செய்திகள்
அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மரியாதை நிமித்தம் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் அன்டணி சி. நெல்சன் (அமெரிக்க இராணுவம்) உட்பட அமெரிக்க தூதரகத்தின் சில அதிகாரிகள் இன்று காலை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.
போரில் உயிரிழந்த போர் வீரர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்த போர் வீரர்களின் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் முன்னேற்றம் தொடர்பில் மதிப்பாய்வு கூட்டம் நடைபெற்றது
நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் சலுகைகள் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கான கூட்டமொன்று, இன்று (ஜனவரி 28) பாதுகாப்பு பிரதி அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தளபதி பாதுகாப்பு செயலாளரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் (NDC) தளபதி மேஜர் ஜெனரல் சமில முனசிங்க (ஓய்வு), இன்று (ஜனவரி 28) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இலங்கை மியான்மார் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
இலங்கையில் உள்ள மியான்மார் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் சாவ் மோ எல்வின், கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுராவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜனவரி 28) பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இலங்கை விமானப்படையின் 20வது தளபதியாக எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்
இலங்கை விமானப்படையின் (SLAF) புதிய தளபதியாக எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, WWV, RWP, RSP மற்றும் மூன்று பார்கள், USP, Fndu (சீனா), psc, qhi அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் அவுஸ்திரேலிய தின நிகழ்ச்சி நடைபெற்றது
ஜனவரி 26ஆம் திகதி நிகழும் அவுஸ்திரேலிய தினத்தைக் முன்னிட்டு கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் நேற்று (ஜனவரி 27) அவுஸ்திரேலிய தின நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கௌரவ Dr.நளிந்த ஜயதிஸ்ஸ இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
விமானப்படைத் தளபதி பிரியாவிடை நிமித்தம் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
ஒய்வு பெரும் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, திங்கட்கிழமை (ஜனவரி 27) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்.
பாதுகாப்பு செயலாளரை பிரியாவிடை நிமித்தம்
விமானப்படைத் தளபதி சந்தித்தார்
சேவையை விட்டு ஓய்வுபெறும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ இன்று (ஜனவரி 27) ஸ்ரீ ஜெயவர்தனபுராவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் 76வது இந்திய குடியரசு தின விழா நடத்தப்பட்டது
இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) கொழும்பு Indian Houseல் இந்தியாவின் 76வது குடியரசு தினத்தைக் கொண்டாடியது.
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் (NDC) தளபதி மேஜர் ஜெனரல் சமில முனசிங்க (ஓய்வு), இன்று (ஜனவரி 27) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
பாகிஸ்தான் கடற்படை அகாடமியில் சாதனை படைத்த மிட்ஷிப்மேன் தென்னகோனை பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராட்டினார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படை அகாடமியில் (PNA) நடைபெற்ற 122வது மிட்ஷிப்மேன் மற்றும் 30வது குறுகிய சேவை ஆணைய (SSC) பாடநெறியின் அதிகாரமளிப்பு விழாவின் போது, Sword of Honour விருதை பெற்ற இலங்கை கடற்படையின் மிட்ஷிப்மேன் T M I விமுக்தி தென்னகோனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
26வது ASEAN பிராந்திய மன்ற பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / நிறுவனங்களின் தலைவர்களின் கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது
26வது ASEAN பிராந்திய மன்ற பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / நிறுவனங்களின் தலைவர்களின் கூட்டம் (ARF HDUCIM) ஜனவரி 23ஆம் திகதி கொழும்பு Galle Face ஹோட்டலில் ஆரம்பமாகியது.
