Tamil
இந்திய அரசாங்கத்துடன் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட கடல்சார் பாதுகாப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் சில அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களால் தவறாகப் சித்தரிக்கப்பட்டுள்ளது போன்று இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு இடையூறையோ அல்லது அச்சுறுத்தலையோ ஏற்படுத்தாது.
இலங்கைக்கான புதுடெல்லியில் உள்ள போலந்து குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ரடோஸ்லாவ் கிராப்ஸ்கி இன்று (மார்ச் 21) பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சில் பிரியாவிடை மரியாதை நிமிர்த்தம் சந்தித்தார்.
இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அதிமேதகு திரு. மஜித் மொஸ்லே, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (மார்ச், 16) இடம்பெற்றது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக கௌரவ சமல் ராஜபக்ஷ கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (மார்ச், 16) இடம் பெற்ற வைபவத்தின் போதே அவர் வணக்கத்துக்குறிய மகா சங்கத்தினரின் சமய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஐந்தாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட கூட்டம் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் ஸ்தாபக உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் 2022 மார்ச் 09 மற்றும் 10ம் திகதி மாலைதீவுக் குடியரசில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் மாலைதீவு, இந்தியா, இலங்கை மற்றும் மாநாட்டின் புதிய உறுப்பு நாடான மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட அதேவேளை, பங்களாதேஷ், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.