--> -->

செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஓய்வு பெற்ற கொடி நிலை அதிகாரிகளின் சங்கம் ஏற்பாடு செய்த ‘மாஸ்டர் மைண்ட்ஸ் - 2023’ போட்டி நிகழ்வின் வெற்றியாளர்களுக்கு பாதுகாப்பு செயலாளரினால் விருதுகள் வழங்கிவைப்பு

இலங்கை ஓய்வு பெற்ற கொடி நிலை அதிகாரிகளின் சங்கம் ஏற்பாடு செய்த 'மாஸ்டர் மைண்ட்ஸ் - 2023' போட்டி நிகழ்வு பொரலஸ்கமுவ, கோல்டன் ரோஸ் ஹோட்டலில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) இடம்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவ மருத்துவமனையின் லெப்டினன் கேணல் (டாக்டர்) கே. சுதர்ஷன் அவர்களுக்கு அமெரிக்க விருது

உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக நிறை கொண்ட சிறுநீரகக் கல்லை அகற்றி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த கொழும்பு இராணுவ மருத்துவமனையின் வைத்திய நிபுணர் லெப்டினன் கேணல் (டாக்டர்) குகதாஸ் சுதர்ஷன் அவர்கள் புதன்கிழமை (ஓகஸ்ட் 23) அமெரிக்க ஐக்கிய ஆராய்ச்சி பேரவையினால் அமெரிக்கவின் ஆண்டின் சிறந்த சிறுநீரக மருத்துவர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அதிகரித்து வரும் காட்டுத் தீ குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கவனம் செலுத்தினார்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை மற்றும் காட்டுத் தீ அதிகரிப்பு குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களின் தலைமையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட பல்லின சமூக அமைப்பினால் இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ. 1.2 மில்லியன் பெறுமதியான கல்வி
புலமைப்பரிசில்கள் வழங்கி வைப்பு

க.பொ.த. (சாதாரண தரம்) பரிட்சையில் 9 ‘A’ சித்திகளுடன் சிறந்து விளங்கிய இராணுவ வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கான ரூ.1.2 மில்லியன் பெறுமதியான புலமைப்பரிசில் உதவித்தொகைகள் ரணவிரு சேவா அதிகாரசபையினால் வழங்கி வைக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் சேனக பியன்வில பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை இன்று (ஆகஸ்ட் 23) கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்தார்.



கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் சேனக பியன்வில பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்

ஜனாதிபதியின் இரண்டு நாட்களுக்காண  சிங்கப்பூர் விஜயத்தின் காலப்பகுதியில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உட்பட நான்கு இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நாளை (21) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.



கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஹோமாகம தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ மேற்கு படையினர் அணைப்பு

வியாழக்கிழமை (ஓகஸ்ட் 17) மாலை ஹோமாகம நீர் பராமரிப்பு தொழில்நுட்ப இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை இராணுவத்தினர் தீயணைப்பு படையினரின் உதவியுடன் இணைந்து கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கிழக்கில் இராணுவத்தினரால் முன்பள்ளி பாடசாலை புனரமைப்பு

இராணுவத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட கதிரவெளி, புதூரில் உள்ள முன்பள்ளி பாடசாலை ஒன்று இலங்கை இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

முன்னாள் படைவீரர் சங்கத்திற்கான நிரந்தர அலுவலகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு

இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் (SLESA) நீண்டகால தேவையை நிறைவேற்றும் வகையில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (ஆகஸ்ட் 17) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் ஒதுக்கப்பட்ட காணியில் முன்னாள் படைவீரர் சங்கத்தின் உத்தேச கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய – இலங்கை உறவு என்பது நட்புக்கு அப்பாற்பட்ட சகோதரத்துவமாகும்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் மூலம் இந்திய – இலங்கை உறவுகள் மேலும் வலுப்பெற்றதுடன் எதிர்காலத்தில் இருநாடுகளும் பரந்துபட்ட புரிதலுடன் செயற்பட வேண்டும் என எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர்
பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மட் பாரூக் இன்று (ஆகஸ்ட் 16) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் முல்லைத்தீவு மக்களுக்கு கண் சிகிச்சை முகாம் மற்றும் மூக்குகண்ணாடி வழங்கல்

