Tamil
ஐக்கிய நாடுகள் சபையின் 2012 ஆம் ஆண்டு விதிமுறைகள் எண். 01 இன் பிரகாரம் பயங்கரவாதத்திற்கு நிதியுதவியளித்தல் தொடர்பில் 577 நபர்கள் மற்றும் 18 அமைப்புகள் 2021 ஆம் ஆண்டில் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சின் புதிய திட்டமிடல் பணிப்பாளர் நாயகமாக திரு. அனுர ரணசிங்க இன்று (ஆகஸ்ட் 15) நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (ஆகஸ்ட் 12) வருகை தந்த பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் தைமூர், இலங்கை கடற்படையினால் கடற்படை சம்பிரதாய முறைப்படி வரவேற்கப்பட்டது.
அண்மையில் பெய்த அடை மழையை அடுத்து நல்லதண்ணி - மஸ்கெலியா பிரதான வீதியில் பொது மக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மண் மேட்டை இலங்கை இராணுவப் படையினர் அகற்றி போக்குவரத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
இலங்கையின் 8 வது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் அழைப்பின் பேரில் முப்படைகளி்ன் சேனாதிபதியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது முதல் விஜயத்தை செவ்வாய்க்கிழமை (9) ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்திற்குச் மேற்கொண்ட போது அவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
சமகாலத்தின் புகழ்பெற்ற போர் வீரனான லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ உற்பட அவருடன் பயணித்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன, ரியர் அட்மிரல் மொஹான் ஜயமஹா, லெப்டினன்ட் கர்னல் எச்.ஆர் ஸ்டீபன், லெப்டினன்ட் கேணல் ஜி.எச். ஆரியரத்ன, லெப்டினன்ட் கேணல் ஒய்.என்.பலிபான, கமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன்ட் கேணல் நளின் டி அல்விஸ், லெப்டினன்ட் கமாண்டர் சி.பி. விஜேபுர மற்றும் படைவீரர் டப்.
இலங்கை கடற்படை அண்மையில் (ஆகஸ்ட் 03) ஆற்றின் நீரோட்டத்தை சீராக வைத்திருக்க ஜின் கங்கையின் அகலிய மற்றும் தொடங்கொட பாலத்தின் கீழ் அடைபட்டிருந்த குப்பைகளை நடவடிக்கை எடுத்தது.
அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட 46 இலங்கையர்கள் இன்று (ஆகஸ்ட் 05) முதல் முறையாக அவுஸ்திரேலிய எல்லைப் படை (ABF) கப்பலில் ஒன்றில் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தனர்.
ஐக்கிய இராச்சியத்தின் பர்மிங்ஹாம் நகரில் நடந்து கொண்டிருக்கும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் வட்டு எறிதல் போட்டியில் F42-44/61-64 பிரிவில் 44.20 மீ தூரத்தை பதிவுசெய்து இலங்கை இராணுவத்தின் தேசிய காவல்படையின் (SLNG) பாரா தடகள வீரர் கோப்ரல் பாலித பண்டார வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
வருகை விசாக்களுடன் வந்து அவற்றை பின்னர் வேலை விசாக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் மலேசியாவிற்கு வருகைதரும் இலங்கையாக்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணியின் (NAHTTF) கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணியின் (NAHTTF) கூட்டம் ஒன்று நேற்று (ஆகஸ்ட் 03) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
திருமதி இந்திகா விஜேகுணவர்தன இன்று (ஆகஸ்ட் 03) முதல் பாதுகாப்பு அமைச்சின் பாராளுமன்ற விவகாரங்கள், கொள்கை மற்றும் திட்டமிடல் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் 'ஆய்வுக் கருத்தரங்கம் - 2022' “மல்டிநோடல் செக்யூரிட்டி டைனமிக்ஸ்” எனும் தொனிப்பொருளின் கீழ் 2022 ஆகஸ்ட் 17 அன்று ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி கற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கு, பாதுகாப்பு ஆராய்ச்சி கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும், தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் தொடர்பான ஆராய்ச்சி கருத்துக்களை ஆராய்வதற்கான சூழலை உருவாக்குவதற்கும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் பர்மிங்ஹாம் நகரில் நேற்று (ஆகஸ்ட் 02) நடைபெற்ற “காமன்வெல்த் விளையாட்டு 2022” போட்டிகளில் பெண்களுக்கான 800 மீ ஓட்டப்`போட்டியில் இலங்கை கடற்படையின் பெண் சிறு அதிகாரி கயந்திகா அபேரத்ன இலங்கை சாதனையை முறியடித்துள்ளார்.
திரு. ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க நேற்று (ஆகஸ்ட் 01) பாதுகாப்பு அமைச்சின் கூடுதல் செயலாளர்- பாதுகாப்பு பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதற்காக 48 வெள்ள நிவாரணக் குழுக்கள் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படை மற்றும் வென்னப்புவை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது வென்னப்புவையிருந்து கடல் மார்க்கமாக வெளிநாட்டிற்கு சட்டவிரோத குடியகல்வு முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 47 பேர் அண்மையில் (31) கைது செய்யப்பட்டனர்.
58 படைப்பிரிவின் கீழுள்ள 581 பிரிவின் 1 வது படைப்பிரிவின் 5 ஆவது விஜயபாகு காலாட்படை படையினர் நேற்று (1) மாலை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கினர்.
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று (ஆகஸ்ட் 01) மாத்தறை, நுவரெலியா, கண்டி, ஹம்பாந்தோட்டை, காலி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு முதல் நிலை (மஞ்சள்) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை கடற்படை அவற்றின் சமூக மேம்பாட்டு நலத்திட்டங்களுக்கமைய யாழ்பாணத்திலிருந்து கதிர்காமம் வரை பாத யாத்திரையில் ஈடுபடும் பக்தர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.
தனது பதவி காலத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹொலே பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து பிரியாவிடை பெற்றுக் கொண்டார்.ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயிலுள்ள, பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் இன்று (ஜூலை 29). இந்த சந்திப்பு இடம்பெற்றது.