சுத்தமான இலங்கை திட்டம் குறித்த மற்றொரு விழிப்புணர்வு நிகழ்ச்சி பாதுகாப்பு அமைச்சில் நடத்தப்பட்டது
"சுத்தமான இலங்கை" திட்டம் குறித்து அமைச்சின் ஊழியர்களுக்கு அறிவுறுத்த மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த பாதுகாப்பு அமைச்சில இன்று (ஜனவரி 24) மற்றொரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜனாதிபதியின் வழிகாட்டுதல்களுக்கமைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், கிராமப்புற வறுமையை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்களை ஊக்குவித்தல் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுதல் உள்ளிட்ட முக்கிய சமூக-பொருளாதார சவால்களை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ASEAN பிராந்திய மன்றம் - HDUCIM நிகழ்வில் பாதுகாப்பு கல்வி மற்றும் பிராந்திய
ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை பாதுகாப்பு பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) 26வது ASEAN பிராந்தியத்தின் பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டத்தில் (ARF-HDUCIM) உரையாற்றுகையில், உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்பவும் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்தவும் பாதுகாப்பு கல்வியின் முக்கிய பங்கை வலியுறுத்தினார்.
CSD ற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் KHP பாலித்த பெர்னாண்டோ (ஓய்வு), இன்று (ஜனவரி 23) தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
DSCSC யின் கட்டளை அதிகாரி பாதுகாப்பு செயலாளரை
மரியாதையை நிமித்தம் சந்தித்தார்
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் HHKSS ஹேவகே, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜனவரி 22)சந்தித்தார்.
தனியார் பாதுகாப்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை
ஒழுங்குபடுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சில் சிறப்பு கலந்துரையாடல்
தனியார் பாதுகாப்பு சேவை வழங்கும் நிறுவனங்களினால் செயல்படுத்தப்படும் வேலைகள் மற்றும் அவை தொடர்பாக நிலவும் பிரச்சினைகளை ஆராய்வதற்கும், அச்சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான வழிமுறையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று திங்கள் கிழமை (ஜனவரி 20) பாதுகாப்பு பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஏட்பட்டுள்ள அனர்த்த நிலைமை
குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது
அனர்த்தங்களினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டு தொகை 250,000 ரூபாயிலிருந்து 1 மில்லியன் ரூபாயாக அதிகரிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது
CResMPA திட்டம் குறித்து கலந்துரையாட உலக வங்கி பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் சந்திப்பு
உலக வங்கியின் பிராந்திய நாட்டு இயக்குநர் (மாலத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை) டேவிட் சிஸ்லன் தலைமையிலான உலக வங்கி தூதுக்குழு குழு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) திங்கட்கிழமை (ஜனவரி 20) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தது.
பாதுகாப்பு அமைச்சசு பொது தினத்தில் போர் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் ஜனவரி 10 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற பொது தினத்தின் போது பாதுகாப்பு அமைச்சு போர் வீரர்கள் மற்றும் உயிநீத்த போர் வீரர்களின் குடும்பங்களின் நலனுக்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆகியோரின் அறிவுறுத்தல்களுக்கு அமையவும், ஓய்வு பெற்ற, ஊனமுற்ற வீரர்கள் மற்றும் உயிர் நீத்த போர்வீர்ர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளித்தது.
இலங்கை மற்றும் மாலத்தீவு கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் எண்ணெய் கசிவு மீட்பு பயிட்சியை நிறைவு செய்தனர்
இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் (SLCG) ஒன்பது (09) உட்பட பத்து (10) இலங்கை அதிகாரிகள், மாலத்தீவு கடலோர பாதுகாப்பு படை மற்றும் மாலத்தீவு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் பங்கேற்பாளர்களுடன் IMO நிலை 1 மற்றும் நிலை 2 பயிற்சியை வெற்றிகரமாக முடித்தனர். கூட்டு இயற்கை பாதுகாப்பு குழு (JNCC) வுடன் இணைந்து அம்பிபார் (Ambipar) ஏற்பாடு செய்த இந்த பயிற்சிக்கு சமுத்திர நாட்டு கூட்டாண்மை திட்டம் (OCPP) நிதியுதவி அளித்ததாக SLCG ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மழையுடன் கூடிய வானிலை மேலும் தொடரும் - வானிலை ஆராய்ச்சி நிலையம்
வானிலை ஆராய்ச்சி நிலையத்தினால் இன்று (ஜனவரி 20) காலை வெளியிடப்பட்ட வானிலை அறிக்கைக்கமைய தற்போது நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும்.
Tamil
Tamil