செய்திகள்
Tamil
இந்திய தூதரக புதிய உதவி பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்னல் மன்தீப் சிங் நேகி இன்று (டிசம்பர் 20) பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
Tamil
Tamil
சிங்க படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி ‘ஆசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் - 2023’ல் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள்
இலங்கை சிங்க படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி II எஸ்.எஸ் பிரதீப் மலேசியாவில் டிசம்பர் 10 - 18 திகதிகளில் அண்மையில் நடைபெற்ற ‘ஆசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் 2023’ போட்டியில் 3 வெள்ளிப் பதக்கங்களையும் 1 வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.
முல்லைத்தீவு, வன்னி மற்றும் யாழ். படையினர் வெள்ள நிவாரணப் பணியில்
கடந்த திங்கட்கிழமை (18) பிற்பகல் தொடக்கம் 48 மணி நேரத்தில் முல்லைத்தீவு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த அடைமழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 109 குடும்பங்களைச் சேர்ந்த 228 பொதுமக்கள், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 8வது இராணுவ பீரங்கி படையணியின் படையினரால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
சீரற்ற காலநிலை தொடரக்கூடும்
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
Tamil
Tamil
Tamil
Tamil
உலக சவால்களை வெற்றிக்கொள்ளக்கூடிய இராணுவத்தினரை உருவாக்க பாதுகாப்பு துறையினரை புதிய தெரிவுகளுடன் கூடியவர்களாக்க வேண்டும் -ஜனாதிபதி
உலக சவால்களை வெற்றிக்கொள்ளக்கூடிய இராணுவத்தினரை உருவாக்க பாதுகாப்பு துறையினரை புதிய தெரிவுகளுடன் கூடியவர்களாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
Tamil
நாடு திரும்பும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்
இலங்கையில் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் இயன் கெய்ன் இன்று (டிசம்பர் 13) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
நாடு திரும்பும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்
தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்க்கி (ஓய்வு) இன்று (டிசம்பர் 13) கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
Tamil
எகிப்திய தூதுவர் இராஜாங்க அமைச்சர் தென்னகோனை சந்தித்தார்
இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அதிமேதகு மாஜித் மோஸ்லே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை இன்று (டிசம்பர் 13) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
Tamil
கடும் மழை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் கொழும்பு அவசர செயற்பாட்டு மையத்தில் விசேட கலந்துரையாடல்
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை தொடர்பான அவசரகால நிலைமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் இடம்பெற்றது.
பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை பிரதிநிதிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தனர்.
இலங்கை உயர் மட்டத்தை நோக்கிய நம்பிக்கையான பயணத்தில் உள்ளது - பாதுகாப்பு செயலாளர்
இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் எமது ஆயுதப் படைகள் முக்கியப் பங்காற்றியுள்ளன. இந்த நாட்டின் வரலாற்றில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக நீடித்த கொடூரமான பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போராட்டத்தில், வெற்றிகரமான இராணுவத் தலைமைகளிலும் சில சமயங்களில் போர்க்களத்தில் பலவீனமான சூழ்நிலைகளிலும் பல அனுபவங்களை பெற்றுள்ளோம்.
பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை பிரதிநிதிகள்
பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தனர்.
Tamil
73வது 'கடற்படை தினத்தை' கொண்டாடும் இலங்கை கடற்படையினருக்கு வாழ்த்துகள்
இலங்கை கடற்படை தனது 73வது ஆண்டு நிறைவை இன்று (டிசம்பர். 09) கொண்டாடுகிறது. நாட்டின் முதல் தற்காப்பு வரிசையாக அறியப்படும் இலங்கை கடற்படையானது, சமாதானத்தின் புதிய சகாப்தத்தை ஏற்படுத்துவதில் இன்றியமையாத பங்கை ஆற்றியுள்ளது.