--> -->
சேவையை பெற்றுக்கொள்வதற்காக அரச நிறுவனங்களுக்கு வருகைதருகின்ற எந்தவொருவரையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்காது உடனடியாக சரியான மற்றும் வினைத்திறனான சேவையை பெற்றுக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து அரச ஊழியர்களினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அண்மையில் (டிசம்பர்,24 )இராணுவம் ஏற்பாடு செய்த நிகழ்வின்போது யாழ் பிராந்தியத்திலுள்ள வறிய மாணவர்களுக்கு சுமார் நூறு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கையில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் (டிசம்பர், 26) 15 வருடம் பூர்த்தியடைகின்றது. இதனை முன்னிட்டு தேசிய பாதுகாப்பு தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டதுடன் நாட்டின் 25 மாவட்டங்களிலும் பல்வேறு ஞாபகார்த்த தின நிகழ்வுகளும் சமய அனுஷ்டானங்களும் மேற்கொள்ளப்பட்டன.
சமாதானம், சகவாழ்வு ஆகியவற்றின் மகிமையை இவ்வுலகிற்கு எடுத்துரைத்த இயேசு பிரானின் உன்னத போதனைகளால் மக்கள் பக்குவமடந்துள்ள தருணத்தில் பிறக்கும் இந்த நத்தார், சிறியோர் முதல் பெரியோர் வரை உலக மக்கள் அனைவருக்கும் ஒப்பற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஒய்வு) ஆனந்த பீரிஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்களை மரியதை நிமிர்த்தம் இன்று (டிசம்பர். 24) சந்தித்தார்.
நாட்டில் நிலவும் தொடர்மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக 13 மாவட்டங்களைச் சேர்ந்த 112 பிரதேச செயலக பிரிவுகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக 19095 குடும்பங்களைச் சேர்ந்த 65ஆயிரத்து 294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுடன் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர், 22) திருகோணமலையிலுள்ள சாண்டி பே கடற்கரை பிரதேசத்தில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக தேசிய பாதுகாப்பை மீள ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
Tamil
இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பிர் சிங் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்களை இன்று (டிசம்பர்,19 ) சந்தித்தார்.
சுவிஸ் தூதரக ஊழியர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிப்பதில் இரு நாடுகளும் மதிக்கும் சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு அடியிலும் உரிய செயல்முறை பின்பற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று தனது சுவிஸ் பிரதிநிதி இக்னாசியோ காசிஸ் அவர்களுக்கு உறுதியளித்தார்.
பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க அவர்கள் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கொழும்பு 03, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போதே தமது கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்.
இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டெனிஸ் ஐ ஸகோதா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்களை இன்று (டிசம்பர், 18) சந்தித்தார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதிமேதகு திருமதி. அலைனா பி டேப்ளிட்ஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்களை இன்று (டிசம்பர், 17) சந்தித்தார்.
முப்படைகளின் முனைஞரும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பரிந்துரைப்பின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் இராணுவத்திலுள்ள உயரதிகாரிகள் 63 பேர் இம் மாதம் (16) ஆம் திகதி பதவியுயர்த்தப்பட்டனர்.
ஊடக அறிக்கை
இலங்கையில் நடைபெற்று வரும் இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான மிதிவெடி பிரிவின் செயல்பாட்டு நிலை செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கான விஜயமொன்றை ரஷ்ய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் யூரி ஸ்டாவிட்ஸ்கி தலைமையிலான ஒரு ரஷ்ய தூதுக்குழு, பொறியியல் படையணி தலைமையகத்தில் இம் மாதம் (12) ஆம் திகதி இந்த செயலமர்வு இடம்பெற்றது.
இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தினரிக்கிடையிலான மித்திர சக்தி கூட்டுப் படைப் பயிற்சியின் இறுதிக் கட்ட நடவடிக்கைப் பயிற்சிகள் இந்தியா பூனோயில் சிவனேரி எனும் பிரதேசத்தில் கட்டமைப்பு மற்றும் நடவடிக்கை சவால்கள் போன்றவற்றின் தலைப்புகளில் இடம் பெறுகின்றன.
இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அஷோக் ராவோ அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர்ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களை இன்று சந்தித்தார்.
தேசிய மாணவ படையணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) ருவன் குலதுங்க அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்களை இன்று (டிசம்பர்.10) சந்தித்தார்.
படைவீரர்கள், அங்கவீனமுற்ற வீரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மற்றும் குழந்தைகள் உட்பட அவர்களது குடும்பங்களின் நலனை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிப்பு
இரவு நேரங்களில் தெளிவாக அடையாளக் காணத்தக்க வகையில் துவிச்சக்கர வண்டிகளுக்கும் டெக்டர் வண்டிகளுக்கும் பளிச்சிடும் ஸ்டிக்கர்களை ஓட்டும் நிகழ்வு அண்மையில் இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது.
அரசாங்க அச்சகத்தினால் 2019.12.10ம் திகதி வெளியிடப்பட்டுள்ள 2153/12 ஆம் இலக்கம் என்ற வர்த்தமானி அறிவித்தலின் படி 31 அரச திணைக்களங்கள், நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
கடற்படையின் பச்சை மற்றும் நீல சுற்றாடல் கருத்திட்டத்திற்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் சீன அரசினால் இலங்கை கடற்படைக்கு 50 துவிச்சக்கர வண்டிகளும் 3 மின்சார வண்டிகளும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கடற்படை தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற வைபவத்தின் போது இப்பொருட்கள் நன்கொடையாக வழங்கிவைக்கப்பட்டன.
ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான “DD - 102 ஹருசமே எனும் கப்பல் மூன்று நாள் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்றைய தினம் (டிசம்பர், 10) இலங்கையை வந்தடைந்தது.