செய்திகள்
Tamil
2021இல் சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்த விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் - பாதுகாப்பு செயலாளர் உறுதியளிப்பு
நாட்டில் சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டில் (2021) மேலும் பலப்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இன்று (டிசம்பர், 22) தெரிவித்தார்.
“நேரப் பற்றாக்குறை” எனும் சொல்லினை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது
கால வரையறை என்பது ஒரு கலைப்படைப்பு / எழுத்தாக்கம் ஒன்றினை உருவாக்குவதற்கு எவ்விதத்திலும் ஒரு தடையாக அமையாது என பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார். தன்னால் இன்றுவரை எழுதி வெளியிடப்பட்ட புத்தகங்கள் தொடர்பான சொந்த தனது அனுபவங்களை பகிரும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இராணுவத்தின் 2020 -2025 ஆண்டுக்கான எதிர்கால வியூகம்
இராணுவத்தின் 2020 -2025 ஆண்டுக்கான திட்டங்கள் அடங்கிய இராணுவ வழி எதிர்கால வியூகம் 2020-2025 இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வு, பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் திரு. லலித் வீரதுங்கவின் முன்னிலையில் இடம்பெற்றது.
மனிதர்களால் ஏற்படுத்தும் அழிவோ, இயற்கை அழிவோ, எந்தவொரு அச்சுறுத்தல்களின் போதும் மக்களை பாதுகாக்க செயற்பட வேண்டும் - பாதுகாப்புச் செயலாளர்
இராணுவ தலைவர்கள் இன்று போன்று என்றுமே சகல துறைகளிலும் பங்களிப்பு செய்பவர்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன (ஓய்வு) தெரிவித்தார்.
அயகம மண்சரிவு அபாயத்தை குறைக்கும் வேலைத்திட்டம் பாதுகாப்புச் செயலாளரினால் அங்குரார்ப்பணம்
தொடர்ச்சியாக மண்சரிவு அபாயம் ஏற்படும் அயகம பிரதேசத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் (ஒய்வு) கமல் குணரட்ன, அயகம பிரதேசத்தில் மண்சரிவு அபாயத்தை குறைக்கும் வகையில் 418 மில்லியன் ...
கொவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு அமைச்சிற்கு சீன தூதரகம் ரூ.25 மில்லியன் நன்கொடை
கொவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவ வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்துவதற்காக இலங்கைக்கான சீன தூதரகம் இம்மாதம் 15ம் திகதி பாதுகாப்பு அமைச்சுக்கு 25 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியது.
அபாய முன்னெச்சரிக்கை மற்றும் அனர்த்தங்களை குறைத்துக்கொள்ளல் தொடர்பான சர்வதேச இணைய மூல கருத்தரங்கு நிறைவு
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மூன்று நாட்களாக இடம்பெற்று வந்த அபாய முன்னெச்சரிக்கை மற்றும் அனர்த்தங்களை குறைத்துக்கொள்ளல் தொடர்பான சர்வதேச இணைய மூல கருத்தரங்கு நேற்றையதினம் நிறைவுற்றது.
தீகவாபி தூபியின் புனர்நிர்மாண பணிகளை பாதுகாப்புச் செயலாளர் மீளாய்வு செய்தார்
தீகவாபி தூபியின் புனர்நிர்மாண பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன தலைமையில் மீளாய்வு செய்யப்பட்டது.
Tamil
பொதுமக்களின் பணத்திலிருந்து பராமரிக்கப்படும் சொத்துக்களுக்கு பொறுப்புக் கூறல் அவசியம் - பாதுகாப்புச் செயலாளர்
நீங்கள் இணைந்து கொண்டுள்ள இந்த துறையில் உங்களின் திறன்களை அதிகரித்துக் கொள்வதும் அதற்கேற்ப செயற்படுவதும் அவசியம் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
பாதுகாப்பு செயலாளர் கடற்படை தளத்திற்கு விஜயம்
திருகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு கமல் குணரத்ன இன்றைய தினம் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
ஆயுதப் படையினர்; தேசத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு முழுமையான பங்களிப்புக்களை வழங்க வேண்டும் - பாதுகாப்புச் செயலாளர்
மூன்று தசாப்தங்களாகக் காணப்பட்ட பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட இந்த நாட்டை மீளக்கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தேசத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு முழுமையான பங்களிப்புக்களை பாதுகாப்புப் படையினர் வழங்க வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன தெரிவித்தார்.
Tamil
Tamil
ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு யூரி மெட்டரி பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன வை பாதுகாப்பு அமைச்சில் இன்று (9) சந்தித்தார்.
Tamil
ரணவிரு சேவா அதிகார சபையினால் நல திட்டங்கள் அறிமுகம்
ரணவிரு சேவா அதிகார சபையின் அனுசரணையுடன் சலுகை விலையில் கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு சீமெந்துப் பைகளை வழங்குவதற்காக இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றினை பிரபல சீமெந்து உறபத்தி நிறுவனமான ஐஎன்எஸ்ஈஈ சீமெந்து செய்து கொண்டது. இந்த நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்றது.
தனது முன்னைய பெருமையை மீண்டும் பெற்று வரும் பாதுகாப்பு திணைக்களம் - பாதுகாப்பு செயலாளர்
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சிவில் பாதுகாப்பு படை திணைக்களம் தனது முன்னைய பெருமையை மீண்டும் பெற்று வருவதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
புரவி சூறாவளி இலங்கையின் கிழக்கு கரையோரத்தின் ஊடாக கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு - பாதுகாப்பு செயலாளர்
புரவி சூறாவளி இலங்கையின் கிழக்கு கரையோரத்தின் ஊடாக கரையைக் கடக்கும் என எதிர்பார்ப்பதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
புதிய பொலிஸ் மா அதிபர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
புதிய பொலிஸ் மா அதிபர் சிடி விக்ரமரத்ன பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (டிசம்பர்,02) சந்தித்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம் ஆரம்பம்
இலங்கை, இந்திய மற்றும் மாலைத்தீவுக்கிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 4ஆவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம் சற்று முன் கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஆரம்பமானது.
காடழிப்பைக் கட்டுப்படுத்த விமானப்படையினரால் வான்வழி கண்காணிப்பு - பாதுகாப்பு செயலாளர்
சட்டவிரோத காடழிப்பு பெருமளவில் பரவாலாக இடம்பெற்று வருவது தொடர்பாக கவலை வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, இவ்வாறான முயற்சிகள் இடம்பெறுவதற்கு முன்னரே அவற்றை அடையாளங் கண்டு காடழிப்பு இடம்பெறுவதை தடுத்து நிறுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என தெரிவித்தார்.
இந்து சமுத்திரத்தில் இதுவரை இல்லாதவாறு இலங்கை பெரும் பங்கு வகிக்கும் - பாதுகாப்புச் செயலாளர்
கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு கடல்களையும் இணைக்கும் முக்கிய "கடல் வழி" தொடர்புகளை இந்து சமுத்திரமானது ஏழு கடல்களின் நுழைவாயிலாகக் கருதப்படுகிறது என தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, இந்து சமுத்திரத்தின் ஒரு கூறாக உள்ள இலங்கை, இந்து சமுத்திரத்தில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது என்பது வெளிப்படையான உண்மையாகும் என குறிப்பிட்டார்.