செய்திகள்
கொரோனா வைரஸை எதிர்த்துப் போரிடும் மருந்துகளை தயாரிக்குமாறு ஆயுர்வேத மருத்துவர்களிடம் அரசு கோரிக்கை
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தில் இலங்கையின் 60ற்கு மேற்பட்ட முன்னணி சுதேச மருத்துவ துறையினருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.
இராணுவத்தின் தலைமையிலான தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலில் 3,372 க்கும் மேற்பட்டோர்
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் உட்பட மொத்தம் 3,169 பேர், முப்படையினரின் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ராஜகிரியாவில் உள்ள கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
முழுமையாக முடக்கும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை - பாதுகாப்பு செயலாளர்
நாட்டில் கொரோனா தாக்கம் தொடர்பான தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு, நாட்டினை முழுமையாக முடக்கும் (லொக்டவுன்) தீர்மானம் எதனையும் அரசாங்கம் எடுக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
வரையறுக்கப்பட்ட அலையன்ஸ் காப்புறுதி லங்கா நிறுவனத்தினால் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை பரிசோதிக்கும் இயந்திரம் அன்பளிப்பு
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை பரிசோதிக்கும் இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்காக வரையறுக்கப்பட்ட அலையன்ஸ் காப்புறுதி லங்கா நிறுவனத்தினால் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.
Tamil
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் தேசிய பாதுகாப்பை பேணுவதில் இராணுவம் அதிக கவனத்துடனே உள்ளது - பாதுகாப்பு செயலாளர்
- எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள, புலனாய்வு அமைப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பு
முழு உலகமும் கொரோனா வைரஸ் அச்சத்தில் மூழ்கியுள்ள நிலையில், வைரஸைக் கட்டுப்படுத்த சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வரும் இலங்கை...
Tamil
12,500 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையினர் நாட்டின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 463 கடல் மைல் (835 கி.மீ) தொலைவில் பெருமளவு போதைப்பொருட்களுடன் வெளிநாட்டு கப்பல் ஒன்றினை கைப்பற்றியுள்ளனர்.
அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே ஊரடங்கு சட்டத்தின் போது அனுமதி வழங்கப்படும் - பொலிஸ்
அத்தியாவசிய சேவைகளின் கீழ் ஊடகங்களுக்கு அனுமதி பெறமுடியும்.
அத்தியாவசிய சேவைகள் மற்றும் பிரதேச
வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்...
வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் பொது மக்களுக்கு கடற்படையினரால் குடிநீர் மற்றும் உலர் உணவுப்பொருட்கள் விநியோகிப்பு
கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலன்புரி நடவடிக்கைகளில் ஒன்றாக வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் ஏழைக் குடும்பங்கள் மற்றும் மதஸ்தலங்கள் ஆகியவற்றுக்கு குடிநீர் மற்றும் உலர் உணவுப்பொருட்கள் என்பன விநியோகித்து வைக்கப்பட்டன. குறித்த இந்த நடவைக்கை வடமத்திய கடற்படை கட்டளையகத்தினால் இம்மாதம் 26ம் திகதி முதல் 27ம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டது.
நன்கொடையாளர்களினால் உலர் உணவுப் பொதிகள் விநியோகிப்பு
கொழும்பு மாவட்டத்தில் (அன்றாடம் தொழில் புரிகின்ற) குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் 85 உலர் உணவு பொதிகளை நன்கொடையாளர்கள் வழங்கி வைத்துள்ளனர். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வரியமக்களுக்கு இவ் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் உளர் உணவு பொதிகள் விநியோகிப்பு
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தலைவி, திருமதி சித்ராணி குணரத்ன அமைச்சில் பணிபுரியும் சிற்றூழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை விநியோகித்துள்ளார்.
ஊரடங்குச் சட்டத்தினை மதித்து நடக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் வலியுறுத்து
பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் யாழ் குடா நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதனால் அவற்றிலிருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காகவும் அரசாங்கத்தினால் ஊரடங்கு சட்டத்தினை மீண்டும் நாடுமுழுவதும் அமுல்படுத்த நேரிட்டதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்
கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்கள் மற்றும் வட மாகாண மாவட்டங்கள் அடங்களாக நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான பயணத்தை தடைசெய்யும் வகையில் விதிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம்...
