செய்திகள்
இலங்கை இராணுவம் அபார வெற்றிகளுடன் சம்பியனாக தெரிவு
மஹரகம தேசிய இளைஞர் நிலையத்தில் மார்ச்11 முதல்13 வரை இலங்கை தேசிய வுஷூ கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட 18வது தேசிய வுஷூ போட்டியின் சம்பியன்ஷிப் மற்றும் இலங்கை உயிர்காப்பு சங்கத்தினால் (SLASU) மார்ச்15 மற்றும்16 ஆம் திகதிகளில் கல்கிசை கடற்கரையில் நடத்தப்பட்ட 84வது டூ மைல் கடல் நீச்சல் சாம்பியன்ஷிப்பின் போட்டிகளில் இராணுவ போட்டியாளர்கள் போட்டியின் அனைத்து சம்பியன்ஷிப்பையும் பெற்றுக் கொண்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர்க்களத்தில் போர் வீரர்களுடன் தோளோடு தோள் நின்று அவர்களின் உடல்நிலையை தொடர்ந்து கவனித்து அவர்களின் மன உறுதியை மேன்படுத்துவதற்கு அர்பணிப்புடன் சேவையாற்றிய இராணுவ மருத்துவர்களின் சேவை பாராட்டுக்குரியது - பாதுகாப்பு செயலாளர்
இந்த ஆண்டு இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியானது "பல்வகைப்படுத்தலின் மூலம் இராணுவ மருத்துவத்தில் சிறந்து விளங்குதல்" என்ற தலைப்பை சரியான நேரத்தில் தேர்ந்தெடுத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இராணுவ மருத்துவத்தில் சிறந்து விளங்குவது இராணுவ மருத்துவத்தில் வெறும் அறிவு மற்றும் திறன்களை வளர்ப்பதன் மூலம் அடைய முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
தற்போதைய வறட்சியான காலநிலை மற்றும் காட்டுத் தீ தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்
நாட்டில் தற்போது நிலவி வரும் வறட்சியான காலநிலை மற்றும் காட்டுத் தீ அதிகரிப்பு குறித்து விளக்கமளிக்கும் வகையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நேற்று (மார்ச் 13) நடத்தினார்.
Tamil
வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை:
மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அதிகரிப்பு
வளிமண்டலவியல் திணைக்களம் கடந்த மார்ச் 13ஆம் திகதி வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, இன்று (14) மேற்கு, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அபாயகரமான மட்டத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன அரசினால் சிறப்பு வெடிகுண்டுகளை அகற்றும்
கருவி இராணுவத்திற்கு வழங்கப்பட்டது
சீன இராணுவ மானியத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட விசேட வெடிபொருட்களை அகற்றும் உபகரணங்களை இலங்கை இராணுவத்தினர் இன்று (மார்ச் 13) சீன மக்கள் குடியரசின் தூதுவர் மேன்மைதாங்கிய கியூ சென்கொங் மற்றும் இராணுவத் தலைமையகத்தின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது நன்றியுடன் ஏற்றுக்கொண்டனர்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் யாழ். படையினருக்கு உரை
கௌரவ பிரேமித பண்டார தென்னகோன் அவர்கள் யாழ் விமான படை கண்காட்சிக்கு செல்கையில் 09 மார்ச் 2024 அன்று பலாலி விமான நிலையத்தில் யாழ் பாதுகாப்புப் படை தலைமையக படையினருக்கு உரை நிகழ்தினார்.
Tamil
Tamil
கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட 15 தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்கள் நோயாளர்களுக்கு விநியோகிப்பதற்காக கண்டி உயர்தர பெண்கள் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டன
இலங்கைக் கடற்படையில் சமூக நலத் திட்டத்தின் கீழ், கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட 15 தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்கள் 2024 மார்ச் மாதம் முதல் வாரத்தில் கண்டி உயர்தர பெண்கள் பாடசாலையின் ‘Interact Club’ சங்கத்திடம் கையளிக்கப்பட்டது.
நேபாளத்தில் ஐ.நா களப் பயிற்சி சாந்தி பிரயாஸ்- IV இல் இராணுவ படையினர்
சாந்தி பிரயாஸ் - IV களப் பயிற்சி நேபாள ஆயுதப் படைகளால் அமெரிக்க இந்து-பசுபிக் கட்டளையின் கீழ் உலகளாவிய அமைதி நடவடிக்கை முன்முயற்சியின் இணை அனுசரணையுடன் நடத்தப்பட்டது. இது நேபாளத்தில் உள்ள பிரேந்திரா அமைதி நடவடிக்கை பயிற்சி நிலையத்தில் பெப்ரவரி 2024 மார்ச் 04 முதல் 20 வரை நடைபெற்றது.
541 வது காலாட் பிரிகேடினால் மீள் சவ்வூடுபரவல் குடிநீர் திட்டம்
541வது காலாட் பிரிகேட் படையினர் 06 மார்ச் 2024 அன்று பிரிகேடில் மீள் சவ்வூடுபரவல் குடிநீர் அமைப்பை சமீபத்தில் திறந்து வைத்தனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர்
பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்
புதிய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அவர்கள் இன்று (மார்ச் 11) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இலங்கை இராணுவத்தினரால் அலகல்ல மலையில் வீழ்ந்த
பல்கலைக்கழக மாணவர் மீட்பு
611 வது காலாட் பிரிகேடின் 8 வது இலங்கை சிங்க படையணி படையினர் மார்ச் 10 ஆம் திகதி கேகாலை அலகல்ல மலையின் செங்குத்து சரிவில் விழுந்த பல்கலைக்கழக மாணவரை மீட்டனர்.
Tamil
Tamil
54 வது படைப்பிரிவினரால் வருடாந்த ‘பாதயாத்திரை’ பக்தர்களுக்கு குடிநீர் வசதி
542 வது காலாட் பிரிகேடின் 4வது கஜபா படையணி மற்றும் 8வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் வருடாந்த புனித பாதயாத்திரை பக்தர்களுக்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 08) பயணத்தின் போது பல இடங்களில் குடிநீர் வழங்கினர்.
Tamil
Tamil
Tamil
மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் பிரதம அதிகாரியை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் சந்தித்தார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் பிரதம அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் அவர்களை செவ்வாய்க்கிழமை (மார்ச் 05) மாலைதீவின் தேசிய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சந்தித்தனர்.
மாலைதீவு பாதுகாப்பு அமைச்சரை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் சந்தித்தார்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மொஹமட் கஸ்ஸான் மஃமூனை நேற்று (மார்ச் 05) மாலைதீவு பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.
Tamil
Tamil
Tamil