tamil
பாதுகாப்புப் படையினருக்கும் உள்ளூர் இளைஞர் விளையாட்டு வீரர்களுக்கும் இடையிலான நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் வகையில், இராணுவம் அண்மையில் யாழ்ப்பாணம் மிருசவில்லில் நட்பு ரீதியிலான வலைப்பந்தாட்ட போட்டியை ஏற்பாடு செய்தது.
நாட்டில் நிலவும் மழையின் காரணமாக பல மாவட்டங்களில் ஒரு சில பகுதிகள் மண்சரிவு அபாயம் ஏற்படலாம் என , தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (நவம்பர் 7) இரவு 10.00 மணியளவில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டின் ஒரு அங்கமாக முடியுமான சந்தர்ப்பங்களில் புனித விகாரைகளின் மறுசீரமைப்புத் திட்டங்களிலும் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் உள்ள சந்தஹிரு சேய வளாகத்தில் நீண்டகால மத வழிபாடுகளில் ஒன்றான 'கட்டின வஸ்திர பூஜை' (பௌத்த மதகுருக்களுக்கு புதிய அங்கிகளை வழங்குதல்) நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்துகொண்டு வண. மகா சங்கத்தினரிடம் கட்டின அங்கிகளை இன்று (ஒக்டோபர் 04) கையளித்தார்.
இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் அதிமேதகு சாண்டில் எட்வின் ஷால்க் அவர்கள் திங்கட்கிழமை (31) யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.
இலங்கை இராணுவ யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55ஆவது படைப்பிரிவின் தலைமையகம் யாழ்ப்பாணம் கெவில் பகுதியில் வசித்துவரும் விதவை பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு வலுவூட்டும் வகையில் தையல் இயந்திரம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியது.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை (ஒக்டோபர் 29) இடம் பெற்ற தேசிய பளுதூக்கும் போட்டி- 2022 நிகழ்வில் இலங்கை இராணுவ பளுதூக்கும் வீரர்கள் 4 தங்கம்
அமெரிக்க கடலோர பாதுகாப்பு படையினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட கப்பல் இன்று காலை (02 நொவம்பர்) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.
மேல், சப்ரகமுவ, வடமேற்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவராக திரு. டக்லஸ் சோனெக் அவர்கள் அண்மையில் பதவியேற்றதன் பின்னர் திங்கட்கிழமை (24) வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டார்.