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 68 வது காலாட் படைப்பிரிவு படையினரால் ஞாயிற்றுக்கிழமை (13 ஓகஸ்ட்) உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் கண் மருத்துவ சிகிச்சை முகாமின் போது பல்வேறு பார்வை குறைபாடுகள் மற்றும் கண் நோய்களால் பாதிக்கப்பட்ட சுமார் 464 பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளைப் பெறுவதற்கான அரிய வாய்ப்பு கிடைத்தது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ.2.76 மில்லியன் பெறுமதியிலான கல்வி புலமைப்பரிசில்கள் ரணவிரு சேவா அதிகாரசபையினால் வழங்கி வைப்பு

க.பொ.த. (சாதாரண தரம்) பரிட்சையில் சித்தி பெற்ற இராணுவ வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 23 மாணவர்களுக்கான ரூ. 2.76 மில்லியன் பெறுமதியான புலமைப்பரிசில் உதவித்தொகைகள் ரணவிரு சேவா அதிகாரசபையினால் இன்று (ஆகஸ்ட் 15) வழங்கி வைக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்து-பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு - 2023 கொழும்பில் தொடங்கியது

அமெரிக்க இந்து-பசிபிக் கடல்சார் கட்டளை (US Indo – Pacific Command - INDOPACOM), இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்து-பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு – 2023 (Indo-Pacific Environmental Security Forum-IPESF) கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இன்று (2023 ஆகஸ்ட் 14) தொடங்கியதுடன் இதன் தொடக்க விழா இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சுங்,


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஆட்கடத்தலை தடுக்க ஒருமித்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது -
பாதுகாப்பு செயலாளர்

ஆட்கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் அதிகருத்து வருவதுடன், இது ஒரு சர்வதேச வியாபாரமாக மாறிவருகிறதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஒஸ்டின் பெர்னாண்டோ தேசிய பாதுகாப்பு கல்லூரியில் உரையாற்றினார்

ஒஸ்டின் பெர்னாண்டோ அவர்கள் முப்படை மற்றும் போலீஸ் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட தேசிய பாதுகாப்புக் கல்லூரி மாணவர்களுக்கு புவிசார் அரசியல் மற்றும் மூலோபாயம் பற்றிய முக்கியமான விரிவுரையை அண்மையில் ஆற்றினார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் சேனக பியன்வில நியமிக்கப்பட்டுள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வளர்ப்பதற்கு இந்திய
புதிய பிரதி உயர் ஸ்தானிகர் உறுதி

இலங்கைக்கான இந்திய புதிய பிரதி உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஆகஸ்ட் 11) இடம்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் வரட்சி நிலையை அரசியலாக்க வேண்டாம் – பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் தென்னகோன்

நாட்டில் தற்போது நிலவி வரும் வறட்சியான காலநிலை ஒரு பருவகால நிகழ்வு என்பதால் அதில் அரசியல் இலாபம் ஈட்ட எவரும் முயற்சிக்கக் கூடாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

லெப்டினன்ட் ஜெனரல் கொப்பேகடுவ மற்றும் ஏனைய போர்வீரர்களின்
31வது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது

மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன, மறைந்த அட்மிரல் மொஹான் ஜயமஹா மற்றும் பல இராணுவ அதிகாரிகளின் 31வது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 8) அனுசரிக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புத்தளம் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை மீண்டும் கடலுக்குள் அனுப்ப கடற்படையினர் உதவி

புத்தளம் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய மின்கி இனத்தைச் சார்ந்த திமிங்கலம் ஒன்று இலங்கை கடற்படையினரின் உதவியுடன் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 8) பாதுகாப்பாக கடலுக்குள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரின் ஒருங்கிணைப்பின் மூலம் மாங்குளம் பாடசாலை மாணவர்களுக்கு நூலகப் புத்தகங்கள் அன்பளிப்பு

மாங்குளம் மகா வித்தியாலயம் மற்றும் சண்முகரத்தினம் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் றோயல் கல்லூரியின் நன்கொடையாளர்களின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவத்தினரின் ஒருங்கிணைப்பின் மூலம் நூலகப் புத்தகங்களை நன்கொடையாகப் பெற்றுக்கொண்டனர்.