செய்திகள்
“சீகல்” பயிற்சி 2024 வெற்றிகரமாக நிறைவு
வடக்கு கடல் பகுதியில் யாழ் குடாநாட்டு பாலைத்தீவில் “சீகல்” எனும் நீர் பயிற்சி ஜனவரி 08 – 11 வரை முப்படையினரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
Tamil
இலங்கையில் தேசிய பாதுகாப்பு பற்றிய முதன்மையான சிந்தனைக் குழுவாக, INSS அறிவுசார் ஆய்வுகளின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. - பாதுகாப்பு செயலாளர்
“தேசியப் பாதுகாப்புத் துறையில், அறிவு என்பது அதிகாரம் மட்டுமல்ல; இது நமது பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தின் அடித்தளமாக உள்ளது" என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று பத்தரமுல்லையில் உள்ள தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தில் (INSS) நடைபெற்ற 'பாதுகாப்பு மீளாய்வு-2023' வெளியீட்டு விழாவின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார். (ஜனவரி 19).
96வது தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பாதுகாப்பு செயலாளர் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார்
நேற்று (ஜனவரி 17) கொழும்பு ரோயல் கல்லூரியின் MAS அரங்கில் நடைபெற்ற 96வது தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் நிறைவு விழாவில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
Tamil
பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்
உலகப் பொருளாதார மன்றத்தின் 54ஆவது வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நேற்று (ஜனவரி 13) சுவிட்சர்லாந்துக்கு பன்னிரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
ஜப்பானிய அமைச்சரை இராஜாங்க அமைச்சர் தென்னகோன் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தார்
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடுதிரும்பும் ஜப்பானின் நிதியமைச்சரும், நிதிச் சேவைகள் இராஜாங்க அமைச்சரும், நிதி துஷ்பிரயோகத்திற்கு பொறுப்பான அமைச்சருமான திரு. சுசுகி ஷுனிச்சி அவைகளை இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் உத்தியோகபூர்வமாக நேற்று (ஜனவரி 12) வழியனுப்பி வைத்தார்.
Tamil
இலங்கை வந்தடைந்த ஜப்பான் நிதியமைச்சரை இராஜாங்க அமைச்சர் தென்னகோன் வரவேற்றார்
ஜப்பானின் நிதியமைச்சரும், நிதிச் சேவைகள் இராஜாங்க அமைச்சரும், நிதி துஷ்பிரயோகத்திற்கு பொறுப்பான அமைச்சருமான திரு. சுசுகி ஷுனிச்சி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (ஜனவரி 11) இலங்கையை வந்தடைந்தார்.
இந்திய கடற்படைக் கப்பல் (ஐஎன்எஸ்) ‘கப்ரா’ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
இந்திய கடற்படைக் கப்பல் (ஐஎன்எஸ்) ‘கப்ரா’ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு திங்கள்கிழமை (ஜனவரி 8) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றதாக இலங்கை கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களை
இளங்கலை பாடநெறிகளுக்கு பதிவு செய்துள்ளது
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2023/2024 கல்வியாண்டிற்கான இளங்கலை பட்டப்படிப்பு திட்டங்களுக்கு வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு தகுதிகளை பெற்ற மாணவர்களை பதிவு செய்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு கடற்படை உதவி வழங்குகிறது
நாட்டில் தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை இலங்கை கடற்படையின் நிவாரணக் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றது.
வடக்கிலுள்ள பாடசாலைகள் இலங்கை விமானப்படையின் 'நட்பின் சிறகுகள்' நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் புனரமைப்பு
இலங்கை விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சமூக நலப் பணியாக மேற்கொள்ளப்படும் பாடசாலை புனரமைப்புத் திட்டத்தின் கீழ், காங்கேசன்துறை மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தின் புதிய பிரதான மண்டபக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் (ஜன. 6) பாடசாலையில் இடம்பெற்றது.
சேவைக் காலம் முடிந்து செல்லும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பிள்டன் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
சர்வதேச ஓபன் டேக்வாண்டோ ஆசிய சாம்பியன்ஷிப்பில் பாதுகாப்பு சேவைகள் கல்லூரி மாணவர்கள் சிறந்த வெற்றிகளைப் பெற்றுள்ளனர்
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற சர்வதேச ஓபன் டேக்வாண்டோ ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில், கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி மாணவர்கள் ஒரு தங்கப் பதக்கத்தையும் மூன்று வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளனர்.
அமைச்சின் புதிய பதில் மேலதிக செயலாளர் - (பாதுகாப்பு) நியமனம்
பாதுகாப்பு அமைச்சின் புதிதாக நியமிக்கப்பட்ட பதில் மேலதிகச் செயலாளர் - (பாதுகாப்பு) திரு.ஹர்ஷ விதானாராச்சி 2024 ஜனவரி 01ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்
இலங்கை-பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலர்கள் தலைமையில் இலங்கை-பாகிஸ்தான் நான்காவது பாதுகாப்பு கலந்துரையாடல் ஆரம்பம்
நான்காவது இலங்கை-பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடல் இன்று (ஜனவரி 03) ஜயவர்தனபுரயிலுள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நடைபெற்றது. இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையில் இலங்கை பிரதிநித்துவப்படுத்தி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமை தாங்கியதுடன், பாகிஸ்தான் பிரதிநித்துவப்படுத்தி அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஹமூத் உஸ் ஸமான் கான் தலைமை வகித்தார்.
Tamil
இராணுவத்தினரால் கொழும்புத்துறையைச் சேர்ந்த குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிப்பு
கொழும்புத்துறையில் வசிக்கும் நான்கு பிள்ளைகளைக் கொண்ட ஏழை குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன் 17வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் புதிய வீடொன்றை நிர்மாணித்து பயனாளி குடும்பத்திற்கு அண்மையில் கையளித்தனர்.
சரியான தீர்மானங்களுடன் 2024 ஆம் ஆண்டில்
நாட்டை துரித வளர்ச்சிக்கு இட்டுச் செல்வோம்
சரியான தீர்மானங்களுடன் இவ்வருடத்திற்குள் இலங்கையை துரித பொருளாதார அபிவிருத்தியை நோக்கி கொண்டுச் செல்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சோமாவதி விகாரை அமைந்துள்ள பகுதிக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயம்
பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சோமாவதி விகாரை அமைந்துள்ள பகுதிக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் நேற்று (டிசம்பர் 31) விஜயம் செய்துள்ளார்.
'பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அனைவரும் மிகுந்த
அர்ப்பணிப்புடன் பணியாற்ற முயற்சிக்க வேண்டும்' - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
புத்தாண்டின் முதல் நாளான இன்று அமைச்சின் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் இன்று (ஜனவரி 1) பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது.
கிறிஸ்மஸ் வாழ்த்து
கிறிஸ்மஸ் என்பது எதிர்பார்ப்புக்களின் திருநாளாகும். "கண்ணீருடன் இருளில் சென்ற மக்களுக்கு ஔி கிட்டியது" அந்த எதிர்பார்ப்புக்களைப் புதுப்பிப்பதற்கான கடமை மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றி அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புக்களை தோற்றுவிக்கும் திருநாளாக இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகை அமைய பிரார்த்திப்போம்.
Tamil
இந்தோனேசிய கடற்படைக் கப்பல் KRI DIPONEGORO- 365 இலங்கையை வந்தடைந்தது
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேட்கொண்டு, இந்தோனேசிய கடற்படைக் கப்பல் KRI DIPONEGORO- 365 நேற்று (டிச. 21) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.