--> -->
சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து இராணுவமும் நாட்டின் தென் பகுதியின் நியமிக்கப்பட்ட பகுதிகளில் அரசின் தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு அமைவாக நேற்று தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தீ காரணமாக சேதமடைந்த கப்பலிலிருந்து வெளியாகி கடற்கரையோரங்களில் தேங்கியிருந்த சுமார் 5,000 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கழிவு பொருட்கள் இலங்கை கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் சேகரிக்கப்பட்டு அப்புறப் படுத்தப் பட்டுள்ளது.
கொவிட் - 19 பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள பயண தடையை மீறி செயல்படும் நபர்களை கண்டறிய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாருக்கு உதவும் வகையில் இலங்கை இராணுவத்தின் ரைடர்ஸ் அணியில் உள்ள இராணுவ வீர, வீராங்கனைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Tamil
படையினர் தீ அனர்த்தத்திற்குள்ளான கப்பலில் இருந்து கரை ஒதுங்கியிருக்கும் கழிவுப்பொருட்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதுடன் கடலோர பாதுகாப்புக்கான ஏற்பாட்டை மேற்கொண்டது.
இலங்கை கடற்படை மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை என்பன தீ விபத்தில் சிக்கிய கப்பலில் இருந்து கரை ஒதுங்கியிருக்கும் கழிவுப்பொருட்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதுடன் இலங்கை கடலோர பாதுகாப்பு படையுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாட்டை மேற்கொண்டது.
சேதமடைந்துள்ள எம்வி எக்ஸ்- பிரஸ் போர்ள் கப்பலினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு படைகள், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பிற பொறுப்பான அரச நிறுவனங்களுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவ அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகாப்டர்கள் 425 கிலோ தீயணைப்புகாக பயன்படுத்தப்படும் உலர் இரசாயனக் கலவைகளை இன்று காலை 'எக்ஸ்-பிரஸ் பெர்ல்' கப்பலில் மீது தூவியதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கேப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.
புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடைதல் ஆகிய மூன்று உன்னதமான நிகழ்வுகளை நினைவுகூரும் வெசக் நோன்மதி தினம் பௌத்தர்களான எமது அதி உன்னத சமய பண்டிகையாகும். உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்கள் இந்த புனித நாளில், புத்த பெருமான் மீதான பக்தியுடனும் பற்றுறுதியுடனும் புண்ணிய கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹோலி , பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவை (ஓய்வு) இன்று (மே, 25) சந்தித்தார்.
பயணக் கட்டுப்பாடுகளின் போது செயல்பட்டு வரும் அத்தியாவசிய சேவைகள் குறித்து பொதுமக்கள் தகவல்களை அறிந்து கொள்ள '1965' என்ற விஷேட ஹொட்லைன் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஜூன் மாதம் 7ம் திகதி வரை பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அனர்த்தங்கள் ஏற்படுமாயின் அது தொடர்பில் விரைவாக செயற்பட விமானப்படையின் அனர்த்த மீட்பு குழு மற்றும் விமானங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன பணிப்புரை விடுத்துள்ளார்.
தென் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான்கு வெள்ள நிவாரண குழுக்களை கடற்படை இன்று (மே 23) அனுப்பியுள்ளது.
இலங்கை கடற்படை , இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை தலைமையிலான கூட்டு தீயணைப்பு நடவடிக்கையால் 'எக்ஸ்-பிரஸ் பெர்ல்' கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தணிக்கப்பட்டது.
ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதி வளாகத்திற்கு மாற்றப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் பணிகள் இன்று (மே 18) சுபவேளையில் ஆரம்பமானது.
இலங்கை விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட 'வெப்பமாக்கி ஈரப்பதனூட்டப்பட்ட ஒக்ஸிஜன் சிகிச்சை அலகு' (HHOT) அன்மையில் ஜனாதிபதி கோட்டrபய ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து இறைவன் அல்லாஹ் தங்களின் விருப்பங்களை ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையுடன் ஈதுல்-பித்ர் நோன்புப் பெருநாள் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இந்த ஈதுல் பித்ர் நன்னாளில் அவர்களின் அந்த அனைத்து நல்லெண்ணங்களும் ஈடேற வேண்டும் என நான் வாழ்த்துகிறேன்.