--> -->
தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் 'தேசத்தின் கடல் வள சக்தியும் அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோவும் ’எனும் தலைப்பில் 4 வது ‘வருடாந்த நினைவு தின சொற்பொழிவு ’ ஏற்பாடு செய்யப்பட்டது. மறைந்த அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோவை நினைவு கூறும் வகையிலும் மேற்படி நினைவு சொற்பொழிவு தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Tamil
பெல்லன்வில விஹாரையில் 'அரச மர எல்லை பகுதி' (போதிகர) அபிவிருத்தி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கெளரவ பிரதமரும் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்றது.
கொவிட் 19 பரவலானது, எம்மால் முன்னெடுக்கப்பட்டு வந்த வழக்கமான கல்வி முறைமைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ள இந்த நிலையில் ," வழங்கல் மற்றும் பொருட்கள் முகாமைத்துவ கற்கை” கல்வி நடவடிக்கைகளை வழங்கும் கற்கை நிலையங்களினால் மாணவர்களுக்கான கற்கையினை தகவல் தொழிநுட்பத்தினை வினைத்திறன் மிக்க முறையில் பயன்படுத்துவதன் மூலம் இத்தகைய சவால்களை வெற்றிகொள்ள முடிந்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்" என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு)தெரிவித்தார்.
தீகவாபி தூபி மறுசீரமைப்பு பணிகளுக்கான நிதி திரட்டும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பிலுள்ள ஸ்ரீ சம்போதி விஹாரையில் இன்று (பெப்ரவரி,12) நடைபெற்றது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் விஷேட அதிதியாக பிரதமரும், புத்தசாசன, மத, கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் கலந்துகொண்டார்.
இலங்கை தேசமானது இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளதாகவும் அது பல வர்த்தக ரீதியிலான கடல் மார்க்கங்களின் முக்கிய முனைகளை தொடுக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதனால் அதன் வகிபாகம் அனைத்து விவகாரங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
மக்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பை, அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார்.
ஓய்வுபெற்ற அனைத்து படை வீரர்களின் பெருமை மற்றும் கௌரவம் என்பன அவர்கள் பெருமையுடனும் தொழில் ரீதியான அந்தஸ்துடனும் பிரதிபலிப்பதிலேயே தங்கியுள்ளது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
எதிர்வரும் 73ஆவது சுதந்திர தின வைபவத்தின் ஒத்திகை நிகழ்வுகள் இன்று காலை சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்வினை நீர்ப்பாசன அமைச்சரும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான கௌரவ சமல் ராஜபக்ஷ மீளாய்வு செய்தார்.
இலங்கையின் 73ஆவது சுதந்திர தின பிரதான வைபவத்தை அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் சுகாதார வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சரும், பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
போதைப் பழக்கத்திற்கு ஆளான சிறு குற்றவாளிகளை சிறைச்சாலைகளுக்குப் பின்னால் தக்கவைத்துக்கொள்வதற்குப் பதிலாக, அவர்களை புனவாழ்வு மையங்களுக்கு அனுப்புவதற்கு விரைவில் சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) நேற்று (ஜன. 29) தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தினால் இன்று வெளியிடப்பட்ட 'பாதுகாப்பு மீளாய்வு 2020' வெளியீட்டு நிகழ்வில் பிரதான உரை நிகழ்த்திய பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் கடல் பாதுகாப்பு உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய கருப்பொருள் தொடர்பில் கலந்துரையாடி தற்காலத்தில் அவசியமாகும் பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்கள் மற்றும் நாடுகடந்த குற்றச் செயல்கள் எனும் தற்கலாலத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பல முக்கிய விடயங்கள் ஆராயும் ஒரு முக்கிய தளமாக அமைத்துள்ளதாக தெரிவித்தார்.
தீகவாபி தூபி மறுசீரமைப்பு திட்டத்திற்கு நாளொன்றுக்கு 30,000 தரமான செங்கக்கற்கள் கோரப்படுவதால், இராணுவம், சிவில் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் செங்கற்களை உற்பத்தி செய்வதற்கான வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
இலங்கை விமானப்படை மற்றும் ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸ் இணைந்து நடத்திய வருடாந்த கோல்ஃப் போட்டி விமாளப்படைத் தயபதி கிண்ணம் - 2021 திருகோணமலை சீன விரிகுடாவில் அண்மையில் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
சந்தஹிரு சேய நிர்மாணப் பணிகளை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட திகத்திலேயே நிறைவு செய்வதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு நிர்மாணப் பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து பங்குதாரர்களிடமும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) வேண்டுகோள் விடுத்தார்.
பௌத்த போதனைகளை பரப்பும் உன்னத நோக்கில் ஹோமாகமவில் உள்ள விமலஞான விகாரையில் தர்ம சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இலங்கையின் மகாபோதி சங்க தலைவரும், ஜப்பான் மகா சங்க நாயக்க தேரருமான பாணகல உபதிஸ்ஸ தேரர் தலைமையில் நேற்று (ஜனவரி, 21) இடம்பெற்றது.
73ஆவது தேசிய சுதந்திர தின வைபவம் இம்முறையும் சிறந்த முறையில் நடத்த தேவையான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தின் புதிய பணிப்பாளராக கேர்ணல் சந்திம குமாரசிங்க பாதுகாப்பு அமைச்சிலுள்ள தனது அலுவலகத்தில் (ஜன. 19) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஐஎச்எம்என்என் ஹேரத், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) இன்று சந்தித்தார்.
முன்னர் தொடங்கப்பட்ட பயனற்ற முயற்சிகளைப் போலல்லாமல், இம்முறை தீகவாபி தூபியின் முன்னைய பெருமையை விரைவில் எம்மால் கண்டுகொள்ள முடியும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) நேற்று (ஜன. 13) பாதுகாப்பு அமைச்சில் ஊடகங்களிடம் உரையாற்றும் போது உறுதியளித்தார்.
இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டெனிஸ் ஐ.ஷ்கோடா பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (12) சந்தித்தார்.
பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷவினால் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேர்ணல் புனித் சுசில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று சந்தித்தார்.
தென்கொரியாவை தளமாகக் கொண்டு இயங்கும் 'ஸ்ரீலங்காராம பௌத்த சங்கம்' தீக்கவாப்பி நிதியத்திற்கு 1.6 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலையை நன்கொடையாக வழங்கி வைத்தது.