செய்திகள்
இராஜாங்க அமைச்சர் தென்னகோனின் எண்ணக் கருவுக்கு அமைய, இளம் வீரர்களை கௌரவித்து, ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன
முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய மாணவர் படையணியின் தேசிய இளைஞர் வீரர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
சீஷெல்ஸ் நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானி
பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
சீஷெல்ஸ் நாட்டின் மக்கள் பாதுகாப்பு படைகளின் பிரதானி பிரிகேடியர் மைக்கல் ரொசெட் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர்
இராஜாங்க அமைச்சர் தென்னகோனை சந்தித்தார்
இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் அதிமேதகு மசூத் இமாத் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன்னை சந்தித்தார்.
சீஷெல்ஸ் நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானி
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
சீஷெல்ஸ் நாட்டின் மக்கள் பாதுகாப்பு படைகளின் பிரதானி பிரிகேடியர் மைக்கல் ரொசெட் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன்னை சந்தித்தார்.
வரலாற்று சிறப்பு மிக்க லாஹுகல நீலகிரி தூபியில் புனித நினைவுச்சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்களை வைக்கும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
லாஹுகலவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நீலகிரி தூபியில் புனித நினைவுச் சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்கள் என்பவற்றை வைக்கும் நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் தலைமையில் இன்று (ஜூலை 15) காலை நடைபெற்றது.
இலங்கை இராணுவத்தின் ‘வீர மாதா’ பாராட்டு நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் தலைமையில் நடைபெற்றது
இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'வீர மாதா' பாராட்டு நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்திய பாதுகாப்பு பேச்சுவார்த்தை பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
இந்திய இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சரண்ஜீத் சிங் தேவ்கன் தலைமையிலான இந்திய பாதுகாப்பு பேச்சுவார்த்தை பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை இன்று (ஜூலை 10) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
அரச வைத்தியசாலைகளில் இருந்து சுகாதார சேவைகளைப்
பெறுவதில் 'விருசர' சலுகை அட்டை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் முயற்சியின் பலனாக. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர்வீரர்களை சார்ந்திருப்பவர்களுக்கும் அங்கவீனமுற்ற இராணுவத்தினருக்கும் அரச வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய நிலையங்களில் சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்ளும் போது முன்னுரிமை சேவையை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய பாதுகாப்பு பேச்சுவார்த்தை பிரதிநிதிகள் குழு பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
இந்திய இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சரண்ஜீத் சிங் தேவ்கன் தலைமையிலான இந்திய பாதுகாப்பு பேச்சுவார்த்தை பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தனர்.
வாழ்க்கையில் முன்னேற இளைஞர்கள் சரியான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் தென்னகோன்
‘புத்திசாலித்தனம், அறிவு மற்றும் திறமை ஆகியவற்றைக் கொண்டிருப்பது போலவே சரியான அணுகுமுறையும் முக்கியம். மாற்றம் ஏற்படுவது கடினம் மற்றும் சில சமயங்களில் முதல் படியே கடினமானது’.
புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கபில டோலகே இன்று (ஜூலை 08) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
Tamil
Tamil
கதிர்காம பாத யாத்திரையில் இராஜாங்க அமைச்சர் தென்னகோன் இணைந்துகொண்டார்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித்த பண்டார தென்னகோன் வருடாந்த கதிர்காம பாத யாத்திரையை மேட்கொண்டார். இராஜாங்க அமைச்சர் தென்னகோன் தொடர்ந்து ஆறாவது முறையாக இவ்வருடம் இப்பாத யாத்திரையை மேட்கொண்டுள்ளார்.
Tamil
புதிய மாலைதீவு உயர்ஸ்தானிகர் இலங்கை பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
இலங்கைக்கான மாலைதீவுக் குடியரசின் புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர் அதிமேதகு மசூத் இமாத் இன்று (ஜூலை 02) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இரசாயன ஆயுத மாநாட்டு வழிகாட்டல் நிகழ்ச்சி கொழும்பில் நடைபெற்றது
இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு (OPCW) இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான வழிகாட்டல் நிகழ்ச்சி ஜூன் 24 முதல் 28 வரை கொழும்பில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் எழுதப்பட்ட
நூல் ஜனாதிபதி தலைமையில் வௌியீடு
முப்பது வருடகால யுத்தத்தை நிறைவு செய்ய சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் “இராணுவ தளபதி தேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி – இந்த யுத்தம் அடுத்த தளபதி வரையில் நீடிக்க இடமளியேன்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (28) கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கில் நடைபெற்றது.
Tamil
மருத்துவ காரணங்களுக்காக சேவையில் இருந்து ஓய்வு பெற்ற படைவீரர்களின் கொடுப்பனவுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்
சேவையில் ஈடுபட்டிருந்த போது பல்வேறு குறைபாடுகள் காரணமாக சேவையில் இருந்து ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற படைவீரர்கள் குழு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனை அவர்களை சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடினர்.
ஆட்கடத்தல் தொடர்பான பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி உப குழுவிற்கான இரண்டாவது கூட்டம் இடம்பெற்றது
ஆட்கடத்தல் தொடர்பான பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி உப குழுவிற்கான இரண்டாவது கூட்டம் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெற்றது.
பதுளை மற்றும் பசறை பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களை அடையாளம் காண ஆய்வு நடத்தப்பட்டது
பதுளை மற்றும் பசறை பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் பகுதிகளை ஆய்வு செய்வதற்காக LiDAR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விரிவான கணக்கெடுப்பு மற்றும் வரைபட நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இலங்கை விமானப்படையின் புவியியல் தகவல் அமைப்பு மற்றும் தொலைநிலை உணர்திறன் குழுவின் பணியாளர்கள் உதவியுள்ளனர் என விமானப்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரலாற்றில் தொடர்ந்து மூன்றாவது தடவையாக அமெரிக்க ஆட்கடத்தல் அறிக்கையில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆட்களைக் கடத்தல் (TIP) அறிக்கையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இரண்டாவது நிலையை அடைந்து இலங்கை வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் விசேட பொசன் பௌர்ணமி தின நிகழ்வுகள் அனுராதபுரத்தில் ஆரம்பம்
சந்தஹிரு மஹா சே பொசன் வலயத்தின்’ ஆரம்ப நிகழ்வு (ஜூன் 21) வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுர புனித நகரத்தில் உள்ள சந்தஹிரு சேயா ஸ்தூபி வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.