பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைச் சபை, நேற்றையதினம் (டிசம்பர், 07) பிற்பகல், கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியின் முதலாம் இலக்க அறையில் கூடியது.
கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயதில் பாதுகாப்பு ஆலோசகராக கடையாற்றி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள கேர்ணல் டேவிட் அஷ்மான், இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
இலங்கை இராணுவத்தின் 59ஆவது பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 07ஆம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கைக்கான இத்தாலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் (கடற்படை) பப்ரிஸியோ பல்ஸி, கொழும்பில் உள்ள இத்தாலியத் தூதுவர் மேதகு ரீட்டா கியுலியானா மன்னெல்லாவுடன் இணைந்து பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (டிசம்பர் 06) சந்தித்து கலந்துறையாடினார்.
எடெக்ஸ் 2021 என்றழைக்கப்படும் எகிப்து பாதுகாப்பு கண்காட்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட இலங்கை தூதுக்குழுவிற்கு தலைமை வகித்த பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் மொஹமட் சாக்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (டிசம்பர், 05) கொழும்பில் உள்ள முன்னாள் படைவீரர் சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
விளையாட்டு அமைச்சு மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ ஒத்துழைப்புடன் நடைபெற்ற ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் சபுத்தி விளையாட்டு விருதுகள் விழாவில் 2020ல் பாராலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற வாரண்ட் அதிகாரி 1 தினேஷ் பிரியந்த மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற கோப்ரல் சமிதா துலான் ஆகியோர் இந்த ஆண்டின் சபுத்தி விளையாட்டு விழாவில் தங்கம் விருது பெற்றனர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணிக்கு மேலும் மூன்று புதிய உறுப்பினர்கள் நேற்று (நவம்பர் 29, 2021) வெளியிடப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Tamil
பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான முதன்மையான சிந்தனைக் குழுவான தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் , அதன் இரண்டாவது தேசிய மாநாடான “கொழும்பு மாநாடு -2021” இம்மாதம் 24ம் திகதி காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பத்தரமுல்ல வாட்டர்ஸ் எட்ஜில் நடாத்தியது. இந்த மாநாடு “தேசிய பாதுகாப்பு மீதான சர்வதேச பரிமாணங்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகள் சபை, எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகவே செயற்படுகின்றது என, அதன் அரசியல் அலுவல்கள், அமைதியைக் கட்டியெழுப்பல் மற்றும் அமைதிச் செயற்பாடுகள் தொடர்பான உதவிப் பொதுச் செயலாளர் கலீட் கியாரி (Khaled Khiari) தெரிவித்தார்.
பாராளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தினால் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை இன்றைய தினம் பாராளுமன்றத்திற்கு கையளிக்கப்பட்டது.
சியாம்பலாண்டுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட வத்தேகம கெபிலித்த அரச வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவம்பர், 23) சுமார் 65,000 விதைகளை தூவுவதற்கு இலங்கை விமானப்படையின் எம்ஐ-17 ரக ஹெலிகொப்டர் பயன்படுத்தப்பட்டது.
ங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தந்த ரஷ்ய பாதுகாப்புச் சபையின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் இன்று (நவம்பர், 24) நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றார்.
கிண்ணியாவில் இன்று காலை (நவம்பர், 23) இடம்பெற்ற சோகமான படகு விபத்தினை தொடர்ந்து, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் கடற்படை இறங்கியுள்ளது.
சோவியத் சோசலிச குடியரசின் அரச புலனாய்வுச் சேவை (KGB) மற்றும் ரஷ்ய ஃபெடரல் பாதுகாப்புச் சேவை ஆகியவற்றில் நீண்டகால அனுபவத்தைக் கொண்டுள்ள நிக்கொலாய் பட்ருஷெவ் அவர்கள், 2008ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் பாதுகாப்புச் சபை செயலாளராகப் பணியாற்றி வருகின்றார், இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான இருதரப்புத் தொடர்புகள், 2022 பெப்ரவரி 19அம் திகதியுடன் 65 ஆண்டுகள் பூர்த்தியை அடைகின்றன நிக்கொலாய் அவர்களின் இந்த விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகள் மேலும் பலப்படுத்தப்படுவதாக, ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
ரஷ்ய பாதுகாப்பு சபையின் செயலாளர் நிக்கோலாய் பட்ருஷேவ் நேற்றைய தினம் (நவம்பர், 22) இலங்கைக்கு வருகை தந்தார்.
கொழும்பு ஷாங்ரி-லா ஹோட்டலில் நேற்று மாலை (நவம்பர், 21) இடம்பெற்ற 50வது பங்களாதேஷ் படைவீரர்கள் தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஒய்வு) விஷேட அதிதியாக கலந்து கொண்டார்.
கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படைவீர்கள் நினைவிடத்தில் இன்று ( நவம்பர்,14) நடைபெற்ற போர்வீரர்கள் ஞாபகார்த்த தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.