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பது அவசியம் - பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு
கொரோனா வைரஸ் அல்லது கோவிட் - 19 பரவலை தடுக்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், சமூக ஊடகங்கள் மூலமாக வதந்திகளை பரப்பி வரும் நபர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்தயுடன் செயற்படுமாறு பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அனைத்து இலங்கையர்களையும் கோரியுள்ளார். வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நபர்கள் உள்ளடங்களாக அனைவரும் வீட்டுகளில் தரித்திருப்பதன் மூலமும், சுகாதார மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலமும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விடுமுறை நாட்களில் கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களிலிருந்து தவிந்து கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை
புதிதாக அறிவிக்கப்பட்ட ஒன்பது நோயாளிகள் உள்ளடங்கலாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 50 ஆக உயர்ந்துள்ள நிலையில், வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸைத் தடுக்க விடுமுறை நாட்களில் சுற்றுப்பயணங்கள் மற்றும் யாத்திரைகளில் ஒன்று சேர்வதை தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
கொவிட் - 19 பரவுவதை தடுக்க மிடாஸ் சேப்டி நிறுவனத்தினால் 52,000 சோடி கையுறைகள் அன்பளிப்பு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கம் பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அவிசாவளை மிடாஸ் சேப்டி குழுவின் ப்ரைம் பொலிமர் பிரிவினால் ஒரு தொகை கையுறைகள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவிடம் கையளிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பொதுமக்களின் ஒத்துழைப்பினை கோருகிறது
கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளிலிருந்து மார்ச் முதலாம் திகதி முதல் ஒன்பதாம் திகதி வரை நாடு திரும்பிய பயணிகள், கொரோனா வைரஸ் (COVID-19) பரவாமல் இருக்க தங்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அரசாங்கம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது.
தனிமைப்படுத்தலுக்கு உட்படாத இலங்கை பயணிகள் உடனடியாக பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை
இங்கிலாந்து, ஈரான், இத்தாலி, தென் கொரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலிருந்து மார்ச் 1ம் திகதி முதல் 15ம் திகதி வரை இலங்கைக்கு வருகை வந்த அனைத்து இலங்கையர்களும் தங்களை அருகிலுள்ள...
கொவிட்-19 தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகளை பரப்புவவர்களுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சு சட்ட நடவடிக்கை
மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் கொவிட்-19 கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய டிஜிட்டல் ஊடகங்களில் மூலம் மக்களை தவறான வழியில் இட்டுச்செல்லும் வகையில் வதந்திகளை பரப்புவவர்களுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சு சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது.
கொவிட்-19 காரணமாக விமான நிலையங்களை மூடுவது குறித்த வதந்திகளை விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுவன தலைவர் மறுப்பு
கொவிட்-19 வைரஸ் காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மூடும் திட்டங்கள் குறித்த வதந்திகளை விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுவனம் இன்று மறுத்துள்ளது.
கொரோனாவை இல்லாதொழிக்க இராணுவ வைத்திய குழுக்களின் அர்ப்பணிப்புடனான செயற்பாடுகள் பாராட்டத்தக்கது - பாதுகாப்பு செயலாளர்
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முப்படை மருத்துவக் குழுக்கள் அச்சமின்றியும் மிகுந்த அர்ப்பணிப்புடனும் செயற்படுவதை பாராட்டிய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன, எமது நாட்டில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களின் போது பாதுகாப்பு படையினர் முன்னின்று செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முழுமையாக செயற்படுகிறது – பாதுகாப்பு செயலாளர்
இலங்கையில் வசிக்கும் 21.4 மில்லியன் மக்களையும் கொரோனா வைரஸ் தொற்றுவதிலிருந்து பாதுகாக்கும் வகையில் அரசு சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் (ஒய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பீதியடைவதற்கும் பொருட்களை சேமித்து வைப்பதற்குமான தேவை கிடையாது – அரசாங்கம் தெரிவிப்பு
கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளானவர்களை கண்டறிய வீடு வீடாக தனிமைப்படுத்தப்படும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக சில வதந்திகள் ...
கொவிட்-19 வைரஸை எதிர்கொள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைச்சுகள் தயார்நிலையில்
பாதுகாப்பு அமைச்சு சுகாதார அமைச்சுடன் இணைந்து கொவிட்-19 என பெயரிடப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களையும் மற்றும் நாட்டின் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களையும் கொரோனா வைரஸ் பரவுவதிலிருந்து தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.