--> -->
இலங்கை இராணுவத்தின் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அண்மையில் சிரமதான நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது தள்ளடி முதல் மன்னார் பாலம் வரையான களப்பு பிரதேசம் இராணுவ துருப்பினரால் சுத்தம் செய்யப்பட்டது.
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) ‘சட்ட சஞ்சிகை’ யின் 02 ஆம் தொகுதி இம்மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்று அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Tamil
ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய கூட்டு முகவர் செயலணியின் பிரதிநிதிகள் இலங்கை கடலோரக் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்கவை சந்தித்தனர். இந்த சந்திப்பு மிரிஸ்ஸவில் அமைந்துள்ள கடலோர பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் அண்மையில் (ஆகஸ்ட் 31) இடம்பெற்றது.
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்திற்கான நிரந்தர அலுவலகக் கட்டிடத்தை பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்குள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (செப்டம்பர், 4) தெரிவித்தார். இதற்கமைய, 175 பேர்ச்சஸ் பரப்பு கொண்ட காணியொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாலிந்த நுவர மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள குடா கங்கை பள்ளத்தாக்கின் தாழ்வு பகுதிகளில் சிறிய வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்து வரும் நிலையில், திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) களுத்துறை, மாத்தளை, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதல் நிலை (மஞ்சள்) மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது, இது இன்று (ஆகஸ்ட் 31) இரவு 0830 மணி வரை செல்லுபடியாகும்.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை எச்சரிக்கையில், கனமழை காரணமாக குறிப்பாக மண்சரிவு அபாயம் உள்ள மலைப்பிரதேசங்களில் மற்றும் ஆற்றுப் படுகைகளில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு அனர்தங்களுக்கும் முகம் கொடுக்கும் வகையிலும் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும் இலங்கை விமானப் படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் டோக்கியோவிளுள்ள J. F. ஓபர்லின் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே கல்வி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நேற்று (ஆகஸ்ட் 30) கையெழுத்திடப்பட்டது.
இலங்கை இராணுவத்தினரால், திரு. விஷ் நடராஜா அவர்களின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் புலோலியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடொன்று முன்னாள் போராளி குடும்பம் ஒன்றிற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கலந்துக்கொண்ட நிகழ்வொன்றின் போது நேற்று (ஆகஸ்ட் 27) கையளிக்கப்பட்டது.
எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் அழைப்பின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று (ஆகஸ்ட் 27) ரத்மலானை, அத்திடிய, ஈகிள்ஸ் லகூன் பேங்க்வெட் மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கை விமானப்படை கலர்ஸ் நைட் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கை விமானப்படை (SLAF) மற்றும் இலங்கை கடற்படை (SLN) கெரவலப்பிட்டியவில் உள்ள முத்துராஜவெல சதுப்பு நிலம் மற்றும் வத்தளை, புபுதுகம ஆகிய இடங்களில் ஏட்பட்ட தீயை அணைப்பதற்கு உதவி வழங்கினர்.
இலங்கை விமானப்படை கட்டுநாயக்கா தளத்தில் 5kW சூரிய சக்தி அமைப்பை நிறுவி அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் முதல் கட்டத்தை உத்தியோகபூர்வமாக அண்மையில் ஆரம்பித்து வைத்தது.
பாதுகாப்பு அமைச்சினது ஊழியர்களின் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில்தொழில்நுட்பப் பிரிவின் மேலதிக செயலாளர் பொறியியலாளர் திருமதி செனவிரத்னவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது.