செய்திகள்
அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயம்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரெமித்த பண்டார தென்னகோன் இன்று (ஒக்டோபர் 05) கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) செயற்பாட்டு அறைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
கொரிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
கொரிய குடியரசின் தூதுவர் அதிமேதகு மியோன் லீ இன்று (ஒக். 5) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
அமைச்சக ஊழியர்களுக்கான மருத்துவ முகாம்
பாதுகாப்பு அமைச்சின் நலன்புரிச் சங்கம் அமைச்சின் ஊழியர்களுக்கான மருத்துவ முகாம் ஒன்றை இன்று (அக் 05) ஏற்பாடு செய்துள்ளது. இந்த இரண்டு நாள் மருத்துவ முகாம் இன்று காலை அமைச்சு வளாகத்தில் ஆரம்பமானது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இராணுவ வீரர்களுக்கு வெண்கலப் பதக்கம்
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சார்ஜென்ட் நதீஷா ராமநாயக்க அவர்கள் புதன்கிழமை (ஒக்டோபர் 4) பிற்பகல் 4 x 400 மீ அஞ்சல் ஓட்டத்தில் (பெண்கள்) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இராணுவப் படையினரால் தம்பலகமுவ பிரதேச வைத்தியசாலையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
தம்பலகமுவ பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான மருந்து களஞ்சியசாலை மற்றும் ஆய்வுகூட கட்டிடத்தில் ஏற்பட்ட அவசர தீ, இலங்கை இராணுவப் படையினரின் தலையீட்டில் அணைக்கப்பட்டுள்ளது.
75ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வளிமண்டலவியல் திணைக்களம்
வளிமண்டலவியல் திணைக்களத்தின் 75வது ஆண்டு நிறைவு விழா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களின் பங்குபற்றுதலுடன் திணைக்கள வளாகத்தில் இன்று (04) நடைபெற்றது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் இலங்கை இராணுவ வீராங்கனைக்கு வெள்ளி பதக்கம்
சீனாவில் நடைபெற்ற ‘ஆசிய விளையாட்டுப் போட்டியில்’ ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் படையின் நடிஷா லேகம்கே புதிய இலங்கை சாதனையுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
மழையுடன் கூடிய காலநிலை தொடரும்
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி
இஸ்லாம் மார்க்கத்தின் இறைத் தூதரான முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் இலங்கைவாழ் முஸ்லிம் மக்களுக்கும், உலக வாழ் முஸ்லிம் மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் ஓரளவுக்கு அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கடலோரப் பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகள்
கடலோர பாதுகாப்பு படையினரால் முன்னெடுப்பு
இலங்கை கடலோர பாதுகாப்பு படையினர் கடலோர சுற்றுச்சூழல் பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகளை அண்மையில் முன்னெடுத்துள்ளனர். குறித்த தூய்மைப்படுத்தும் பணியானது, ஆசிய கடலோர பாதுகாப்பு தலைமைகளின் செயற்குழு அமைப்பின் (HACGAM) கடற்கரை சுத்தப்படுத்தும் தினத்திற்கு இணையாக அதன் பிராந்திய பணியகங்களினால் பல்வேறு பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடலோர பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு பொப்பி மலர் அணிவிப்பு
இலங்கையின் ஓய்வு பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களுக்கு 'பொப்பி மலர்’ அணிவித்தனர்.
சேவைக் காலம் முடிந்து செல்லும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
கொழும்பில் உள்ள பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயதில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள கொமொடோர் முஹம்மட் ஷபிஉல் பாரி இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
நாட்டின் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் நிலைபேறான மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி நாட்டை வழிநடத்துவதே நோக்கமாகும்
தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்து, நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் பயனளிக்கும் நிலைபேறான மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதே தனது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகத் தலைவர்கள் முன்னிலையில் வலியுறுத்தினார்.
வரையறுக்கப்பட்ட ஸ்லிம் (SLIM) மருந்துகள் உற்பத்தி பொருட்கள் நிறுவனத்தினால் 500 முகக் கவசங்கள் நன்கொடையாக அன்பளிப்பு
வரையறுக்கப்பட்ட ஸ்லிம் (SLIM) மருந்துகள் உற்பத்தி பொருட்கள் நிறுவனத்தினால் மூடுபனி எதிர்ப்பு முகக் கவசங்கள் அடங்கிய பொதி ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.