செய்திகள்
அபேக்ஷா மருத்துவமனையில் இலங்கை விமானப்படை நிபுணத்துவத்துடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய சிறுவர் வார்ட் திறந்து வைக்கப்பட்டது
இலங்கை விமானப்படையின் (SLAF) தொழில்நுட்ப மற்றும் மனிதவள நிபுணத்துவத்துடன் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடி சிறுவர் வார்ட் செவ்வாய்கிழமை (செப் 03) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. விமானப்படை ஊடக தகவல்களுக்கமைய, ரூ. 150 மில்லியன் செலவில் ருஹுனு மஹா கதிர்காமம் தேவாலயத்தின் நிதியுதவியுடன் ‘ஹுஸ்ம’ திட்டத்தின் கீழ் இலங்கை விமானப்படையால் இக்கட்டிடத் தொகுதி ஒரு வருடத்திற்குள் கட்டிமுடிக்கப்பட்டது.
Tamil
இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரி தூதுக்குழு
இலங்கை பாதுகாப்பு செயலாளரை சந்திப்பு
இந்திய அரச இணைச் செயலாளர் ஸ்ரீ விஜய் நெஹ்ரா (IAS) தலைமையிலான இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரி (NDC) குழுவொன்று, இன்று (செப். 2) கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுர பாதுகாப்பு அமைச்சில் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தது.
இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட ‘சிமிக் பார்க்’ மற்றும் வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது
இலங்கை இராணுவத்தால் நிறுவப்பட்ட ‘சிமிக் பார்க்’ கிளிநொச்சி" கடந்த 25 (ஆகஸ்ட்) திறந்துவைக்கப்பட்டது. கிளிநொச்சி மக்களின் கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்யவும், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தேவையான அத்தியாவசிய வளங்கள் மற்றும் ஆதரவை வழங்குவதற்காகவும் இது ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.
Tamil
வடக்கு கடற்பகுதியில் பாதிக்கப்பட்ட இந்திய மீன்பிடி படகில் இருந்த 02 மீனவர்களை கடற்படையினரால் மீட்கப்பட்டது
இலங்கைக்கு வடக்கு பகுதியில் கச்சத்தீவில் இருந்து சுமார் 08 கடல் மைல் (சுமார் 14 கி.மீ) தொலைவில் இந்திய கடற்பரப்பில் பாதிக்கப்பட்ட இந்திய மீன்பிடி படகொன்றில் இருந்து 02 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (27 ஆகஸ்ட் 2024) மீட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக
ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட நியமிக்கப்பட்டுள்ளார்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மற்றும் ஆயுதப் படைகளின் தளபதி கௌரவ. ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவை 2024 ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் நியமித்துள்ளார். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா 2024 ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவிடம் இது தொடர்பான நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக கையளித்ததுடன் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
சைபர் பாதுகாப்பு கட்டளை பிரிவின் ‘ஏஜிஸ் லெக்சிகன் 2024’ நடமாடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வெளியுறவு அமைச்சகத்தில் நடத்தப்பட்டது
பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பாதுகாப்பு சைபர் கட்டளை பிரிவின், ஏஜிஸ் லெக்சிகன் 2024 - சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி என்ற தொனிப்பொருளில் நடந்து வரும் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு தொடரின் மூன்றாவது அமர்வு சமீபத்தில் (ஆகஸ்ட் 24) வெளியுறவு அமைச்சகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
Tamil
இந்திய கடற்படையின் ‘INS Mumbai’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Mumbai’ என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 ஆகஸ்ட் 26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
Tamil
4 வது இராணுவ சீஐஎஸ்எம் உலக பயிலிளவல் விளையாட்டு போட்டியில் பெண் பயிலிளவல் அதிகாரி டிகேஏஜீடபிள்யூ சதுரங்கனி வெற்றி
2024 ஆகஸ்ட் 19 முதல் 24 வரை வெனிசுலாவின் கராகஸில் நடைபெற்ற 4 வது இராணுவ சீஐஎஸ்எம் உலக பயிலிளவல் விளையாட்டு போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பெண் பயிலிளவல் சதுரங்கனி பங்கேற்று, நீளம் பாய்தல் போட்டியில் 5.24 மீட்டர் சாதனையுடன் வெற்றி பெற்றார்.
'மித்ர சக்தி' - 10 கூட்டு இராணுவப் பயிற்சி மாதுரு ஓயாவில் நிறைவு
பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை பரிமாறிக்கொள்ளும் நோக்கில் இந்திய மற்றும் இலங்கை இராணுவங்கள் இணைந்து நடாத்திய மித்ர சக்தி இராணுவப் பயிற்சி கடந்த 12ஆம் திகதி ஆரம்பமானதுடன் இறுதி இராணுவப் பயிற்சி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் முன்னிலையில் மாதுரு ஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் இடம்பெற்றது.
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான USS Stockdale என்ற கப்பல்
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 'USS Stockdale' என்ற கப்பல் இன்று (2024 ஆகஸ்ட் 22,) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
67வது தேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்
பாதுகாப்பு செயலாளர் கலந்து கொண்டார்
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இன்று (ஆகஸ்ட் 22) நடந்த தேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழுவின் (NDMCC) 67வது கூட்டத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாண தீயணைப்பு சேவைகள் 'முதல் திறன் பட்டை பரீட்சையின்' நடைமுறைத் தேர்வை நடத்துவதற்காக கடற்படையின் உதவி
கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழ் இயங்கும் தீயணைப்பு சேவைகளின் 'முதல் திறன் பட்டை பரீட்சையின்' நடைமுறைத் தேர்வு 2024 ஆகஸ்ட் 20 ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் ஆரம்பமானது, இதற்காக கடற்படை பொறியியல் திணைக்களத்தின் நிபுணத்துவ ஆதரவு வழங்கப்பட்டது.
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil