--> -->

செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராணுவம் உதவி

நாட்டின் சில பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த க.பொ.த (சா/த) பரீட்சார்த்திகளை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கும் இலங்கை இராணுவத்தின் 12 வது பொறியியல் படை துருப்புக்கள் துரித நடவடிக்கை எடுத்தனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஒரு வலுவான பாதுகாப்பு கொள்கை அத்தியாவசியம் பாதுகாப்பு செயலாளர்

தேசிய பாதுகாப்பை நோக்கிய தனது இலக்குகளை அடைவதை வரையறுப்பதற்கு, நாட்டின் பாதுகாப்பு எந்திரங்களை ஏற்றுக்கொள்ளவும், அதன் மக்கள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கும் செயல்திறன் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய வலுவான பாதுகாப்புக் கொள்கை அவசியம் என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று(ஜூன்(2) தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய இராணுவத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

புதிய இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் வைத்து, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (ஜூன் 02) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு படைகளின் பிரதானி பாதுகாப்பு செயலருக்கு ‘ஸ்டோர்ம் ஒப் வொரியர்ஸ்’ புத்தகத்தை வழங்கி வைத்தார்

பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா சற்று முன்னர் (ஜூன் 02) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் வைத்து பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் ‘ஸ்டோர்ம் ஒப் வொரியர்ஸ்’ எனும் புத்தகத்தை வழங்கி வைத்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பதவியேற்பு

லெப்டினன்ட் ஜெனரல் எச்.எல்.வி.எம் லியனகே இராணுவத் தலைமையகத்தில் இன்று (ஜூன் 1) இடம்பெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வின் போது 24ஆவது இராணுவத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் நிலச்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வெச்சரிக்கை இன்று (ஜூன் 01) மாலை 4.30 மணி வரை செல்லுபடியாகும்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தொடரும் சீரற்ற காலநிலையில் கடற்படை குழுக்கள் வெல்ல நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபாடு

தட்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கை கடற்படை பல நிவாரண குழுக்களை ஈடுபடுத்தியது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வெள்ள அபாயப் பகுதிகளில் தற்பொழுது 13 கடற்படை நிவாரணக் குழுக்கள் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கடற்படை ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்

பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா நாளை (ஜூன் 01) முதல் புதிய பாதுகாப்பு படைகளின் பிரதானியாக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.



கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோல்டன் பரடைஸ் வதிவிட விசா திட்டம் ஆரம்பம்

இலங்கையில் முதலீடு செய்ய, வாழ மற்றும் கல்விகற்க வசதியாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நீண்ட கால விசா திட்டமான ‘கோல்டன் பரடைஸ் விசா திட்டத்தின்’ அங்குரார்ப்பண விழா மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் தலைமையில் பத்தரமுல்லயிலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இன்று (மே 30) இடம்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

யுத்தத்தின் போது மகளிர் படையின் சேவை பாராட்டுக்குரியது - பாதுகாப்பு செயலாளர்

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தின் பெண் படையினர் பல தியாகங்களைச் செய்து நாட்டிற்கு மகத்தான சேவைகளை வழங்கினர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

உயிர் நீத்த ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படை வீரர்களை
பாதுகாப்பு செயலாளர் நினைவு கூர்ந்தார்

ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் வீரர்களின் சர்வதேச தினமான மே 29, இன்று, அமைதிக்கும் சேவையின் போது உயிர்நீத்த 11 இலங்கையர்கள் உட்பட அனைத்து அமைதிகாக்கும் வீரர்களையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்த விரும்புகிறேன்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தின் யுபுன் அபேகோன் புதிய தேசிய மற்றும் தெற்காசிய சாதனையை படைத்துள்ளார்

இலங்கை இராணுவத்தின் ஸ்டாப் சார்ஜன்ட் யுபுன் அபேகோன் கடந்த வியாழனன்று (26) இடம்பெற்ற ஜேர்மன் பகிரங்க தடகள சம்பியன்ஷிப் போட்டியின் 100 மீற்றர் திறந்த போட்டியை 10.06 வினாடிகளில் நிறைவு செய்து புதிய தெற்காசிய சாதனையை படைத்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்களின் மொழித் திறன் மேம்பாட்டிற்கான ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் உதவி

