இந்திய தேசிய மாணவர் படையணி பணிப்பாளரின் அழைப்பின் பேரில், இந்தியாவின் புது டில்லியில் அண்மையில் (ஜன. 26) நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் இலங்கை நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை தேசிய மாணவர் படையணியின் ஒரு குழு பங்கேற்றது.
Tamil
பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் ஒன்றான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தினால் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு முழு தானியங்கி ஆயுத பயிற்சி சிமுலேட்டரை அண்மையில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், புதன்கிழமை (ஜன.31) பாகிஸ்தானின் கடற்படைக் கப்பல் (பிஎன்எஸ்) ‘சைஃப்’ க்கு விஜயம் செய்தார். இக்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை (ஜன.30) இலங்கை வந்தடைந்தது.
பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சுகாதாரத் துறை ஊழியர்களின் தொழிற்சங்கங்களின் நாடளாவிய வேலைநிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் இலங்கை இராணுவம் இன்று (பெப்ரவரி 01 ) அரச வைத்தியசாலைகளுக்கு படையினர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை தடையின்றி வழங்குவது ஆகும்.
நாட்டின் 76வது தேசிய சுதந்திர தின விழாவை பெருமையுடன் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ அசோக பிரியந்த தெரிவித்தார்.
76வது சுதந்திர தின ஒத்திகையின் போது விபத்தில் காயமடைந்த இராணுவ மற்றும் விமானப்படை பராட்ரூப் வீரர்களின் நலன்களை நேரில் விசாரிப்பதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் கொழும்பு, தேசிய வைத்தியசாலை மற்றும் இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.
76வது சுதந்திர தின ஒத்திகையின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பராட்ரூப் வீரர்களின் உடல்நிலை குறித்து நேரில் விசாரிப்பதற்காக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கொழும்பு, தேசிய வைத்தியசாலை மற்றும் இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.
பாகிஸ்தானின் கடற்படைக் கப்பலான (பிஎன்எஸ்) ‘சைஃப்’ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (ஜனவரி 30) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றதாக இலங்கை கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், நேற்று (ஜன. 29) மாலை ஐக்கிய இராச்சிய கடற்படை கப்பலான ‘HMS க்கு விஜயம் செய்தார். இக்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 28) இலங்கை வந்தடைந்தது.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, ஐக்கிய இராச்சிய கடற்படைக் கப்பல் ‘HMS Spey’ ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கலேவெலயில் புனரமைக்கப்பட்ட பொது விளையாட்டு மைதானம் 21 ஜனவரி 2024 ம் திகதியன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன், மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜானக பண்டார தென்னகோன், மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ ஆகியோர் கலந்துகொண்டனர்.
வடக்கு கடல் பகுதியில் யாழ் குடாநாட்டு பாலைத்தீவில் “சீகல்” எனும் நீர் பயிற்சி ஜனவரி 08 – 11 வரை முப்படையினரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
“தேசியப் பாதுகாப்புத் துறையில், அறிவு என்பது அதிகாரம் மட்டுமல்ல; இது நமது பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தின் அடித்தளமாக உள்ளது" என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று பத்தரமுல்லையில் உள்ள தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தில் (INSS) நடைபெற்ற 'பாதுகாப்பு மீளாய்வு-2023' வெளியீட்டு விழாவின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார். (ஜனவரி 19).
நேற்று (ஜனவரி 17) கொழும்பு ரோயல் கல்லூரியின் MAS அரங்கில் நடைபெற்ற 96வது தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் நிறைவு விழாவில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
உலகப் பொருளாதார மன்றத்தின் 54ஆவது வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நேற்று (ஜனவரி 13) சுவிட்சர்லாந்துக்கு பன்னிரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடுதிரும்பும் ஜப்பானின் நிதியமைச்சரும், நிதிச் சேவைகள் இராஜாங்க அமைச்சரும், நிதி துஷ்பிரயோகத்திற்கு பொறுப்பான அமைச்சருமான திரு. சுசுகி ஷுனிச்சி அவைகளை இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் உத்தியோகபூர்வமாக நேற்று (ஜனவரி 12) வழியனுப்பி வைத்தார்.
ஜப்பானின் நிதியமைச்சரும், நிதிச் சேவைகள் இராஜாங்க அமைச்சரும், நிதி துஷ்பிரயோகத்திற்கு பொறுப்பான அமைச்சருமான திரு. சுசுகி ஷுனிச்சி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (ஜனவரி 11) இலங்கையை வந்தடைந்தார்.
இந்திய கடற்படைக் கப்பல் (ஐஎன்எஸ்) ‘கப்ரா’ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு திங்கள்கிழமை (ஜனவரி 8) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றதாக இலங்கை கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2023/2024 கல்வியாண்டிற்கான இளங்கலை பட்டப்படிப்பு திட்டங்களுக்கு வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு தகுதிகளை பெற்ற மாணவர்களை பதிவு செய்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை இலங்கை கடற்படையின் நிவாரணக் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றது.