--> -->
பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க அவர்கள் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கொழும்பு 03, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போதே தமது கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்.
இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டெனிஸ் ஐ ஸகோதா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்களை இன்று (டிசம்பர், 18) சந்தித்தார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதிமேதகு திருமதி. அலைனா பி டேப்ளிட்ஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்களை இன்று (டிசம்பர், 17) சந்தித்தார்.
முப்படைகளின் முனைஞரும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பரிந்துரைப்பின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் இராணுவத்திலுள்ள உயரதிகாரிகள் 63 பேர் இம் மாதம் (16) ஆம் திகதி பதவியுயர்த்தப்பட்டனர்.
ஊடக அறிக்கை
இலங்கையில் நடைபெற்று வரும் இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான மிதிவெடி பிரிவின் செயல்பாட்டு நிலை செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கான விஜயமொன்றை ரஷ்ய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் யூரி ஸ்டாவிட்ஸ்கி தலைமையிலான ஒரு ரஷ்ய தூதுக்குழு, பொறியியல் படையணி தலைமையகத்தில் இம் மாதம் (12) ஆம் திகதி இந்த செயலமர்வு இடம்பெற்றது.
இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தினரிக்கிடையிலான மித்திர சக்தி கூட்டுப் படைப் பயிற்சியின் இறுதிக் கட்ட நடவடிக்கைப் பயிற்சிகள் இந்தியா பூனோயில் சிவனேரி எனும் பிரதேசத்தில் கட்டமைப்பு மற்றும் நடவடிக்கை சவால்கள் போன்றவற்றின் தலைப்புகளில் இடம் பெறுகின்றன.
இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அஷோக் ராவோ அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர்ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களை இன்று சந்தித்தார்.
தேசிய மாணவ படையணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) ருவன் குலதுங்க அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்களை இன்று (டிசம்பர்.10) சந்தித்தார்.
படைவீரர்கள், அங்கவீனமுற்ற வீரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மற்றும் குழந்தைகள் உட்பட அவர்களது குடும்பங்களின் நலனை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிப்பு
இரவு நேரங்களில் தெளிவாக அடையாளக் காணத்தக்க வகையில் துவிச்சக்கர வண்டிகளுக்கும் டெக்டர் வண்டிகளுக்கும் பளிச்சிடும் ஸ்டிக்கர்களை ஓட்டும் நிகழ்வு அண்மையில் இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது.
அரசாங்க அச்சகத்தினால் 2019.12.10ம் திகதி வெளியிடப்பட்டுள்ள 2153/12 ஆம் இலக்கம் என்ற வர்த்தமானி அறிவித்தலின் படி 31 அரச திணைக்களங்கள், நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
கடற்படையின் பச்சை மற்றும் நீல சுற்றாடல் கருத்திட்டத்திற்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் சீன அரசினால் இலங்கை கடற்படைக்கு 50 துவிச்சக்கர வண்டிகளும் 3 மின்சார வண்டிகளும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கடற்படை தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற வைபவத்தின் போது இப்பொருட்கள் நன்கொடையாக வழங்கிவைக்கப்பட்டன.
ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான “DD - 102 ஹருசமே எனும் கப்பல் மூன்று நாள் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்றைய தினம் (டிசம்பர், 10) இலங்கையை வந்தடைந்தது.
கெமனு ஹேவா படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெணான்டோ அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் மற்றும் குவாடரிங் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமைப் பொறுப்பை திங்கட் கிழமை (09) ஏற்றார்.
ரணவிரு சேவா அதிகார சபையின் புதிய தலைவராக ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையத்திற்கு பாதுகாப்பு செயலாளரான மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் இன்று (9) ஆம் திகதி காலை உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.
பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்கள் பத்தரமுல்ல பெலவத்தையிலுள்ள அகுறேகொட புதிய இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதிக்கு இன்று (டிசம்பர், 09) விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இலங்கை கடற்படை தனது 69வது ஆண்டு நிறைவை இன்று (டிசம்பர். 09) கொண்டாடுகிறது.
முன்னால் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர், பிரிகேடியர் பிரியங்கர பெணான்டோவுக்கு எதிராக இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா சமவாயத்தின் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்பு “ஒரு அரசியல் நோக்கம் கொண்டது” என இலங்கை அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்கள் சப்புகஸ்கந்தயிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரிக்கு இன்று (டிசம்பர், 07) விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவராக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்கள் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
இராணுவம் தொடர்பான செய்திகளை மேலும் திறம்பட பரவலாக்கம் செய்யும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள ஊடக பிரிவுகளை அரசாங்கம் சீரமைக்கவுள்ளது.
அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாகவும், தூதரக தகவல்களை வெளியிட அச்சுறுத்தியதாகவும் கூறிய உள்நாட்டு பெண் பணியாளரை மருத்துவ சிகிச்சைக்காக நாட்டிலிருந்து வெளியேற அனுமதிக்குமாறு சுவிஸ்சர்லாந்து தூதரகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன WWV RWP RSP USP ndc psc MPhil அவர்கள் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களை இன்று ( டிசம்பர்,04) சந்தித்தார்.