Tamil
கடற்படை நீர்மூழ்கி வீரர்களின் நோக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ‘’பவளப்பாறைகளை அடையாளம் காணுதல் மற்றும் பாறைகளை மறுசீரமைத்தல்’’ தொடர்பான செயலமர்வு அண்மையில் திருகோணமலை கடற்படை கப்பல்துறைமுகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
• இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தல்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிசெய்து, உலகிற்குத் திறந்துவிடுவதன் மூலம் பலம்வாய்ந்த ஆசியாவை உருவாக்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொளரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்கள்; இன்று (செப்.14) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள தேசிய போர் வீரர் நினைவுதூபிக்கு மலரஞ்சலி செலுத்தி தேசத்தின் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
மத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களினால் அண்மையில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. வைத்தியசாலை அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கே இவ்வாறு இரத்ததானம் அளிக்கப்பட்டது.
இலங்கை விமானப்படையின் பிரதம அதிகாரியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபகஷ கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இளைஞர் அணி மற்றும் கட்டைக்காடு இளைஞர் அணிகளுக்கிடையில் சிநேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டி ஒன்று அண்மையின் கட்டைக்காடு உதைபந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது.
இலங்கை கடற்படையினரால் அண்மையில் புல்மோட்டை ஆதார வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சின் போது புல்மோட்டையில் வசிக்கும் 125க்கும் மேற்பட்ட பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இன்று (செப். 12) இடம்பெற்ற எளிமையான நிகழ்வில் சமய ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கண்ணிவெடி அகற்றல் பயிட்சி பெற்ற 54 பேர் அடங்கிய முதலாவது இராணுவ பெண்கள் குழுவுக்கு வியாழக்கிழமை (செப். 08) இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இராணுவ தளபதியினால் திறமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
களனி கங்கை பெருக்கெடுத்து கடுவெல, போமிரிய பிரதேசத்தில் ஏற்படவிருந்த பாரிய வெள்ள அனர்த்தம் இலங்கை இராணுவ துருப்பினரின் துரித நடவடிக்யினால் தடுக்கப்பட்டது. ஆற்றின் இருகரைகளலும் நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகளை அடுக்கி தாழ்வு பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்தனர்.
இலங்கை இராணுவத்தின் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அண்மையில் சிரமதான நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது தள்ளடி முதல் மன்னார் பாலம் வரையான களப்பு பிரதேசம் இராணுவ துருப்பினரால் சுத்தம் செய்யப்பட்டது.
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) ‘சட்ட சஞ்சிகை’ யின் 02 ஆம் தொகுதி இம்மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்று அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய கூட்டு முகவர் செயலணியின் பிரதிநிதிகள் இலங்கை கடலோரக் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்கவை சந்தித்தனர். இந்த சந்திப்பு மிரிஸ்ஸவில் அமைந்துள்ள கடலோர பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் அண்மையில் (ஆகஸ்ட் 31) இடம்பெற்றது.
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்திற்கான நிரந்தர அலுவலகக் கட்டிடத்தை பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்குள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (செப்டம்பர், 4) தெரிவித்தார். இதற்கமைய, 175 பேர்ச்சஸ் பரப்பு கொண்ட காணியொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.