--> -->
Tamil
மிரிஹானையில் இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறி சில ஊடகங்களில் வெளியிட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, அத்தகைய எந்தவொரு கூட்டமும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.
இலங்கை விமானப்படை (SLAF) இரண்டு MI-17 ஹெலிகாப்டர்களை மத்திய ஆபிரிக்க குடியரசில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் (MINUSCA) நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் SLAF விமானப் படை பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதன்படி சுழற்சி செயல்முறையின் ஒரு பகுதியாக, அங்கு (MINUSCA) சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த மூன்று MI-17 ஹெலிகாப்டர்கள், அதன் செயல்பாட்டுக் காலத்தை சமீபத்தில் முடித்த நிலையில் இலங்கைக்குத் திரும்பியுள்ளன.
இந்திய அரசாங்கத்துடன் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட கடல்சார் பாதுகாப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் சில அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களால் தவறாகப் சித்தரிக்கப்பட்டுள்ளது போன்று இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு இடையூறையோ அல்லது அச்சுறுத்தலையோ ஏற்படுத்தாது.
இலங்கைக்கான புதுடெல்லியில் உள்ள போலந்து குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ரடோஸ்லாவ் கிராப்ஸ்கி இன்று (மார்ச் 21) பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சில் பிரியாவிடை மரியாதை நிமிர்த்தம் சந்தித்தார்.