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU) அமெரிக்கா - இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழு மூலம் ஆங்கிலக் கற்பித்தல் உதவியாளர் ஒருவரின் சேவையை பெற்றுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலோர பகுதிகளில் கடற்படையினரால் கண்டல் தாவரங்கள் நடுகை

மன்னார் மற்றும் அருகங்குடா கரையோரப் பகுதிகளில் இலங்கை கடற்படையினர் பல நூறு கண்டல் தாவர கன்றுகளை நட்டுள்ளனர். கடற்படை ஊடகங்களின்படி, மன்னார் கரையோரப் பகுதியில் 1200 கண்டல் தாவரக் கன்றுகள் நடப்பட்டதுடன், மேலும் 250 கண்டல் தாவரக் கன்றுகள் அருகங்குடா பகுதியில் அண்மையில் (மே 20 மற்றும் 21) நடப்பட்டன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு கடற்படை உதவி

கலவான பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு உதவுவதற்காக இலங்கை கடற்படை (SLN) இன்று (25) வெள்ள நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட க.பொ.த (சா/த) மாணவர்களுக்கு இராணுவம் உதவி

புத்தளத்தில் உள்ள இலங்கை இராணுவப் படையினர் இன்று (24) காலை புத்தளம் புனித அன்ட்ரூஸ் மத்திய கல்லூரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 156 க.பொ.த (சா/த) மாணவர்களை உடனடியாக வெளியேற்றி, அவர்கள் மீண்டும் பரீட்சையை தொடர அப்பாடசாலையில் வேறொரு பாதுகாப்பான இடத்தையும் ஏற்பாடு கொடுக்க நடவடிக்கை துரித எடுத்தனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

50 மி மீக்கு அதிகமான மழை மற்றும் கொந்தளிப்புடன் கூடிய கடல் - வானிலை ஆய்வு நிலையம்

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றருக்கு அதிகமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் மேற்கொண்ட முயற்சி கடற்படையினரால் முறியடிப்பு

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்துச் செல்ல முட்பட்ட 67 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று (23) மாலை கைது செய்தனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்காக 100 இராணுவத் துருப்புக்கள் பயணம்

நன்கு பயிற்சி பெற்ற 100 இலங்கை இராணுவ வீரர்களைக் கொண்ட குழுவொன்று நேற்று (மே 23) நாட்டிலிருந்து மாலி நாட்டில் (மினுஸ்மா) உள்ள ஐக்கிய நாடுகளின் (ஐ.நா.) பல் பரிமாண ஒருங்கிணைந்த ஸ்திரப்படுத்தல் பணியில் பணியாற்றுவதற்காக புறப்பட்டுச் சென்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

விஹார மகா தேவி பூங்காவில் இராணுவத்தினரால் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படுகிறது

சுகாதார அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கை இராணுவத்தின் மருத்துவக் குழுக்கள், பொதுமக்களுக்கான கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் நான்காவது கட்ட தடுப்பூசியை விஹார மகா தேவி பூங்காவில் வைத்து வழங்க ஆரம்பித்துள்ளன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவப் படையினர் நல்லதண்ணிற்கு புனித ஆபரணங்களை எடுத்துக் சென்றனர்

இலங்கை இராணுவத்தின் துருப்புக்கள் நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்ட மரபுகளுக்கு இணங்க அண்மையில் நல்லதண்ணிற்கு சமன் தெய்வத்தின் சிலை மற்றும் புனித ஆபரணங்களை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினரால் கண்டல் தாவரக் கன்றுகள் நடுகை

இலங்கை கடற்படையின் கண்டல் தாவரக் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மண்டைதீவு தீவு மற்றும் யாழ்ப்பாணம் பொன்னாலைக் கலப்பின் கரை பகுதிகளில் கண்டல் தாவரக் நடுகை நிகழ்வொன்று வடக்கு கடற்படைத் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களின் தலைமையில் மே 20ஆம் திகதி நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலாமை குஞ்சுகள் கடலில் விடுவிப்பு

கடலோர காவல்படையின் கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 283 கடலாமை குஞ்சுகள் சமீபத்தில் கடலில் விடுவிக்கப்பட்டது.