--> -->
இலங்கை மற்றும் மாலை தீவு நாடுகளுக்கான ரஷ்ய தூதுவர் யூரி மாதரி பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவை இன்று (ஜுலை, 28) இன்று சந்திதித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன். விகாஸ் சூட் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவை இன்று சந்தித்தார். ( ஜுலை 28 )
"அனைத்து விதமான துஷ்பிரயோகங்களில் இருந்தும் சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு தேவையான பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டியது அவசியமாகும்" என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும் கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுத்ததும் செயற்பாடுகளிலும் இராணுவ மருத்துவ குழுக்கள் முழு அர்ப்பணிப்புடன் அச்சமின்றி அரசுக்கு சிறந்த ஒத்துழைப்புக்களை வழங்கியதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையில் கல்வி, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்களில் பரஸ்பர நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு இராஜதந்திர உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு என்பன நாளுக்கு நாள் வலுவடைந்து செல்வதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
ஹுவாவி டெக்னோலஜிஸ் லங்கா தனியார் நிறுவனம் வீடியோ தொழிநுட்ப மாநாட்டு முறை ஒன்றினை மேற்கொள்வதற்கான உபகரணங்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அன்பளிப்பு செய்துள்ளது.
ஒன்பது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவுக்குமிடையிலான சம்பிரதாயபூர்வமான சந்திப்பு, பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்றது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பாதுகாக்கப்படுவர் என உறுதியளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,இதற்கு தேவையான அனைக்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அஷோக் ராவோ பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று சந்தித்தார். தனது பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள பாதுகாப்பு ஆலோசகர் மரியாதை நிமித்தமாக குறித்த சந்திப்பை மேற்கொண்டார்.
இலங்கை கடற்படையின் 24வது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று நட்சத்திர தரத்தைக் கொண்ட வைஸ் அட்மிரலாக தரம் உயர்த்தப்பட்ட அவர், இலங்கை கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேவையிலிருந்து ஓய்வுபெற்றுச்செல்லும் கடற்படை தளபதி அட்மிரல் பியால் டீ சில்வா பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு ) கமல் குணரத்தனவை பாதுகாப்பு அமைச்சில் வைத்து இன்று (ஜூலை, 14) சந்தித்தார்.
இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வலுவான தலைமைதத்துவத்தின் கீழ் நாட்டின் கடற்பிராந்தியத்தில் இடம்பெற்ற பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்க முடிந்ததாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பிரிவினைவாத கொள்கைகளை பிரச்சாரம் செய்து பயங்கரவாதத்தை மீள உருவாக்கமுயல்பவர்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையானது, இலங்கை கடற்படை, இலங்கை கடலோர பாதுகாப்புப் படை, இலங்கை சுங்கத் திணைக்களம், இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றுடன் இணைந்து நாட்டில் கப்பல் கழிவுகள் தொடர்பில் நாளை முதல் கண்காணிப்பு பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.
குருணாகல் கொகரெல்ல பகுதியில் அங்ககவீனமுற்ற இராணுவ வீரர் ஒருவருக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்றினை பாதுகாப்பு செயலாளர் இன்று (ஜூலை, 4 ) வழங்கிவைத்தார்.
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் கல்வித் திட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான பணிகளை விரைவுபடுத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன இன்று (03) அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு இன்று (ஜூலை 1) விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, தேவாலயத்தின் பாதுகாப்பை பலப்படுத்த துரித நடவடிக்கை எடுத்ததாகவும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலினால் மோசமாக சேதமடைந்த தேவாலயத்தின் எஞ்சிய புனரமைப்புப்பணிகளை விரைவில் நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
போதைப் பொருள் வியாபாரம், கப்பம் பெறல், பாதாள உலக செயற்பாடு, மரம் வெட்டுதல், விபச்சார விடுதி, மணல் அகழ்வு உட்பட ஏனைய சட்டவிரோத குற்றச் செயல்கள் பாரிய அளவில் இடம்பெறுமாயின் அது அந்தந்த மாகாணத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகள் தாம் சீருடை அணிவதில் வெட்கப்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
துல்லியமான வானிலை எதிர்வுகூறல்களை வழங்குவதற்காக புதிய உபகரணங்கள், பகுப்பாய்வு மென்பொருள் மற்றும் புதிய அமைப்புகள் என்பன விரைவில் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன கடமை நேரத்தில் தமது திறமையை சிறப்பாக செயல்படுத்திய நான்கு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவிலியன் ஒருவருக்கும் பணப்பரிசு உட்பட பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி வைத்துள்ளார்.
ஊழல் மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் என்பவற்றினூடாக பாதாள உலக குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இணைந்து செயற்படும் மற்றும் உதவி புரியும் சிறைச்சாலை, சட்ட அமலாக்க மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னால் பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி யுத்த காலத்தில் தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக.
சிறைச்சாலைகளில் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் எனவும் தண்டனை பெற்ற பாதாள உலக குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்பட வேண்டாம் எனவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன எச்சரிக்கை விடுத்ததோடு சிறைச்சாலைகளில் உள்ள பாதாள உலக குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கெதிராக சட்ட அமுலாக்க அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சேவையிலிருந்து விலகிய பொலிஸ், விசேட அதிரடிப் படை வீரர்கள் உள்ளடங்கலான பொலிஸ் அதிகாரிகளை நாட்டில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த வகையில் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.