திருகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு கமல் குணரத்ன இன்றைய தினம் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
மூன்று தசாப்தங்களாகக் காணப்பட்ட பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட இந்த நாட்டை மீளக்கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தேசத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு முழுமையான பங்களிப்புக்களை பாதுகாப்புப் படையினர் வழங்க வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன தெரிவித்தார்.
Tamil
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு யூரி மெட்டரி பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன வை பாதுகாப்பு அமைச்சில் இன்று (9) சந்தித்தார்.
ரணவிரு சேவா அதிகார சபையின் அனுசரணையுடன் சலுகை விலையில் கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு சீமெந்துப் பைகளை வழங்குவதற்காக இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றினை பிரபல சீமெந்து உறபத்தி நிறுவனமான ஐஎன்எஸ்ஈஈ சீமெந்து செய்து கொண்டது. இந்த நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்றது.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சிவில் பாதுகாப்பு படை திணைக்களம் தனது முன்னைய பெருமையை மீண்டும் பெற்று வருவதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
புரவி சூறாவளி இலங்கையின் கிழக்கு கரையோரத்தின் ஊடாக கரையைக் கடக்கும் என எதிர்பார்ப்பதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
புதிய பொலிஸ் மா அதிபர் சிடி விக்ரமரத்ன பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (டிசம்பர்,02) சந்தித்தார்.
இலங்கை, இந்திய மற்றும் மாலைத்தீவுக்கிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 4ஆவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம் சற்று முன் கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஆரம்பமானது.
சட்டவிரோத காடழிப்பு பெருமளவில் பரவாலாக இடம்பெற்று வருவது தொடர்பாக கவலை வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, இவ்வாறான முயற்சிகள் இடம்பெறுவதற்கு முன்னரே அவற்றை அடையாளங் கண்டு காடழிப்பு இடம்பெறுவதை தடுத்து நிறுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என தெரிவித்தார்.
கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு கடல்களையும் இணைக்கும் முக்கிய "கடல் வழி" தொடர்புகளை இந்து சமுத்திரமானது ஏழு கடல்களின் நுழைவாயிலாகக் கருதப்படுகிறது என தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, இந்து சமுத்திரத்தின் ஒரு கூறாக உள்ள இலங்கை, இந்து சமுத்திரத்தில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது என்பது வெளிப்படையான உண்மையாகும் என குறிப்பிட்டார்.
பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு செயலாளராக கடமை ஏற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி பாதுகாப்புச் செயலாளராக தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி. ராஸியா பெண்ஸே பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு கமல் குணரத்னவை இன்று (நவம்பர், 19) சந்தித்தார்.
மக்கள் என்னிடம் முன்வைத்த முக்கிய வேண்டுகோள் ‘நாட்டை காப்பாற்றுங்கள்’ என்பதாகும். இந்த குறுகிய காலத்தில் மக்கள் கோரியபடி நாட்டைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
அனைவருக்கும் ஆசி வேண்டி நடத்தப்பட்ட பிரித் பாராயண ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொண்டார். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று (18) மாலை ஆரம்பமான இந்த பிரித் பாராயணம் தொடர்ச்சியாக 21 நாட்கள் இடம்பெறவுள்ளது.
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஆசி வேண்டி நாரஹென்பிட்ட அபயராமய விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சமய நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன கலந்து கொண்டார்.
சீனக்குடாவில் உள்ள விமானப்படை அகடமியில் கலா சாலையில் இன்று காலை நடைபெற்ற இலங்கை விமானப்படையின் அதிகாரிகளின் பிரியாவிடை அணிவகுப்பு நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன கலந்து கொண்டார்.
அனுராதபுர மிரிஸவெட்டிய மகா சேயவில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட பெளத்த மத அனுஸ்டானங்களில் ஜனாதிபதி கொட்டாபய ராஜபக்ச கலந்து கொண்டார்.
அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சந்தஹிரு சேய தூபியின் நிர்மாணப்பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
உலகெங்கிலும் வாழும் இந்துக்கள் தீபாவளி பண்டிகை தினமான இன்று அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி சமயக் கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.
இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் அதிமேதகு ஹாசிம் அஷ்ஜஸாதி, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (நவம்பர், 13) சந்தித்தார்.
இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டெனிஸ் ஐ. ஷ்கொடா பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (நவம்பர், 13) சந்தித்தார்.